பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஜல்லிக்கட்டு விசாரணை ஆறு மாதத்தில் முடியும்'
ஆணைய தலைவர் பேட்டி

கோவை : ''ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக, இன்னும் ஆறு மாதத்தில் விசாரணை முடிவடையும்,'' என, ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் கூறினார்.

ஜல்லிக்கட்டு,விசாரணை,ஆறு மாதத்தில்,முடியும்,ஆணைய தலைவர்,பேட்டி


ஜல்லிக்கட்டு அனுமதிக்க கோரி, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், 547 வழக்குகள்

தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. மேற்கு மண்டல விசாரணை ஆணைய தலைவராக ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, மூன்று நாட்கள் விசாரணை நடத்த நேற்று கோவை வந்த ராஜேஸ்வரன், நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், கூட்டுறவு தேர்தல் முறைகேடு தொடர்பாக, 248 புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் தொடர்பாக, கோவையில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில், 56 புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும். இங்கு விசாரணை முடிந்த பின், மற்ற மாவட்டங்களுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளேன். ஜல்லிக்கட்டு விசாரணை முடிய காலதாமதம் செய்யப்படுவதாக கூறுவது தவறானது. விசாரணை கமிஷன் ஒரு கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்பதை ஏற்க முடியாது.

Advertisement

விசாரணை ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்த பின், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை அளிப்பதோடு எங்கள் பணி முடிந்துவிடுகிறது. அறிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, அரசிடம் தான் கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, கோவை, சேலத்தில் விசாரணை முடிக்கப்பட்டு விட்டது.

சென்னையில், தினமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில், டிசம்பரில் விசாரணை முடியும். இன்னும், 1,956 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே முழு விசாரணை முடிய, இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இவ்வாறு, ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-நவ-201819:11:04 IST Report Abuse

Natarajan Ramanathanகடைசி பென்ச் கழிசடைகள்தான் வேறு போக்கிடம் இல்லாமல் வக்கீல் தொழிலுக்கே வருகின்றனர். ஒரு பிளம்பர், கார்ப்பென்டர், எலக்ரீஷியன், பெயிண்டர் அளவுக்குகூட நிலையான வருமானம் கிடையாது. பெண் வக்கீல் என்றால் திருமணம் கேள்விக்குறிதான். ஆனால் ரௌடித்தனம் செய்வதில் மட்டும் சூரப்புலிகள்.

Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
09-நவ-201819:00:28 IST Report Abuse

tamilvananஇந்த விசாரணையை முடிப்பதற்குள் சாட்சிகள் பலரும் இறந்து விடுவார்கள். இந்த கமிஷனின் நோக்கம் தான் என்ன? அது தான் போராட்டம் முடிந்து அரசே சட்டத்தை மாற்றி விட்டார்களே. பேசாமல் அரசு இந்த கமிஷனை மூடி விடலாம். செலவு மிஞ்சும்.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
09-நவ-201813:36:09 IST Report Abuse

siriyaarஇந்தியாவில் வக்கில் ஆகும் தகுதி பள்ளியில் கடைசி பெஞ்ச், படிப்பில் முடிந்த அளவிற்கு குறைந்த மதிப்பென். கல்லூரியில் ரொவ்டியிஷம். வக்கில் ஆனபின் நீதிபதி ஆக குருக்கு வழி திறமை அரசியல் தொடர்பு அடவடித்தணம். ஆனா இவங்க சொன்னா ஐஏஸ் கூட கேட்கனும். யாரவது ரஞ்சன் கோகாய் பத்தம் வகுப்பில் எத்தனை மார்க்குணு கோட்டா ரஞ்சண் அய்ய காண்டயிடூவார்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X