கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் விற்பனை, 'டல்' அடிப்பது ஏன்? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஏன்?
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் விற்பனை,
'டல்' அடிப்பது ஏன்?

ரேஷன் கடைகளை ஒட்டி திறக்கப்பட்ட, 'மினி சூப்பர் மார்க்கெட்' எனப்படும், சிறிய பல்பொருள் அங்காடிகளுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் விற்பனை, 'டல்' அடிப்பது ஏன்?


தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு மொத்த பண்டக சாலை உள்ளிட்டவை, ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன. இந்த கடைகளில், கட்டுப்பாட்டு பிரிவின் கீழ், அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில், குறிப்பிட்ட எடை அளவில் வழங்கப்படுகிறது.கட்டுப்பாடற்ற பிரிவில், மளிகை பொருட்கள், எண்ணெய் உள்ளிட்டவை, விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அவை, தரமற்று இருப்பதால், பலர் வாங்குவதில்லை.இதையடுத்து, ரேஷன் கடைகளை ஒட்டி, 100 சிறிய பல்பொருள் அங்காடிகளை துவக்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது. அதன்படி, தற்போது, 20 கடைகள் துவக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும், தலா, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மளிகை, அழகு சாதனம் உட்பட, 300 வகையான பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், வியாபாரம் சரியாக நடக்காததால், கூடுதலாக பல்பொருள் அங்காடிகளை துவக்க, கூட்டுறவு துறை தயக்கம் காட்டி வருகிறது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில் குறைந்த விலையில் வழங்கப்படும் பொருட்களுக்கான, மானிய தொகையை, கார்டுதாரர்களின், வங்கி கணக்கில் செலுத்துமாறு, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போதைக்கு, அத்திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த வாய்ப்பில்லை. இருப்பினும், மக்கள், பணம் கொடுத்து, மளிகை பொருட்களை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவே,

Advertisement

கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் துவக்கப்பட்டன.

மக்கள், என்னென்ன பொருட்களை விரும்பி வாங்குகின்றனர், எந்த சலுகைகளை எதிர்பார்க்கின் றனர் போன்றவை குறித்து ஆய்வு நடத்தி,அதற்கு ஏற்ப,அங்காடிகளை திறந்திருந்தால், மக்களின் ஆதரவு கிடைத்திருக்கும். அவசர கோலத்தில், திறக்கப்பட்டதால், ஒரு அங்காடியில், தினசரி விற்பனை, 10 ஆயிரம் ரூபாயை தாண்டுவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chitrarasan subramani - Chennai,இந்தியா
14-நவ-201806:17:53 IST Report Abuse

Chitrarasan subramaniவிற்பனை செய்யப்படும் தரமற்ற பொருட்கள் அதிக பட்ச சில்லரை விற்பனை விலையில் விற்கப்படுகிறது , ஆனால் அதைவிட தரமான பிரபல தயாரிப்புகள் MRP யை விட விலை குறைவாக வெளியில் கிடைக்கும் போது யார் இங்கு வந்து வாங்குவார்கள். முதலில் அதிகாரிகள் கள நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு என்பது பயணாளிகளுக்கு பலன் தரும் அமைப்பாக இருக்கவேண்டும்,அவர்களை சுரண்டும் அமைப்பாக மாறக்கூடாது.

Rate this:
nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா
09-நவ-201809:44:04 IST Report Abuse

nabikal naayakamஎல்லோரும் ஆன்லைனுக்கு மாறினால் அவர்களது வங்கிக்கணக்கில் போதுமான பணம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

Rate this:
09-நவ-201807:03:43 IST Report Abuse

ஆப்புஇரண்டே காரணங்கள். 1. மக்களிடம் நிஜமா காசு இல்ல. 2. எல்லோரும் ஆன் லைனுக்கு மாறிட்டாங்கோ... இரண்டுக்குமே காரணம் மஸ்தான் ஆட்சி....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X