பொது செய்தி

இந்தியா

டில்லியில் 3 நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு தடை

Added : நவ 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
டில்லி, கனரக வாகனங்கள், காற்று மாசுபாடு, சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் , டில்லி போக்குவரத்துத் துறை, காற்று மாசு, 
Delhi, heavy vehicles, air pollution, cargo trucks, tanker lorries, Delhi transport department, air pollution,சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசடைதல்,

புதுடில்லி : காற்று மாசுபாடு அபாய அளவை கடந்ததால் டில்லியில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றின் மாசு அதிகரித்து மிக அபாயகரமான நிலையை அடைந்துள்ள நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டில்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு,வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன.
டில்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டில்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
09-நவ-201812:59:23 IST Report Abuse
Amar Akbar Antony தில்லி நிர்வாகத்திற்கு கொஞ்சமும் முன்யோசனை இல்லை என்பது மீண்டும் தெளிவாகிறது:ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது ஒவொரு ஆண்டும் இது போலவே மாசு கூடுகிறது: பின்பு இம்மாதிரியான கட்டுப்பாடுகள் ஏன் கெஜ்ரிவாலின் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் போக்குவரவு திட்டம் நன்றாக இருந்தது என்றார்களே ஏன் மீண்டும் வரக்கூடாது? டில்லியில் காற்று மாசு ஆகவே தான் விருதுநகரில் பெங்களூருவில் திருநெல்வேலியிலெல்லாம் பட்டாசு குறிப்பிட்ட மணிக்கு மட்டும்தான் வெடிக்கவேண்டும்:ஆமா சொல்லிப்புட்டேன் அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
09-நவ-201809:34:55 IST Report Abuse
GMM வாகன பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பெட்ரோல், டீசல் உபயோகத்தை ஆராயலாம். செக்போஸ்ட் முன் வாகன புகை சோதனை செய்து, புகை limit குள் அனுமதி. அத்தியாவசிய சேவை தவிர, பிற இனங்களை இடம் மாற்றம் செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
09-நவ-201808:26:12 IST Report Abuse
vasumathi பைக் ஆட்டோ நிறைய புகை கக்குபவை. அவற்றை ஒரு வாரத்திற்கு நிறுத்தி பாருங்கள்.
Rate this:
Share this comment
raskoolu - மதுர,இந்தியா
09-நவ-201813:55:53 IST Report Abuse
raskooluஆட்டோ சரி. அதிகம் புகை கக்குறது பைக்கா, காரா வாத்யாரே? இங்க எமிஸ்ஸின் டெஸ்ட் செஞ்ச அனுபவம் உண்டா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X