இனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் நிலையம் துவக்கலாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் நிலையம் துவக்கலாம்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
E vehicle charging station,Electric Vehicles, Charging stations, இ வாகன சார்ஜ் நிலையம்,  மத்திய அரசு, எலக்ட்ரிக் வாகனங்கள், சார்ஜ் ஏற்றும் நிலையங்கள்,  மத்திய மின்துறை , மின்துறை,சிறு தொழில்கள், வேலைவாய்ப்புக்கள் , சார்ஜ் நிலையம், வாகன சார்ஜ் நிலையம்,  Vehicle Charging Station, Central Government,  small businesses,

புதுடில்லி : இனி தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவக்கலாம் என்ற முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவக்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் நாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்கஸ் போன்ற நிறுவனங்களும், ஓலோ, உபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.

ஒவ்வொரு 3 கி.மீ.,க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் உரிமம் பெறாமலேயே சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என அரசு கூறி இருப்பதன் மூலம் சிறு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டில்லி, புனே, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கியமான 9 நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது தவிர போக்குவரத்து நெரிசல் மிகுந்த 11 நெடுஞ்சாலைகள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு 25 கி.மீ.,க்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
10-நவ-201810:55:51 IST Report Abuse
Muthukrishnan,Ram எல்லா மாநிலத்திலயும் பேட்டரி கார் அனுமதி உண்டு ஏன் புதுசேரி / தமிழ்நாடு எத்தனை கிமி தூரம்? அங்கே அனுமதி உண்டு. இங்கே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Balaji Elumalai - chennai,இந்தியா
10-நவ-201809:21:18 IST Report Abuse
Balaji Elumalai தரமான உபகரணங்களும் வெளிப்படைத்தன்மையும் உண்மையான பொதுவுடமையும் இதில் அமைந்தால் உண்மையில் முன்னேற்றப் பாதையில் ஒரு மைல் கல்லாக இருக்கும்
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
11-நவ-201806:50:43 IST Report Abuse
கதிரழகன், SSLCபொது உடமைதாண்டா அடிப்படை வியாதி. புரியாத புள்ளையா இருக்கியே வீட்டை தொடச்சு தொடச்சு வெச்சுக்கிற இல்ல? டீவி மிக்சியிலேந்து தலைகாணி உறைக்கு கூட கவர் போட்டு பாத்துகிட்டு.. வெளியில வந்தா, ரயிலு பஸ்ஸு எல்லாம் பொது உடமை தான? எப்படி வெச்சுக்கற? "நான் நல்லா வெச்சாலும் இன்னொருத்தன் குப்பை போடுவான் ஆயினால நானே இங்க எச்சி துப்பறேன் " ன்னு போவ. அதுதான் பொது உடமை. தனி உடமை, வியாபாரம், முதல் லாபம் இதுதான் அடிப்படை. இதை எடுத்துட்டா, போஸ்ட்டாபீஸ் மாதிரிதான் இருக்கும். எல்லாமே. சாணக்கியர் சொன்னாரு "அரசன் வியாபாரம் செஞ்சா குடிமகன் பிச்சை எடுப்பான் " ன்னு அத ஒழுங்கா வெளங்கிகிட்ட ஒரே தலைவர் ராஜாஜி தான். நீ தெரிஞ்சிக்க வேண்டியது நெறைய இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
10-நவ-201801:04:17 IST Report Abuse
கதிரழகன், SSLC எப்படியாவது பேட்டரி கார் கொண்டுவந்து அரபியை ஒரே மாட்டா அழிக்கனுமினிட்டு அமேரிக்கா காரன் இருக்கான். அதனால அமெரிக்க கார்போரேட்டு எல்லாம் சகாய விலையில சார்ஜு கொடுப்பானுவ. டிரம்பு மோடி ரெண்டுபேரும் சேந்து நம்ம தலைமுறைக்குள்ள அரபி அப்புறம் அரபி அடிமை எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சா சுகமா இருக்கும். ஐயப்பன் மேல கைவெச்சாங்க இல்ல. தொலைஞ்சாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X