ஜனநாயகத்திற்காக போராடுங்கள்: மக்களுக்கு ரணில் அழைப்பு

Added : நவ 09, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 Sirisena, Ranil Wickramasinghe, Mahinda Rajapaksa, இலங்கை, ரணில் விக்ரமசிங்கே,  சிறிசேனா, ஜனநாயகம் போராட்டம், இலங்கை அதிபர் சிறிசேனா , இலங்கை அரசியல் , மகிந்தர ராஜபக்சே, 
Sri Lanka,  Democracy protest, Sri Lankan President Sirisena, Sri Lanka Politics,

கொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்படுவதாக அக்.,26 அன்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்தர ராஜபக்சே பிரதமராக தொடர்வார் என அறிவித்த சிறிசேனா, நவம்பர் 16 வரை இலங்கை பார்லி.,யை முடக்குவதாக அறிவித்தார். பின்னர் நவ.,14 ம் தேதி பார்லி., கூட்டப்பட உள்ளதாக அறிவித்தார். பார்லி., கூட்டம் துவங்குவதற்கு முன் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காண வேண்டும் என அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், அதிகார மாற்றம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் இந்த திடீர் முடிவை எதிர்த்து போராடி வருவதற்கு மக்களுக்கு எனது நன்றி. தற்போது வரை கடந்த 13 நாட்களாக இலங்கையின் ஜனநாயகம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கருப்பு நேரம். மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-நவ-201808:07:57 IST Report Abuse
Srinivasan Kannaiya நீதி வெல்லும்... இனவெறியர்கள்.குருதி வெறியர்கள் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
09-நவ-201819:31:44 IST Report Abuse
Paranthaman புத்தர் முன் பற்கள் இலங்கயில் புத்த மடத்தில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
09-நவ-201816:16:27 IST Report Abuse
Tamil Selvan \\\கொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.///. இரண்டு லச்சம் ஈழத்தமிழர்கள் தமிழர்கள் கொத்து கொத்தாக கொத்தெறி குண்டுகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதா?. அப்பொழுது இதே மாதிரி ஒரு அழைப்பை ராக்ஷச பக்சேவுக்கு எதிராக ஒரு அழைப்பை விடுத்து இருக்கலாமே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X