அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தே.மு.தி.க., முதன்மையான கட்சி என்பதை நிரூபிப்போம்'

Added : நவ 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 'தே.மு.தி.க., முதன்மையான கட்சி என்பதை  நிரூபிப்போம்'

பண்ருட்டி: 'வரப்போகும் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் எதுவானாலும் தே.மு.தி.க., முதன்மையான கட்சி என பாடுபட்டு நிரூபிப்போம்' என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டியில், கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:தே.மு.தி.க., கட்சியை தன் சொந்த பணத்தில் விஜயகாந்த் நடத்தி வருகிறார். துரோகிகள் கூட அவரை குறை சொல்ல முடியாது. தமிழகத்தில் ஊழல் ஆறாக ஒடும் ஆட்சியை புறம் தள்ள வேண்டும். துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மீதான புகாரை விசாரிக்க நியமித்த லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி., முருகன் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது.பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கக் கூடிய, டி.ஜி.பி., ராஜேந்திரன் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. டி.ஜி.பி., மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள முதல்வர் பழனிசாமி மீதும், சி.பி.ஐ., வழக்கு உள்ளது.முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கும் கவர்னர் மீது, நிர்மலாதேவி வழக்கு உள்ளது. தீபாவளிக்கு மதுபான விற்பனை, 602 கோடி ரூபாய் சாதனை என கூறுவது கேவலமான அரசு என்பதைக் காட்டுகிறது.தே.மு.தி.க.,வை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தி வரலாறு படைத்துள்ளார் விஜயகாந்த். தே.மு.தி.க., தமிழகத்தில், மூன்றாவது கட்சி என கூறுகின்றனர்.ஜெ., இறப்பிற்கு பின், அ.தி.மு.க., பல்வேறு துண்டுகளாக உடைந்து போய் கிடக்கிறது. தி.மு.க., வில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு அதிகரித்து, ஆர்.கே.நகர் தொகுதியில் டிபாசிட் இழந்து கிடக்கிறது.வரப்போகும் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் எதுவானாலும், தே.மு.தி.க., முதன்மையான கட்சி என பாடுபட்டு நிரூபிப்போம்.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-201815:01:11 IST Report Abuse
Bhaskaran அடுத்து நிறைய letterpadai அச்சடிச்சு வச்சுக்கோங்க வாசன் கட்சிமாதிரி அறிக்கையிலேதான் நீங்க இருக்கறமாதிரி காட்டிக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-நவ-201818:03:19 IST Report Abuse
Malick Raja சும்மா வாய்ச்சவுடாளுக்கு வேண்டுமானால் சொல்லலாம் சொல்லவேண்டிய கட்டாயமும் கூட .. தேமுதிகத்தான் நாளை ஆதிசி அமைக்கும் என்றாலும் யாரும் ஏதும் சொல்ல மாட்டார்கள் . லதா அவர்கள் கடந்தகால பேச்சுக்கள் எல்லாம் இன்னும் எள்ளோராலும் நினைவில் வைத்துக்கொள்ளவே இவர் பேச்சுக்களை தொடர்கிறார் தேமுதிக ஒருநாக்கட்டான் பூச்சி .. நாகப்பாம்பை பார்த்து படம் எடுப்பேன் என்று சொல்வது போன்ற வார்த்தை ஜாலங்கள் அரசியல் வாதிக்கு அவசியமே .கூவுவதை யாரும் பெரிதாகவே கருதுவதில்லை
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
10-நவ-201815:15:10 IST Report Abuse
சுந்தரம் பாமக மற்றும் திமுக வை குடும்ப கட்சி என்று வர்ணித்த அரசியல் மேதை விஜயகாந்த் பற்றி கொஞ்சம் இந்தம்மா பேசினா நல்லது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X