அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பணம் தருவோரை
வெற்றி பெற செய்யாதீர்கள்

தர்மபுரி : ''ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை, தேர்தலில் வெற்றி பெற செய்யாதீர்கள்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார்.

மக்கள் நீதி மய்யம்,கமல்,பணம்,தருவோரை,வெற்றி, பெற,செய்யாதீர்கள்,பேச்சு


மக்கள் நீதி மய்யத்தின், 'மக்களுடனான பயணம்' என்ற நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் கமல் பேசியதாவது: 'நல்லம்பள்ளி' என்ற

இந்த ஊரில், அரசு சார்பில் நல்ல பள்ளி, ஒன்று கூட இல்லை. ஊர் முழுக்க மதுக்கடைகள் உள்ளன. அரை நுாற்றாண்டு காலம், தமிழகத்தில், மது ஆறாக ஓடுகிறது. மது ஒழிப்பை, ஒரே நாளில் சாத்தியமாக்க முடியாது.

பணம் மூலம், உங்கள் ஓட்டுகளை பெற்று, உங்களை குத்தகைக்கு எடுத்ததாக எண்ணுவோர், இனியும் வெற்றி பெறக் கூடாது. உங்கள் ஓட்டை பணத்துக்கு விற்க வேண்டாம். விரதம் இருப்பது போல் எண்ணி, ஒரே முறை எங்கள் கட்சிக்கு ஓட்டளியுங்கள். தமிழகம் விழாக்கோலம் காணும்.

நாங்கள், மக்களின் மனங்களை தொட்டு விட்டோம். மக்களுக்கு நன்மை செய்ய,

Advertisement

உங்களை நம்பி, குரலை உயர்த்தி விட்டேன். எங்கள் கரங்களுடன், உங்கள் கரங்களும் சேர்ந்தால், இது எல்லாம் சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அவர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய ஊர்களில், மக்களிடையே பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-201819:34:00 IST Report Abuse

ஆப்புஎலக்‌ஷனுக்கு முன்னாடியே பணம் இல்லேங்குறாரே....ஜெயிச்சுட்டா ஒண்ணுமே இல்லைம்பாரு....நீங்க ஜெயிச்சு ஒண்ணும் பண்ணப் போறதில்லை. ஏற்கனவே 15 லட்சம் போடுவோம்னு சொன்னவரை நம்பி ஓட்டுப் போட்டு நொந்து போயிருக்காங்க...இதுல நீங்க வேறே...எல்லாம் எங்க தலையெழுத்து.

Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
10-நவ-201818:20:28 IST Report Abuse

srinivasanசொர்க்கம் மதுவில் ...என்று ஆட்டம் போட்டவர்

Rate this:
மெய்கண்டான் - Chennai,இந்தியா
10-நவ-201815:55:24 IST Report Abuse

மெய்கண்டான்பலே ஆனால் காசு கொடுக்காமல் ஒரு ஓட்டுக்கூட பெயராது என்பது உண்மை. இன்று சர்க்கார் படத்தை பார்ப்பது போல தான் அன்று முதல்வன், இந்தியன் போன்ற படங்களை பார்த்து வெற்றிப்படங்கள் ஆக்கினார்கள். ஆனால் அதன் பிறகு இரு பெரும் கட்சிகளும் தமிழகத்தில் இலவசம், கோட்டர் & கோழி பிரியாணி, கைநிறைய காசு, சாப்பாட்டுக்கு மளிகை எல்லாம் கொடுத்து இரண்டு முறை ஆட்சி செய்தும் முடித்துவிட்டார்கள். திருந்த வேண்டியது மக்களும், சட்டமும் தான்.ஆனால், இந்த இரண்டு பிரிவின் மீதும் யாராலும் எந்த கட்டுப்பாடும் வைக்க முடியாது. ஏனென்றால் அவை இரண்டுமே இருக்கவேண்டிய நிலையில் இல்லை எண்பது தான் கசப்பான உண்மை. 'ஆண்டான் அடிமை', இந்திய மக்களின் மனதில் ஆணித்தரமாக விதைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பதவி ஆசை இருந்தால் கொஞ்சம் பணத்தை வெளியிடுங்கள், இல்லையென்றால் முன்னுரையே உங்கள் கட்சிக்கு முடிவுரை ஆகி விடக்கூடும். "எங்களை திருத்தவா பக்குறீங்க? எங்க திருத்துங்க பார்ப்போம்" இப்படிக்கு திருவாளர் பொது ஜனம்.இடை தேர்தலுக்கு தாங்க... ஓ சர்க்கார்ல விஜய் நல்லா நடிச்சிருந்தார் இல்ல?

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X