திப்பு ஜெயந்திக்கு எதிராக போராட்டம் : கர்நாடகாவில் ஏராளமானோர் கைது

Updated : நவ 10, 2018 | Added : நவ 10, 2018 | கருத்துகள் (71)
Advertisement
HD Kumaraswamy ,Tipu Jayanti,  Karnataka, கர்நாடகா, திப்பு ஜெயந்தி, பா.ஜ., திப்பு ஜெயந்தி போராட்டம், முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா,  கொடவா தேசிய கழகம், பாரதிய ஜனதா , காங்கிரஸ்,  BJP, Tipu Jayanti protest, Chief Minister Kumaraswamy, Deputy Chief Minister Parameshwara, Kodava National Council, Bharatiya Janata, Congress,

பெங்களூரு : கர்நாடகாவில் அரசு சார்பில் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு நடத்தும் விழாவை முதல்வரே புறக்கணித்துள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் காங் - மஜத கூட்டணி அரசு சார்பில் இன்று திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வரா ஆகியோர் அறிவித்துள்ளனர். திப்பு ஜெயந்திக்கு எதிராக மடிகேரியில் பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. பா.ஜ., கொடவா தேசிய கழகம் உள்ளிட்ட அமைப்புக்கள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
திப்பு ஜெயந்திக்கு எதிரான போராட்ட அறிவிப்பு காரணமாக மடிகேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திப்பு ஜெயந்தி குறித்து பாஜ., மாவட்ட செயலாளர் சஜ்ஜல் கிருஷ்ணா கூறுகையில், திப்பு ஜெயந்தி என்ற பெயரில் மக்கள் பணத்தை அரசு வீணடிக்கிறது. திப்பு ஒன்றும் போர் வீரர் அல்ல. அவர் ஏராளமான இந்துக்களை கொன்றதுடன், கோயில்களை சேதப்படுத்தி உள்ளார். இது போன்ற ஒருவரை எதற்காக புகழ வேண்டும்? இது ஓட்டுவங்கி அரசியல் மட்டுமே. குடகில் அனைவரும் இந்த கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றார்.
மடிகேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Change is inevi. - Perth,ஆஸ்திரேலியா
13-நவ-201809:58:12 IST Report Abuse
Change is inevi. , தமிழ் நாட்டின் சிறப்பே ஒற்றுமை தான் அதையும் அடுத்தவனின் பேச்சை கேட்டு கெடுக்காதீர்கள். முஸ்லீம் நண்பன் இல்லாத இந்து கிறிஸ்தவன் இல்லை, இந்து கிறிஸ்தவன் இல்லாத முஸ்லீம் இங்கு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
10-நவ-201821:02:24 IST Report Abuse
ராஜேஷ் காஸ்மீரில் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் மீது கலெறிந்த ஆறாயிரம் வழக்குகளை , மெஹபூவா அரசு வாபஸ் பெற்றுக்கொண்டுதான் ஆட்சியே இருந்து வெளிவந்தது . ராணுவத்தினர் மீது கல்லெறியலாம் பிரிவினைவாதிகள் அவர்களுக்கு எந்த ஆபத்துவந்தாலும் மத்திய மாநில அரசுகள் கல்லெறிபவர்களை காப்பாற்றும். ஒருவரை புடிக்கவில்லை என்று அமைதியாக போராடும் சபரிமலை பக்தர்கள் மீது ரெண்டாயிரம்விளக்கு , தீபாவளிக்கு வெடிவெடித்தல் மூவாயிரம் வழக்கு என்று இந்த மன்னனின் மைந்தர்களை வாட்டிய ஆங்கில மிலேச்சர்கள் கூட்டம் இறைவனால் அளிக்கப்படுவீர்கள்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
10-நவ-201819:02:10 IST Report Abuse
ரத்தினம் அப்போஸ்தலன், மத நல்லிணக்கம்னா, எல்லாரையும் நல்லவங்கன்னு நினைக்கணும், அடுத்த சாமிய கும்பிடுறவன நம்ப மதத்துக்கு ரொட்டியை காமிச்சு கூப்பிடுறது, கத்திய காமிச்சு கூப்பிடுறது இல்ல . அப்பிடிடி செஞ்சவங்களுக்கு விழா எடுக்கிறது தப்பு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X