இலங்கை பார்லி., கலைப்பை எதிர்த்து வழக்கு Dinamalar
பதிவு செய்த நாள் :
திருப்பம்!
இலங்கை பார்லி., கலைப்பை எதிர்த்து வழக்கு
ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு

கொழும்பு: 'இலங்கை பார்லிமென்டை, அதிபர் சிறிசேன கலைத்தது, சட்ட விரோதம்; இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்' என, முன்னாள் பிரதமர், ரணில் விக்ரமசிங்கேயின், ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் அரசியல் குழப்பம், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கை, பார்லிமென்ட், கலைப்பு, வழக்குஇலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில், அமைச்சராக இருந்தவர் சிறிசேன. 2015ல் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு, சிறிசேன வெற்றி பெற்றார். பார்லிமென்டில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை. இதையடுத்து, சிறிசேனவின், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து, ஆட்சியமைத்தன.பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை, சிறிசேன நியமித்தார். ஆட்சி அமைந்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அதிபர் சிறிசேனவுக்கும், பிரதமர் விக்ரமசிங்கேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது, அதிபர் சிறிசேனவை கொல்ல, சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விக்ரமசிங்கே கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது, அதிபர் சிறிசேன பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

எதிர்ப்பு :

இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது. இதையடுத்து, அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, கடந்த மாதம், 26ல் வாபஸ்

பெற்ற சிறிசேன, பிரதமர் பதவியில் இருந்து, ரணில் விக்ரம சிங்கேவை நீக்கினார். மேலும், ராஜபக்சேவின், இலங்கை மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார், சிறிசேன. இதனால், பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 'பெரும்பான்மை பலம் இல்லாத ராஜபக்சேவை, பிரதமராக நியமித்தது செல்லாது' என விக்ரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகர் ஜெயசூர்யாவும், 'ராஜபக்சே, சட்டப்பூர்வ பிரதமர் இல்லை' என தெரிவித்தார்.சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும், அதிபர் சிறிசேன முடிவுக்கு, கடும் விமர்சனங்கள் எழுந்தன. ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என தெரிவித்த, ரணில் விக்ரம சிங்கே, பார்லிமென்டில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 'நோட்டீஸ்' அளித்தார்.ஆனால், பார்லிமென்டை நவ., 16 வரை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேன, பின், 14-ம் தேதி, பார்லிமென்ட் கூடும் என, அறிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறும் நோக்கில், அதிக எம்.பி.,க்கள் உள்ள, தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெற, அதன் தலைவர் சம்பந்தனுடன், அதிபர் சிறிசேன பேசினார். ஆனால், அதற்கு மறுத்துவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு, 'ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்' என, தெரிவித்தது. இதனால், பெரும்பான்மை பலம் இல்லாமல், பிரதமர் பதவியில் ராஜபக்சே நீடிப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக, அதிபர் சிறிசேன அறிவித்தார். மேலும், 'அடுத்த ஆண்டு, ஜன., 5ல் பார்லிமென்ட் தேர்தல் நடக்கும்' என, அறிவித்தார்.

குழப்பம் :

பார்லிமென்டின் பதவிக்காலம், 2020 ஆகஸ்ட் மாதம் வரை இருந்த நிலையில்,முன் கூட்டியே கலைக்கப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், இலங்கையில் அரசியல் குழப்பம், உச்சக் கட்டம் அடைந்துள்ளது. இதற்கிடையில், விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நேற்று அவசரமாகக் கூடி, ஆலோசனை நடத்தியது. அதன்பின், கட்சி வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது: பார்லிமென்ட் பதவிக்காலம் முடிவதற்கு, இரண்டு ஆண்டுக்கு முன்பே, அதை, அதிபர் சிறிசேன கலைத்தது,

Advertisement

சட்ட விரோதம். இதை எதிர்த்து, கட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். நீதிமன்றங்களின் மீது, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்தின் ஆட்சியை, நீதிமன்றங்கள் நிலை நிறுத்தும் என, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவருமான சமரவீரா கூறுகையில், ''அதிபர் சிறிசேனவின் சர்வாதிகாரத்தனத்தை எதிர்த்து, நீதிமன்றத்திலும், பார்லிமென்டிலும், தேர்தலிலும், போராடுவோம்,'' என்றார்.
முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறுகையில்,''மக்களின் முடிவை அறிய, தேர்தல் ஒன்றுதான் சிறப்பான வழி; நிலையான ஆட்சியமைய, மக்கள் ஓட்டு அளிப்பர்,'' என்றார்.

'கவனித்து வருகிறோம்'

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, அமெரிக்க அதிபர் மாளிகையின் உயர் அதிகாரி, வாஷிங்டனில் கூறியதாவது:இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் கவலையளிக்கிறது. நிலைமையை, அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையில், ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அங்கு நிலையான ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthigeyan - haputale,இலங்கை
11-நவ-201817:12:21 IST Report Abuse

karthigeyanமஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி சிறிசேனவுடன் கூட்டணி அமைக்கவில்லை ..இருவரும் ஒரே கட்சி தான்.. ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த சிலர் ஜனாதிபதி சிறிசேனவின் கட்சிக்கு ஆதரவு கொடுத்தனர் ..ஆயினும் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை ஆசனங்களை (113 ) பெறமுடியாமல் போனமையே ..இந்த இழுபறிக்கு காரணம்

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
11-நவ-201815:30:28 IST Report Abuse

dandyஹி ஹி ஹி இலங்கை கல்வி ..பொருளாதாரம் இவைகளில் ஆசியாவில் ஒரு முன்னணி நாடு ..

Rate this:
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
11-நவ-201813:49:36 IST Report Abuse

B. இராமச்சந்திரன் அடுத்து நீதி மன்றத்தையும் கலைச்சிட போறார்..

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X