அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தயார்!
பழனிசாமி - ஸ்டாலின் இடையே பலப்பரீட்சை
20 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்துக்கு திட்டம்
இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க., - தி.மு.க., வியூகம்

இடைத்தேர்தல் நடக்கவுள்ள, 20 தொகுதிகளில், முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோர், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இடைத்தேர்தல், பழனிசாமி, ஸ்டாலின்


கருணாநிதி மறைவால், திருவாரூர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் மறைவால், திருப்பரங்குன்றம் தொகுதிகள், ஏற்கனவே காலியாக இருந்தன. தெலுங்கானா உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தலுடன், இத்தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. 'பருவமழை காலம் துவங்கியுள்ளதால், தேர்தலை தள்ளிப்போட வேண்டும்' என,


தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப் பட்டது. இதை ஏற்று, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இதனால், 20 சட்டசபை தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த தொகுதிகளுக்கு, டிசம்பர் இறுதியில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என, கருதப்படுகிறது.ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., உள்ளது. ஆட்சியை கவிழ்க்க, பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, தி.மு.க., கணக்கு போடுகிறது. இதனால், இடைத்தேர்தல் குறித்த பரபரப்பு, மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த தேர்தல், முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இடையே நடக்கும் பலப்பரீட்சையாக கருதப்படுகிறது. இதனால், இரு தரப்பும், தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகின்றன. 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை, அ.தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும், அந்தபட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இவர்கள், விரைவில் தொகுதிகளில் முகாமிட்டு, தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். முதல்வர் பழனிசாமியும், இத்தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு திட்டங்களை

Advertisement

அறிவிக்க, தயாராகி வருகிறார். இது, ஒருபுறம் இருக்க, தி.மு.க.,வும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது. லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களை, அக்கட்சி தலைமை, சமீபத்தில் அறிவித்தது. இவர்கள், தங்கள் லோக்சபா தொகுதியில் உள்ள, இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை துவக்கி உள்ளனர். முதற்கட்டமாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, பூத் கமிட்டி நியமனம் உள்ளிட்ட பணிகளில், அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.விரைவில், இத்தொகுதிகளுக்கு சென்று, தேர்தல் பணிகளை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
19-நவ-201806:40:07 IST Report Abuse

Guna Gkrvமுதலில் புயல் நிவாரண த்தை ஒழுங்கா பார்க்க சொல்லுங்கள் அதுக்கு அப்புறம் தேர்தல் பத்தி பேசலாம் இப்பபோயி எவனாவது ஓட்டுன்னு போன கண்டிப்பா அடிவிழுகும்

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
11-நவ-201815:45:27 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்மேடையில் பார்த்து படிக்கும் அறிவாளிக்கும் மேடையில் பேசும் புத்திசாலிக்கும் போட்டியா?......... பார்க்காமலே பேசும் அளவு வளரவேண்டும் .........அப்புறம் தான் போட்டியே............. .

Rate this:
11-நவ-201810:37:16 IST Report Abuse

kulandhaiKannanஇந்த இடைதேர்தல்கள் பற்றி கவலையேபடாதவர்கள் யாரென்றால் மாஜி ம.ந.கூவினர்தான்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X