பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
திட்டம்!
புகையில்லா வாகன போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு...
தொழில் துவங்க, 'லைசென்ஸ்' பெற தேவை இல்லை

புதுடில்லி: சாதாரண மக்களும், 'எலக்ட்ரிக்' வாகனங்கள் எனப்படும், இ - வாகனங்களுக்கு, சார்ஜ் ஏற்றும் நிலையங்களை துவங்கி, தொழில் முனைவோர் ஆகும் வாய்ப்பு, மத்திய அரசு திட்டம் மூலம் உருவாகி உள்ளது. இதன் மூலம், நாட்டில், புகையில்லா வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புகையில்லா வாகன போக்குவரத்துநாட்டில் பெருகி வரும் வாகன பெருக்கத்தால், காற்று மாசு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தி, இயக்கப்படும் வாகனங்களில் இருந்து, அதிக புகை வெளியேறுவதால், எரிவாயுவை பயன்படுத்தி, இயக்கப்படும் வாகனங்கள், அறிமுகம் செய்யப்பட்டன. ஆட்டோக்கள், கார்களில், பெட்ரோலிய எரிவாயு, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. எனினும், 'இ - வெஹிகில்ஸ்' எனப்படும், எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், காற்று மாசை முற்றிலும் தவிர்க்க முடியும் என்பதால், இவ்வகை வாகனங்கள் விற்பனையை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


சில மாநிலங்களில், எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதன் மூலம், பொது போக்குவரத்து நடைபெறுகிறது. இவ்வகை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிக்கு, 'சார்ஜ்' செய்ய, சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தேவை.பெட்ரோலிய எரிபொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்த, 'லைசென்ஸ்' பெற வேண்டிய நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்ற, அதற்கான சார்ஜ்ஏற்றும் நிலையங்களை நிறுவி, எவ்வகை லைசென்சும் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான விதிகள் இதுவரை வகுக்கப்படாததால், சாதாரண நபரும், சார்ஜ் ஏற்றும் நிலையங்களை துவக்கி, எளிதில் தொழில் முனைவோர் ஆகலாம் என்ற நிலை உள்ளது. எனினும், இவ்வகை நிலையங்களில் சார்ஜ் செய்யப்படும் மின்சாரத்திற்கு, எவ்வளவு விலை நிர்ணயம் செய்யலாம் என்பது குறித்து, மத்திய மின்சார அமைச்சகம், அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளது.
'குறைந்தபட்ச மற்றும் உச்சபட்ச விலை நிர்ணயம் குறித்த வழிகாட்டுதல், விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ, 'லைசென்ஸ்' இன்றி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களை திறந்து, அதை தொடர்ந்து நடத்தலாம்.

ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் :

மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்களும், உபர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்களும், எலக்ட்ரிக் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இவர்கள், வழங்கும் மின்சாரத்திற்கான விலையை, அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயிக்கும் வகையில்

Advertisement

திட்டமிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு, 3 கி.மீ.,க்கும், ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையம் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனி நபர்கள் யார் வேண்டுமானாலும், லைசென்ஸ் பெறாமலேயே, சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என்பதால், சிறு தொழில் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.

11 தேசிய நெடுஞ்சாலைகள் :

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை, புனே நகரங்கள்; கர்நாடக மாநிலம், பெங்களூரு; குஜராத் மாநிலம், ஆமதாபாத்; தேசிய தலைநகர், புதுடில்லி உள்ளிட்ட, முக்கிய, ஒன்பது நகரங்களில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பொறுப்பு, பொதுத்துறை நிறுவனங்களான, என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதிக வாகன போக்குவரத்து காணப்படும், 11 தேசிய நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு, 25 கி.மீ.,க்கும், ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையம் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Samy - chennai,இந்தியா
11-நவ-201816:48:40 IST Report Abuse

Visu Samy25 Km கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் போடும் அளவுக்கு வாகனங்கள் இல்லை

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
11-நவ-201810:38:21 IST Report Abuse

Devanatha Jagannathanஅரசு இந்த விஷயத்தில் வெளிப்படையான அறிக்கை கொடுக்க வேண்டும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-நவ-201805:00:30 IST Report Abuse

Manianதீ இல்லை, புகை இல்லை தீவிரமாய் பார்க்குது பார் என்று ஒரு கவிதாய்- ஆகாவே, எல்லோரும் சைக்கிள் ஓட்டினால் மாசு குறையும், (ஆள்) எடை குறையும், பெடறோல் செலவு குறையும், போலீசு வாசுல் குறையும்" இங்கிலாந்து பொன்னர் அந்நாடுகளில் சோலார் பேட்ட்ரீ பொருத்திய ச்சைகள் தற்போது உற்பத்தியாகின்றன. சோலார் கொடிய வைத்து, அதிலிருந்து மிஞ்சாரம் தயாரித்து சைக்கிளை படடலாம் - இப்போ சைக்கிள் ரிக்ஷண மேலே க ரை இருக்குறமாதிரி- இல்லடி சோலார் குல்லாய் (ஜப்பானிலே இருக்குதாம்) போட்டுக்கிட்டு ஜாலியா அப்படிகிட்டே சைக்கிள் ஓடடலாமே. ...

Rate this:
Visu Samy - chennai,இந்தியா
11-நவ-201810:11:21 IST Report Abuse

Visu Samyமுதலில் இத்தொழிலில் ஒரு லாபம் பார்க்க வேண்டுமென்றால் அது மின் வாகனங்களின் சிக்கனத்தை பாதிக்கும் இரெண்டு நேரம் பிடிப்பதால் பெரும் லாபம் கிடைக்காது ( தொழிலை நடத்த தேவையானா) ஆகவே தேறாத ஒரு தொழிலைத்தான் அனுமதியின்றி தொடங்கி நாசமாக சொல்கிறார்கள் இது பெட்ரோல் பங்கில் காற்று போல கருத வேண்டும் அல்லது பேட்டரி களை வாடகைக்கு விடும் நிலையங்களை அனுமதிக்கலாம்

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-நவ-201805:04:15 IST Report Abuse

Manianவடக்கை பேட்டரி கடைகளும் வரலாம். சைக்கிளை பூட்டி போட்டு பெட்டிரியை தனியா கழட்டிகிட்டுதான் போகணும். இல்லே மடக்கு சைக்கிளு கூடவே பேதிரியையும் எடுத்து போகலாம். சைக்கிளிங் விகிலி காமில் பாருங்க. ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X