சென்னை: ''தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம், ஐக்கிய பொருளாதார மன்றம் சார்பில், வட்ட மேஜை மாநாடு, நேற்று சென்னையில் நடந்தது.
முன்னணி மாநிலம் :
துணை முதல்வர் பன்னீர்செல்வம், மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், சென்னையில், ஐக்கிய பொருளாதார மன்றத்தின், இரண்டாவது வர்த்தக மாநாட்டில், தமிழகத்தில் தொழில்
முதலீடு செய்ய வாருங்கள் என, அழைப்பு விடுத்தேன். தற்போது, தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் வந்துள்ளீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும், தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில், தமிழகம், உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. இங்கு, படித்த திறமையான இளைஞர்கள் உள்ளனர். தமிழகம், நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
நாட்டின், இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது. அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிக தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மின் மிகை மாநிலமாக உள்ளது. தொழில் முதலீடு செய்ய, தமிழகம் உகந்த மாநிலம். உள்கட்டமைப்பு வசதி, முதலீடு, நிதி மூலதனம் போன்றவற்றை ஈர்ப்பதாக உள்ளது. 'செபி' அமைப்பின் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம் உருவாக்கி உள்ளோம். இதன் வழியே, உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு, நிதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முதலீடு செய்து, வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான, எங்கள் பயணத்தில், நீங்களும் பங்கேற்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் பேசியதாவது:
தொழில் செய்ய உகந்த மாநிலம், தமிழகம். இங்கு, சட்டம் - ஒழுங்கு சிறப்பான முறையில்
உள்ளது. தேவையான, திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். 2015ல், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில், 98 நிறுவனங்கள், தொழில் துவங்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.
சலுகைகள் :
இதில், 64 நிறுவனங்கள் தொழில் துவங்கி விட்டன. மீதியுள்ள நிறுவனங்கள், தொழில் துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.அடுத்த ஆண்டு, ஜன., 23, 24 தேதிகளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டிற்கு வர வேண்டும்.தமிழகத்தில், தொழில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், சலுகைகளையும், அரசு வழங்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (26)
Reply
Reply
Reply