'ஜெ.,க்கு 'ஸ்லோ பாய்சன்'கொடுத்து கொன்ற கும்பல்': அமைச்சர் சீனிவாசன் 'திடுக்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,க்கு 'ஸ்லோ பாய்சன்'கொடுத்து கொன்ற கும்பல்' :
அமைச்சர் சீனிவாசன் 'திடுக்'

நிலக்கோட்டை: ''சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு, கொடுக்க கூடாத மருந்துகளை கொடுத்து, ஸ்லோ பாய்சன்' மூலம் கொலை செய்தது ஒரு கும்பல்,'' என நேற்று நிலக்கோட்டையில் நடந்த தொகுதி, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசினார்.


கூட்டத்தில் சீனிவாசன் பேசியதாவது:

தினகரனும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர்;

முடியவில்லை. ஒரு வழக்கில், தினகரனும், ஜெயலலிதாவும் சிக்கியிருந்தனர்.

ஜெயலலிதா, அமைச்சர் சீனிவாசன்


அந்த வழக்கில், தன்னை விடுவித்துக்கொண்டு, ஜெயலலிதாவை சிக்க வைத்தவர் தான் தினகரன். இது தெரிந்ததும், தினகரனை வீட்டை விட்டு துரத்தினார். ஜெயலலிதா.வீட்டிலிருக்கும் போது, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியை அதிகரித்து, அதற்கு எந்த மருந்தையெல்லாம் கொடுக்கக் கூடாதோ

Advertisement

அவற்றை கொடுத்து, 'ஸ்லோ பாய்சன்' என்று சொல்வார்களே, அப்படி மெதுவாக விஷம் ஏற்றி கொலை செய்தது ஒரு கும்பல். அந்த கும்பலுடன், நிலக்கோட்டை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்கதுரையும் சென்றுள்ளார். இந்த ஆட்சிக்கு துரோகம் செய்த அவருக்கு, தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
14-நவ-201809:51:30 IST Report Abuse

Sitaraman Munisamyஅந்த கும்பல் எது என்பதை தெளிவு படுத்த அமைச்சருக்கு அவ்வளவு பயமா ? ஜெயா அப்போல்லோ வில் இருந்தபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள். இவ்வளவு நாட்கள் கழித்து இப்போது ஞானோதயம் வர கரணம் 20 தொகுதிகளின் தேர்தல்தானே. தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் அமைச்சராக இருப்பது நமது கொடுமை.

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14-நவ-201803:01:21 IST Report Abuse

meenakshisundaramஆமா .தினகரன் இந்த விஷயத்திலே கருத்தே சொல்லலியே ?

Rate this:
Dominic Rajendran - mumbai,இந்தியா
13-நவ-201810:20:34 IST Report Abuse

Dominic Rajendranதீண்டத்தகாதவர்களை, சமூகத்தில் நலிவுத்தோரை உயர்வான பாதையில் நடக்கச் செய்தது திராவிட கட்சிகள். அது கண்டு பொறுக்கமாட்டாதவர்கள் இன்னல் அடையவேண்டாம். தமிழ்நாட்டில் சாதியோடு வாழ்வேன் என்பவர் வாழுங்கள், மத்தவர்களும் வாழட்டும் .

Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X