வளர்ச்சி பணிகளில் முறைகேடு அம்பலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி பணிகளில் முறைகேடு அம்பலம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வளர்ச்சி பணிகளில் முறைகேடு அம்பலம்

கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி

வால்பாறை:வால்பாறை நகராட்சியில், எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடக்கும் நிலையில், முறைகேடுகள் நடப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் தனியார் எஸ்டேட் வசம் உள்ளதால், இங்கு நகராட்சி சார்பில் அதிக அளவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.வால்பாறை நகர், சோலையார் நகர், ரொட்டிக்கடை, அட்டகட்டி உள்ளிட்ட வார்டுகளில் மட்டுமே வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது.மூன்று ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம், எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடக்கிறது. குறிப்பாக, ரோடு விரிவுபடுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல், நடைபாதை, ரோடு சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இதில், வால்பாறை நகரில் பல இடங்களில் ரோடு விரிவாக்கம் என்ற பெயரில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. ஏற்கனவே இருந்த பழைய கல்லை வைத்தும், ஆற்று மணலை எடுத்தும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால், ஒப்பந்தப்பணிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடக்கிறது.பொதுமக்கள் கூறுகையில், மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி பணத்தை, வளர்ச்சிப் பணி என்ற பெயரில் நுாதனமாக கொள்ளையடிக்கின்றனர். நகராட்சியில் தற்போது நடக்கும் அனைத்து பணிகளிலும் அதிகாரிகளின் ஆசியோடு முறைகேடு நடக்கிறது. பணிகளில் தரமில்லை.பணிகளை கண்காணித்து, தவறுகளை தடுக்க வேண்டிய உயர் அதிகாாரிகள், வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். அதிகாரிகள் அனைவரும் கவனிப்புக்கு உள்ளாவதால், கண் துடைப்பு ஆய்வு மட்டுமே நடக்கிறது,' என்றனர்.அனைத்து மட்டத்திலும் 'செலவு'பெயர் வெளியிட விரும்பாத ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், 'ஆளுங்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது போக மீதி உள்ள தொகையில் தான் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. கமிஷன் கொடுக்காவிட்டால், ஒப்பந்தப்பணிகள் கிடைக்காது என்பதால் வேறு வழியின்றி, இந்த பணிகளை செய்கிறோம். அனைத்து மட்டத்திலும் 'செலவு' இருப்பதால், மீதமுள்ள நிதியில், பணிகளை தரமாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V R natarajan - Tamil nadu trippur district gudimangalam panchayat union,இந்தியா
11-நவ-201807:17:50 IST Report Abuse
V R natarajan Virugalpatti to anikkadavu highways road both sides are huge bushes travelling is difficult remove it public issue trippur district gudimangalam panchayat union Tamil nadu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X