ஊரெல்லாம் கஞ்சா விற்பனை தாராளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரெல்லாம் கஞ்சா விற்பனை தாராளம்

Added : நவ 11, 2018
Advertisement

கேள்விக்குறியாகும் இளைஞர்கள் எதிர்காலம்

கோட்டூர்:கோட்டூர் சுற்றுப்பகுதிகளில் நாளுக்குநாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது.இளைஞர்களை அதீத ஆபத்துக்கு அழைத்து செல்லும் போதைப்பொருட்களாக கஞ்சா விளங்குகிறது. மலிவான விலையில், தாராளமாய் கிடைப்பதால், இளைஞர்கள் கஞ்சா புகைக்கு அடிமையாகின்றனர். இதை பயன்படுத்தி கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது.தற்போது, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது.ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட, ஆழியாறு ஆற்றுப்பாலம், பூங்கா பகுதி, அங்கலக்குறிச்சி, மஞ்சநாயக்கனுார் பகுதிகளில் தங்கு தடையின்றி விற்பனையாகிறது.கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட, சேரன் நகர், பழனியூர் பகுதிகளிலும், பொன்னாலம்மன்துறை, மயிலாடுதுறை, நரிக்கல்பதி கிராமப்பகுதிகளிலும் கஞ்சா அமோகமாக விற்கின்றனர்.தேனி, கம்பம் சுற்றுப்பகுதிகளில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். கல்லுாரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடக்கிறது.சிறுசிறு பொட்டலங்களாக, 100, 160 ரூபாய்க்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா விற்பனை ஏஜன்ட்களாகவும் உள்ளனர். அவர்கள் மூலம், போலீசாருக்கு மாத மாமூல் கிடைப்பதால், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.கஞ்சா இருப்பு வைத்திருக்கும் குடோன், மொத்த வியாபாரிகள் குறித்து போலீசாருக்கு தெரிந்தாலும், கண்துடைப்புக்காக கடைநிலையில் இருக்கும் சிலரை கைது செய்து, சொற்ப அளவில் கஞ்சா பறிமுதல் செய்கின்றனர்.'இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இங்கும், அப்படித்தான்!பொள்ளாச்சி கோட்டூர் ரோடு, நேரு நகர் அருகே பாலம் அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கிழக்கு போலீஸ் எஸ்.ஐ., ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் ரோந்து சென்று, கஞ்சா விற்பனை செய்த மரப்பேட்டை தன்னாசியப்பன் கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரனை, 55, கைது செய்தனர். அவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X