மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார்:மாட்டு வண்டி மணல் குவாரியை உடனே திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பணிக்கு எளிதாக, மலிவான மணல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.வானமாதேவி உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள குவாரிகளிலும் மாட்டு வண்டியை உடனடியாக அனுமதிக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர குழு உறுப்பினர் ஏழுமலை தலைமை தாங்கினார். பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு மாதவன், மாவட்ட செயற்குழு மருதுவாணன், மாவட்ட செயற்குழு சுப்புராயன், நகர செயலர் அமர்நாத், மாவட்டக்குழு பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X