தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு

விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் பாசன வசதி கிடைக்கும்

-நமது சிறப்பு நிருபர்-

விழுப்புரம் அருகே தளவானுார்-எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டப்பட உள்ளது. இதன் மூலம், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் 2200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான, தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து, ஓசூர் வழியாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 432 கி.மீ., துாரம் பயணம் செய்து, கடலுார் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.அணைகள் விவரம்இதில், கர்நாடகாவில் 112 கி.மீ., மற்றும் தமிழகத்தில் 320 கி.மீ., துாரம் தென்பெண்ணை ஆறு செல்கிறது. ஒசூர் அருகே பாகாளா என்ற பகுதியில் தென்பெண்ணை ஆறு தமிழகத்திற்குள் வருகிறது. இதில், 128 வது கி.மீ., துாரத்தில் ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை, 190 வது கி.மீ., துாரத்தில் கிருஷ்ணகிரி அணை, 307 வது கி.மீ., துாரத்தில் சாத்தனுார் அணை உள்ளது. மேலும், 365 வது கி.மீ., துாரத்தில் திருக்கோவிலுார் அணைக்கட்டு, 384 வது கி.மீ., துாரத்தில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு மற்றும் 423 வது கி.மீ., துாரத்தில் சொர்ணாவூர் அணைக்கட்டு அமைந்துள்ளது.விவசாயிகள் கோரிக்கைதிருவண்ணாமலை மாவட்ட எல்லையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்குள் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தென்பெண்ணை ஆறு நுழைகிறது. அங்கிருந்து விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் 106 கி.மீ., துாரத்திற்கு செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மூன்று அணைக்கட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் பருவமழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட எல்லைகளில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு அமைக்க வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகளும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இங்கு தடுப்பணை அமைத்தால் இருமாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.தற்காலிக தடுப்பணைகடந்தாண்டு டிச., மாதம் பெய்த பருவ மழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டம் தளவானுார் கிராம மக்கள் அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் மண் மேடு அமைத்து 720 மீ., துாரத்திற்கும், 8 அடி உயரத்திற்கு தற்காலிக தடுப்பணை கட்டினர். இதன் மூலம், தென்பெண்ணை ஆற்றில் இருந்து தளவானுார் அருகே பிரியும் மலட்டாற்றிற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.புதிய அணைக்கட்டுஇந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு அமைக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பிற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, 25.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் 376.60 மீ., நீளத்திற்கு புதிய அணைக்கட்டு மற்றும் 800 மீ., நீளத்திற்கு வெள்ள தடுப்பு கரை அமைக்கப்படுகிறது.இந்த புதிய அணைக்கட்டில் தென்பெண்ணை ஆற்றின், நடுவில் கரை அமைத்து 6 ஷெட்டர்கள் அமைக்கப்படுகிறது. இங்கு ஆற்றின் தரை பகுதிக்குமேல் 10 அடி 4 அங்குளம் உயரத்திற்கு கரை அமைக்கப்படவுள்ளது. இந்த உயரத்திற்கு தண்ணீர் நிரம்பினால் மட்டுமே 6 ஷெட்டர்கள் திறந்துவிடப்படும். இதன் பின், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வெளியேறி, சொர்ணாவூர் அணைக்கட்டிற்கு செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து, எனதிரிமங்கலம் பகுதியில், கால்வாய் வெட்டி 2 ஷெட்டர் அமைத்து, தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது. இங்கு தண்ணீர் தேங்குவதால், மலட்டாற்றிற்கு தண்ணீர் தானாக செல்லும்.2200 ஏக்கர் பாசனம்இங்கு புதிய அணைக்கட்டு அமைவதால், விழுப்புரம் மாவட்டத்தில் தளவானுார், கொங்கர கொண்டான், திருப்பாச்சனுார் மற்றும் கடலுார் மாவட்டத்தில் ஏனதிரிமங்கலம், உளுந்தம்பட்டு, ஆவியானுார் உள்ளிட்ட 87 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். மேலும், தென்பெண்ணை ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்பட்டு, இரு மாவட்டங்களிலும் 2200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஏரிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, முப்போகமும் விவசாய சாகுபடி அதிகரிக்கும்.தளவானுார்-எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு அமைக்கப்படுவதால் விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கனவு தற்போது நனவாக உள்ளது. இந்த புதிய அணைக்கட்டு அமைக்க டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
13-நவ-201820:50:43 IST Report Abuse
rmr இதெற்கு காரனும் அன்புமணியின் போராட்டமே அவர் தான் அங்கு ஆணை கட்ட வேண்டும் என்று போராடினர் மற்றும் நீர் மேலாண்மை சேமிப்பு போன்ற பல விஷயங்களை மக்களிடம் கொன்று சென்றதே அன்புமணி தான் . இந்த ஆணை எப்போ கெட்டி முடிக்கப்படும் என்று அரசு சொல்லுமா ?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
13-நவ-201818:26:43 IST Report Abuse
Ray அணையை கடலூரில் கட்டலாம்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-201806:01:30 IST Report Abuse
Bhaskaran விரைவில் பணிகள் நல்லபடியாக முடிந்து விவசாயம் செழிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X