திருந்திய நெல் சாகுபடி: 560 ஹெக்டேருக்கு மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருந்திய நெல் சாகுபடி: 560 ஹெக்டேருக்கு மானியம்

Added : நவ 11, 2018
Advertisement

கரூர்: மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் இதுவரை, 560 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். குளித்தலை வட்டம், இரணியமங்கலம், வலையபட்டி, சத்தியமங்கலம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில், மானியம் பெற்று பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் நிலத்தை, கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து மானியங்களும் முழுமையாக சென்றடைவதால், அதிக அளவில் விவசாயம் நடக்கிறது. முன்பு நெற்பயிர் நாற்றுகளின் வயது, 30 நாட்கள், ஏக்கருக்கு, 30 கிலோ விதை தேவைப்பட்டது. தற்போதைய திருந்திய நெல் சாகுபடி முறையில், ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை, 20 நாட்கள் போதுமானதாக உள்ளது. உற்பத்தி அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் இரு மடங்காகிறது. நடப்பாண்டில், 8,750 ஹெக்டேரில் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 6,207 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், ஏக்கருக்கு 5,000 ரூபாய் வீதம், 560 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. பழைய பாசன முறையில் கரும்பு சாகுபடி செய்ததால் குறைந்த மகசூலே கிடைத்தது. நீடித்த, நிலையான சாகுபடி முறையில், கரும்பு சாகுபடி செய்வதால், முன்பில்லாத வகையில் கரும்புகள் உயரமாகவும், 12 தூர் கொண்டு வளர்வதாலும் ஏக்கருக்கு, 60 முதல், 65 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இத்திட்டத்தில், ஒரு பரு கரணை நடவு செய்வதற்கு ஏக்கருக்கு, 4,500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X