சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

போராடுபவர்கள் விவசாயிகள் தானா?

Added : நவ 11, 2018
Share
Advertisement
நம் நாட்டில், விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள்; விவசாயம், பெருமைக்குரிய தொழில். இன்று, நேற்றல்ல; காலம், காலமாக விவசாயத்திற்கு, இங்கு மிகுந்த மரியாதை உள்ளது. 'சோற்றில் நாம் கை வைக்க, சேற்றில் விவசாயிகள் கால் வைக்க வேண்டும்' என்பதை, அனைவரும் உணர்ந்துள்ளனர். அதனால் தான், விவசாயிகளுக்கு பாதகம் என்றால், ஜாதி, மத, இன பேதமின்றி, அனைவரும் எதிர்ப்பு குரல்
போராடுபவர்கள் விவசாயிகள் தானா?

நம் நாட்டில், விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள்; விவசாயம், பெருமைக்குரிய தொழில். இன்று, நேற்றல்ல; காலம், காலமாக விவசாயத்திற்கு, இங்கு மிகுந்த மரியாதை உள்ளது. 'சோற்றில் நாம் கை வைக்க, சேற்றில் விவசாயிகள் கால் வைக்க வேண்டும்' என்பதை, அனைவரும் உணர்ந்துள்ளனர். அதனால் தான், விவசாயிகளுக்கு பாதகம் என்றால், ஜாதி, மத, இன பேதமின்றி, அனைவரும் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.ஆனால், விவசாயிகள் என்ற பெயரில், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்கள், உண்மையான விவசாயிகள் தானா, அவர்களின் போராட்டங்களால், ஏழை விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனம்!விவசாயம் தான், நாட்டின் முதுகெலும்பு என்ற நிலையில், நம் நாட்டின் எந்த அரசும், விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணிக்க முயற்சிப்பதில்லை. அப்படி செய்தால், அந்த அரசு, மக்களால் தோற்கடிக்கப்படும் என்பதில், அவற்றிற்கு அச்சம் எப்போதும் உள்ளது.அதே சமயம், சில தருணங்களில், விவசாயிகளின் போராட்டங்கள் பாதை மாறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான துவேஷங்கள் முன் நிற்கும் போது, விவசாயிகள், ஒரு வித, அரசியல்வாதிகளாக பார்க்கப்படுகின்றனர். அத்தகைய சூழலில், தினமும் வயலுக்கு சென்று, நீர் பாய்ச்சி, பயிர்களின் ஒவ்வொரு, மி.மீ., வளர்ச்சியையும் பார்த்து பூரிக்கும் விவசாயிகளா, தங்களின் விளைச்சலை வீணாக்குகின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.தங்களின் உழைப்பில், பூமித்தாய் கொடையாக வழங்கிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும், விவசாயிகளின் நண்பர்களான, கால்நடைகள் அருளிய அமிர்தமான பாலையும், சாலையில் கொட்டி, போராட்டம் நடத்துபவர்கள், உண்மையான விவசாயிகள் தானா, என்ற கேள்வியும் எழுகிறது.சாதாரண விவசாயிகள் என்ற போர்வையில் மறைந்துள்ள, பெரிய பண்ணை முதலாளிகளும், அவர்களின் பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளும் தான், விவசாயிகளாக உருவெடுத்து விட்டனரோ என, எண்ணத் தோன்றுகிறது.அத்தகையோர் கையில் கிடைத்துள்ள ஆயுதம் போல, உண்மையான விவசாயிகளின் தற்கொலைகள் அமைந்துள்ளன. வறுமை, கடன், பயிர் சேதம், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால், விவசாயம் தோற்கும் போதும், விவசாயி தோற்கும் போதும், அவர்களுடன் சேர்ந்து, சாதாரண பொது ஜனங்களும், ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.பெரிய பண்ணையாளர்களும், அதிக விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக உள்ள செல்வந்தர்களும், அந்த அனுதாபத்தையும், அதனால் எழும் உணர்ச்சி கொந்தளிப்பையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால், உண்மையான, ஏழை விவசாயியின் கோரிக்கை நிறைவேறாமலே போய் விடுகிறது.ஏழை விவசாயிகள் முன்னேற்றத்திற்காக, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள, அறிவிக்கும் திட்டங்கள், பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கு தான் பயனளிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.குறிப்பாக, 'கிசான் கிரெடிட் கார்டு, விவசாய பயிர் காப்பீடு, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு, சந்தையில் இணைய வர்த்தக முறை, விளைபொருட்களின் குறைந்த பட்ச விலை நிர்ணயம், போன்றவற்றின் பலன்கள், ஏழை விவசாயிகளை சென்றடையாததற்கு காரணம் என்ன?இடைத்தரகர்களால், அப்பாவி விவசாயி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை, நல உதவிகள், திட்டங்கள் என்னவாயிற்று... அவை ஏன், சாதாரண விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை என்ற கேள்விக்கும் சரியான பதிலில்லை.விவசாயிகள் என்ற போர்வையில் ஔிந்திருக்கும் பெரும் நிலச்சுவான்தாரர்களும், கோடீஸ்வரர்களும், அரசியல் அமைப்பினரும் தான், உண்மையான விவசாயிகளுக்கு பலன்கள் கிடைக்க விடாமல் செய்கின்றனரோ என, எண்ணத் தோன்றுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, சிறு விவசாயிகள் கூட்டமைப்பு என்ற பெயரில், பல கிராமங்களில் சங்கங்கள் இருந்தன. சாதாரண விவசாயிகளும், விவசாய கூலிகளும், அதன் உறுப்பினர்களாக இருந்தனர்.அவை இருந்த இடத்தில், இப்போது, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களும், அரசியல் அமைப்புகளும் இருப்பதை காண முடிகிறது. சாதாரண, ஏழை விவசாயிகளின் குரல் அடக்கப்பட்டது போலவே, அவர்களின் சங்கங்களும் மறைந்து விட்டன. சிறு விவசாயிகளை முன்னிறுத்தி, அரசியல் கட்சிகள் போன்ற பெரிய அமைப்பினர் நடத்தும் போராட்டங்களால், சிறு விவசாயிகள், எழுந்திருக்க முடியாமல், அடிபட்டு போயுள்ளனர்.கேரளாவில், பல ஆண்டுகளுக்கு முன், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, நம்பூதிரிபாட், முதல்வராக இருந்த போது, அரசு நில உடைமைகள், சாதாரண, ஏழை விவசாயிகளுக்கு பரவலாக்கப்பட்டன. அதிக விவசாய நிலத்தை, உடமையாக வைத்திருந்தவர்களை எதிர்த்து, போராட்டம் நடத்த, விவசாய ஊழியர்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும், அப்போது ஊக்குவிக்கப்பட்டனர்.இதன் உண்மையான நோக்கம் எட்டப்படாமல், முடிவு, மோசமான நிலையை ஏற்படுத்தியது. விவசாய துறையில் வெறுப்புணர்ச்சியும், வன்முறையும் ஏற்பட்டது; விவசாயிகளின் மத்தியில் பிளவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் அரசு, கேரளாவில் மாறிய போது, வன்முறையை துாண்டிய, நிலச் சீர்திருத்த திட்டங்கள் கைவிடப்பட்டன.இப்போதைய நிலையில், விவசாயிகள் என, மூன்று பிரிவினர் உள்ளனர். சாதாரண, ஏழை விவசாயிக்கு, விளை நிலத்தை குத்தகைக்கு விட்டு, மகசூல் தோறும், குத்தகைத் தொகையை வசூலிப்பவரும், விவசாயி என்றே அழைக்கப்படுகிறார்.இரண்டாவது பிரிவில், விவசாய வேலைக்கு, கூலி ஆட்களை வைத்து, விவசாயம் செய்யும் பணக்காரர்கள் உள்ளனர். இவர்கள், நிலத்தில் இறங்கி வேலை செய்வதில்லை; ஆனாலும், விவசாயி என்றே அழைக்கப்படுகிறார்.மூன்றாவதாக, தனக்கு சொந்தமான, சிறிய அளவிலான நிலத்தில், அன்றாடம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்கள் தான், நிலத்தில் இறங்கி உழைப்பவர்கள்; ஆண்களும், பெண்களும் இதில் உள்ளனர்.இவர்களுக்கு, விளைச்சல் தான் வருமானம். தினசரி அடிப்படையில், கூலி கிடைக்கும்; நிரந்தர வேலை கிடையாது; வேலை கிடைக்காத நாட்களில், கூலி கிடையாது. விவசாயத்தை கவனிக்கா விட்டால், மகசூல் பொய்த்துப் போகும்.விவசாயிகள் என்ற பிரிவில், மிகவும் அல்லல் படுபவர்கள், இந்த மூன்றாவது பிரிவினர் தான். இவர்கள் தான், நவீன விவசாயத்தால், பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். சொட்டு நீர் பாசனம், கனரக இயந்திரங்கள் பெருமளவு பயன்பாடு போன்றவற்றால், தினமும் வேலை, கூலி, கூடுதல் மகசூல் கிடைக்காமல், இந்த பிரிவினர் தான் பாதிக்கப்படுகின்றனர்.இவர்களில் சிலர் தான், வறுமை, ஏழ்மை, பயிர் நாசம் போன்ற, பல காரணங்களால், தவறான முடிவெடுத்து, தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இவர்களை சுட்டிக் காட்டி தான், பெரும் நிலச்சுவான்தாரர்கள், போலி கண்ணீர் வடிக்கின்றனர்; அரசின் அனுதாப நடவடிக்கைகளால், பெரிய அளவில் லாபம் பார்க்கின்றனர்.கோடிக்கணக்கில் உள்ள, இந்த மூன்றாவது பிரிவினர் தான், உண்மையான விவசாயிகள். இவர்கள் முன்னேறினால் தான், நாடு முன்னேறும். ஆனால், நாட்டில் நடக்கும் நிகழ்வுகள், வேறு மாதிரி உள்ளன.விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வரும் போது, நாட்டின் மனசாட்சி குலுங்குகிறது; நாடே, சோகத்தில் வருந்துகிறது. தற்கொலையின் காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், விவசாயி தற்கொலைக்கு அடிப்படை காரணம், கடன் சுமை மற்றும் கடன் வழங்கிய, கந்து வட்டிக்காரர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என்பது தெளிவாகிறது.எனினும், கந்து வட்டிக்காரர்களை ஒழிக்கவோ, விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கவோ, உறுதியான நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால், அதில், 'கோல்மால்' செய்யும், செல்வந்த விவசாயிகள், லாபம் சம்பாதித்து விடுகின்றனர்.விவசாயிகளுக்கு, விவசாயத்திற்காக, குறைந்த வட்டியில் கடன் கொடுக்க பல அரசு திட்டங்கள் உள்ளன. ஆனாலும், நிலத்தை அடமானம் வைத்தால் தான், பெரிய தொகை கடன் கிடைக்கும். அடமானம் வைக்க, கீழ் மட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்புவதில்லை.வீட்டில் திருமணம், குழந்தைகளின் படிப்பு அல்லது மருத்துவம் போன்ற தேவைகளுக்கு, பணம் தேவைப்படும் போது, கந்து வட்டிக்காரர்களை விவசாயிகள் அணுகுகின்றனர். அதை தவிர்க்க, அரசு நடவடிக்கை அவசியம்.விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெறும் போது, அரசு பயந்து போகிறது. போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கிறது.மேலும், விவசாயிகளை தற்காலிகமாக திருப்தி செய்யும் விதமாக, பல சலுகைகளையும், அவசரமாக அறிவித்து, விவசாயிகளின் போராட்டத்தை கைவிட வைக்கிறது. ஆனால், அதன் பலன், சாதாரண விவசாயிகளை சென்றடைவதில்லை.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை போல, விவசாயிகளும், போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அரசு மற்றும் அது சார்ந்த அமைப்பினர் போராடினாலும், அவர்களின் சம்பளம், வருவாயில் பாதிப்பு ஏற்படுவதில்லை.ஆனால், விவசாயிகள் போராடினால், நஷ்டம் அவர்களுக்கு தான். அந்த போராட்டங்களால் கிடைக்கும் பலன்கள், பெரிய அளவில் விவசாயம் பார்க்கும் நிலச்சுவான்தாரர்களுக்கே கிடைக்கிறது. இதை, பெரும்பாலான விவசாயிகள் உணர்வதில்லை. உணர்ந்தாலும், அவர்களின் குரல், வௌியே கேட்பதில்லை.அதற்கு காரணம், சிறு விவசாயிகளின் அமைப்புகள், செயல் இழந்து போனது தான். எனவே, வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற வல்லுனர்கள் உதவியுடன், உண்மையான விவசாயிகளுக்கான, நலத்திட்டங்களை, அரசுகள் கண்டறிந்து, அவற்றை முழு மூச்சாக செயல்படுத்த வேண்டும்; உண்மையான விவசாயிகள் முன்னேற வேண்டும்.இதற்காக, ஏழை விவசாயிகளுக்கு எளிதாக கடனுதவி, பயிர் சேத கணக்கீடு, உடனுக்குடன் இழப்பீடு, முன்பணம் இல்லாத பயிர் காப்பீடு, விளை பொருட்களுக்கு தங்கு தடையற்ற விற்பனை வாய்ப்பு, இடைத்தரகர்கள் இல்லாத நிலை, விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.கிராமங்கள் தோறும், சமூக ஆர்வலர்கள், நல்லெண்ண அமைப்புகள் மூலம், விவசாய நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், எத்தனை காலம் ஆனாலும், விவசாயம் பொய்க்காது. விவசாயமும் மேன்மை அடையும்; விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்ள மாட்டார்கள். அரசு செய்யுமா?இ-மெயில்: nsvenkatchennai@gmail.comபோன்: 044-4351 1945நம் நாட்டில், விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள்; விவசாயம், பெருமைக்குரிய தொழில். இன்று, நேற்றல்ல; காலம், காலமாக விவசாயத்திற்கு, இங்கு மிகுந்த மரியாதை உள்ளது. 'சோற்றில் நாம் கை வைக்க, சேற்றில் விவசாயிகள் கால் வைக்க வேண்டும்' என்பதை, அனைவரும் உணர்ந்துள்ளனர். அதனால் தான், விவசாயிகளுக்கு பாதகம் என்றால், ஜாதி, மத, இன பேதமின்றி, அனைவரும் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.ஆனால், விவசாயிகள் என்ற பெயரில், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்கள், உண்மையான விவசாயிகள் தானா, அவர்களின் போராட்டங்களால், ஏழை விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனம்!விவசாயம் தான், நாட்டின் முதுகெலும்பு என்ற நிலையில், நம் நாட்டின் எந்த அரசும், விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணிக்க முயற்சிப்பதில்லை. அப்படி செய்தால், அந்த அரசு, மக்களால் தோற்கடிக்கப்படும் என்பதில், அவற்றிற்கு அச்சம் எப்போதும் உள்ளது.அதே சமயம், சில தருணங் களில், விவசாயிகளின் போராட்டங்கள் பாதை மாறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான துவேஷங்கள் முன் நிற்கும் போது, விவசாயிகள், ஒரு வித, அரசியல்வாதிகளாக பார்க்கப்படுகின்றனர். அத்தகைய சூழலில், தினமும் வயலுக்கு சென்று, நீர் பாய்ச்சி, பயிர்களின் ஒவ்வொரு, மி.மீ., வளர்ச்சியையும் பார்த்து பூரிக்கும் விவசாயிகளா, தங்களின் விளைச்சலை வீணாக்குகின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.தங்களின் உழைப்பில், பூமித்தாய் கொடையாக வழங்கிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும், விவசாயிகளின் நண்பர்களான, கால்நடைகள் அருளிய அமிர்தமான பாலையும், சாலையில் கொட்டி, போராட்டம் நடத்துபவர்கள், உண்மையான விவசாயிகள் தானா, என்ற கேள்வியும் எழுகிறது.சாதாரண விவசாயிகள் என்ற போர்வையில் மறைந்துள்ள, பெரிய பண்ணை முதலாளிகளும், அவர்களின் பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளும் தான், விவசாயிகளாக உருவெடுத்து விட்டனரோ என, எண்ணத் தோன்றுகிறது.அத்தகையோர் கையில் கிடைத்துள்ள ஆயுதம் போல, உண்மையான விவசாயிகளின் தற்கொலைகள் அமைந்துள்ளன. வறுமை, கடன், பயிர் சேதம், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால், விவசாயம் தோற்கும் போதும், விவசாயி தோற்கும் போதும், அவர்களுடன் சேர்ந்து, சாதாரண பொது ஜனங்களும், ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.பெரிய பண்ணையாளர்களும், அதிக விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக உள்ள செல்வந்தர்களும், அந்த அனுதாபத்தையும், அதனால் எழும் உணர்ச்சி கொந்தளிப்பையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால், உண்மையான, ஏழை விவசாயியின் கோரிக்கை நிறைவேறாமலே போய் விடுகிறது.ஏழை விவசாயிகள் முன்னேற்றத்திற்காக, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள, அறிவிக்கும் திட்டங்கள், பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கு தான் பயனளிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.குறிப்பாக, 'கிசான் கிரெடிட் கார்டு, விவசாய பயிர் காப்பீடு, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு, சந்தையில் இணைய வர்த்தக முறை, விளைபொருட்களின் குறைந்த பட்ச விலை நிர்ணயம், போன்றவற்றின் பலன்கள், ஏழை விவசாயிகளை சென்றடையாததற்கு காரணம் என்ன?இடைத்தரகர்களால், அப்பாவி விவசாயி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை, நல உதவிகள், திட்டங்கள் என்னவாயிற்று... அவை ஏன், சாதாரண விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை என்ற கேள்விக்கும் சரியான பதிலில்லை.விவசாயிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் பெரும் நிலச்சுவான்தாரர்களும், கோடீஸ்வரர்களும், அரசியல் அமைப்பினரும் தான், உண்மையான விவசாயிகளுக்கு பலன்கள் கிடைக்க விடாமல் செய்கின்றனரோ என, எண்ணத் தோன்றுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, சிறு விவசாயிகள் கூட்ட மைப்பு என்ற பெயரில், பல கிராமங்களில் சங்கங்கள் இருந்தன. சாதாரண விவசாயிகளும், விவசாய கூலிகளும், அதன் உறுப்பினர்களாக இருந்தனர்.அவை இருந்த இடத்தில், இப்போது, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களும், அரசியல் அமைப்புகளும் இருப்பதை காண முடிகிறது. சாதாரண, ஏழை விவசாயிகளின் குரல் அடக்கப்பட்டது போலவே, அவர்களின் சங்கங்களும் மறைந்து விட்டன. சிறு விவசாயிகளை முன்னிறுத்தி, அரசியல் கட்சிகள் போன்ற பெரிய அமைப்பினர் நடத்தும் போராட்டங்களால், சிறு விவசாயிகள், எழுந்திருக்க முடியாமல், அடிபட்டு போயுள்ளனர்.கேரளாவில், பல ஆண்டுகளுக்கு முன், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, நம்பூதிரிபாட், முதல்வராக இருந்த போது, அரசு நில உடைமைகள், சாதாரண, ஏழை விவசாயிகளுக்கு பரவலாக்கப்பட்டன. அதிக விவசாய நிலத்தை, உடமையாக வைத்திருந்தவர்களை எதிர்த்து, போராட்டம் நடத்த, விவசாய ஊழியர்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும், அப்போது ஊக்குவிக்கப்பட்டனர்.இதன் உண்மையான நோக்கம் எட்டப்படாமல், முடிவு, மோசமான நிலையை ஏற்படுத்தியது. விவசாய துறையில் வெறுப்புணர்ச்சியும், வன்முறையும் ஏற்பட்டது; விவசாயிகளின் மத்தியில் பிளவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் அரசு, கேரளாவில் மாறிய போது, வன்முறையை துாண்டிய, நிலச் சீர்திருத்த திட்டங்கள் கைவிடப்பட்டன.இப்போதைய நிலையில், விவசாயிகள் என, மூன்று பிரிவினர் உள்ளனர். சாதாரண, ஏழை விவசாயிக்கு, விளை நிலத்தை குத்தகைக்கு விட்டு, மகசூல் தோறும், குத்தகைத் தொகையை வசூலிப்பவரும், விவசாயி என்றே அழைக்கப்படுகிறார்.இரண்டாவது பிரிவில், விவசாய வேலைக்கு, கூலி ஆட்களை வைத்து, விவசாயம் செய்யும் பணக்காரர்கள் உள்ளனர். இவர்கள், நிலத்தில் இறங்கி வேலை செய்வதில்லை; ஆனாலும், விவசாயி என்றே அழைக்கப்படுகிறார்.மூன்றாவதாக, தனக்கு சொந்தமான, சிறிய அளவிலான நிலத்தில், அன்றாடம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்கள் தான், நிலத்தில் இறங்கி உழைப்பவர்கள்; ஆண் களும், பெண்களும் இதில் உள்ளனர்.இவர்களுக்கு, விளைச்சல் தான் வருமானம். தினசரி அடிப்படையில், கூலி கிடைக்கும்; நிரந்தர வேலை கிடையாது; வேலை கிடைக்காத நாட்களில், கூலி கிடையாது. விவசாயத்தை கவனிக்கா விட்டால், மகசூல் பொய்த்துப் போகும்.விவசாயிகள் என்ற பிரிவில், மிகவும் அல்லல் படுபவர்கள், இந்த மூன்றாவது பிரிவினர் தான். இவர்கள் தான், நவீன விவசாயத்தால், பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். சொட்டு நீர் பாசனம், கனரக இயந்திரங்கள் பெருமளவு பயன்பாடு போன்றவற்றால், தினமும் வேலை, கூலி, கூடுதல் மகசூல் கிடைக்காமல், இந்த பிரிவினர் தான் பாதிக்கப்படுகின்றனர்.இவர்களில் சிலர் தான், வறுமை, ஏழ்மை, பயிர் நாசம் போன்ற, பல காரணங்களால், தவறான முடிவெடுத்து, தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இவர்களை சுட்டிக் காட்டி தான், பெரும் நிலச்சுவான்தாரர்கள், போலி கண்ணீர் வடிக்கின்றனர்; அரசின் அனுதாப நடவடிக்கைகளால், பெரிய அளவில் லாபம் பார்க்கின்றனர்.கோடிக்கணக்கில் உள்ள, இந்த மூன்றாவது பிரிவினர் தான், உண்மையான விவசாயிகள். இவர்கள் முன்னேறினால் தான், நாடு முன்னேறும். ஆனால், நாட்டில் நடக்கும் நிகழ்வுகள், வேறு மாதிரி உள்ளன.விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வரும் போது, நாட்டின் மனசாட்சி குலுங்குகிறது; நாடே, சோகத்தில் வருந்துகிறது. தற்கொலையின் காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், விவசாயி தற்கொலைக்கு அடிப்படை காரணம், கடன் சுமை மற்றும் கடன் வழங்கிய, கந்து வட்டிக்காரர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என்பது தெளிவாகிறது.எனினும், கந்து வட்டிக்காரர்களை ஒழிக்கவோ, விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கவோ, உறுதியான நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால், அதில், 'கோல்மால்' செய்யும், செல்வந்த விவசாயிகள், லாபம் சம்பாதித்து விடுகின்றனர்.விவசாயிகளுக்கு, விவசாயத்திற்காக, குறைந்த வட்டியில் கடன் கொடுக்க பல அரசு திட்டங்கள் உள்ளன. ஆனாலும், நிலத்தை அடமானம் வைத்தால் தான், பெரிய தொகை கடன் கிடைக்கும். அடமானம் வைக்க, கீழ் மட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்புவதில்லை.வீட்டில் திருமணம், குழந்தை களின் படிப்பு அல்லது மருத்துவம் போன்ற தேவைகளுக்கு, பணம் தேவைப்படும் போது, கந்து வட்டிக்காரர்களை விவசாயிகள் அணுகுகின்றனர். அதை தவிர்க்க, அரசு நடவடிக்கை அவசியம்.விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெறும் போது, அரசு பயந்து போகிறது. போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கிறது.மேலும், விவசாயிகளை தற்காலிகமாக திருப்தி செய்யும் விதமாக, பல சலுகைகளையும், அவசரமாக அறிவித்து, விவசாயிகளின் போராட்டத்தை கைவிட வைக்கிறது. ஆனால், அதன் பலன், சாதாரண விவசாயிகளை சென்றடைவதில்லை.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை போல, விவசாயிகளும், போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அரசு மற்றும் அது சார்ந்த அமைப்பினர் போராடினாலும், அவர்களின் சம்பளம், வருவாயில் பாதிப்பு ஏற்படுவதில்லை.ஆனால், விவசாயிகள் போராடினால், நஷ்டம் அவர்களுக்கு தான். அந்த போராட்டங்களால் கிடைக்கும் பலன்கள், பெரிய அளவில் விவசாயம் பார்க்கும் நிலச்சுவான்தாரர்களுக்கே கிடைக்கிறது. இதை, பெரும்பாலான விவசாயிகள் உணர்வதில்லை. உணர்ந்தாலும், அவர்களின் குரல், ெவளியே கேட்பது இல்லை.அதற்கு காரணம், சிறு விவசாயிகளின் அமைப்புகள், செயல் இழந்து போனது தான். எனவே, வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற வல்லுனர்கள் உதவியுடன், உண்மையான விவசாயிகளுக்கான, நலத்திட்டங்களை, அரசுகள் கண்டறிந்து, அவற்றை முழு மூச்சாக செயல்படுத்த வேண்டும்; உண்மையான விவசாயிகள் முன்னேற வேண்டும்.இதற்காக, ஏழை விவசாயிகளுக்கு எளிதாக கடனுதவி, பயிர் சேத கணக்கீடு, உடனுக்குடன் இழப்பீடு, முன்பணம் இல்லாத பயிர் காப்பீடு, விளை பொருட்களுக்கு தங்கு தடையற்ற விற்பனை வாய்ப்பு, இடைத்தரகர்கள் இல்லாத நிலை, விவசாயிகளின் வாரிசு களுக்கு வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.கிராமங்கள்தோறும், சமூக ஆர்வலர்கள், நல்லெண்ண அமைப்புகள் மூலம், விவசாய நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், எத்தனை காலம் ஆனாலும், விவசாயம் பொய்க்காது. விவசாயமும் மேன்மை அடையும்; விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்ள மாட்டார்கள். அரசு செய்யுமா?
- என்.எஸ்.வெங்கட்ராமன்
சமூக ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து

Rajendran Kulandaisamy - Kumbakonam,இந்தியா
20-மே-201913:25:51 IST Report Abuse
Rajendran Kulandaisamy விவசாயத்திற்கு மழை நீர் சேகரிப்பு... ஆம். அறிவுள்ள காகம் தொட்டியின் அடியில் இருந்த நீரை மேலே கொண்டு வருவதற்காக சிறு, சிறு கற்களை தொட்டியில் போட்டு மேலே நீரை கொண்டு வந்து ஆம். அந்த நீரை அருந்தி தாகம் தீர்த்தது... நாமும் அறிவுள்ளவராய் சிறு, சிறு கற்களை கொண்டு அமைக்கும் மழை நீர் தொட்டி அமைத்து நிலத்தடி நீரை சேமித்து... மிக பெரும் அளவில் நிலத்தடி நீரை டெபாசிட் பண்ணியதால் மின் பம்பு மோட்டார் ஸ்விட்ச் போட்டாலே போதுமே நம் தேவையும் விவசாய தேவையும் தீர்ந்திடுமே..........
Rate this:
Cancel
Rajendran Kulandaisamy - Kumbakonam,இந்தியா
30-மார்-201919:34:03 IST Report Abuse
Rajendran Kulandaisamy பகவான் கிருஷ்ணரின் அமுத மொழி..... மூலம் விவசாயம் உயர் ஜாதியினர் செய்யலாமே.... படிப்பின் அடிப்படையில் உயர்வாக கருதப்படும் ஜாதி என்பதே பொறுத்தம். இன்று உன்னுடையது நாளை வேறு ஒருவருடையதாகிறது... நாளை இன்னொருவருடையதாகிறது... தை நாட்கள், மாசி நாட்கள்...ஐப்பசி நாட்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறோம்... அதோபோல், SC / ST பிரிவினரின் இன்றைய அரசு தந்த 120000 சலுகை நாட்கள் நாளை பிராமிணரின் சலுகை நாட்கள் ஆக வேண்டும். .. நாளை 120000 நாட்கள் பிறகு வேறொரு சமுதாயத்துடையதாகட்டும்.. அக்காலத்திலிருந்து விவசாய கூலியாகவும், குப்பைகளையும், கழிவுகளையும் துப்புரவு வேலைகளை செய்யாத பிராமிண் இன்றுலிருந்து அப்பணி செய்யட்டும் SC /ST யின் விவசாய கூலி, துப்பரவு பணியை பகவான் கிருஷ்ணர் விருப்பமாக எண்ணி நேற்றைய அவர்களின் வாய்ப்பை இன்று பிராமினுடையதாகட்டும்....நாளை வேறு ஒருவருடையதாகட்டும். ஆட்சி மாறட்டும் பா... மாற்றம் ஒன்றே நிரந்தரம்...அன்பு மணி...அடிக்கிது... செய்யும் தொழிலே தெய்வம் என்பவர்கள் யார்... இங்கு குறிப்பிட்ட இரண்டு திட்டத்தில் அடுத்த அரசாங்கம் ஒரு திட்டத்தை நடை முறைப்படுத்தலாமே... எல்லாரும் பறையனாகவும், பூ நூல் அணிந்தவனாகவும் மாறுவோமே... ஆம். நல்ல அறிவுரையை பறைசாற்றும் பறையனாகவும்... அந்த அறிவுரையை கற்று சமுதாயத்தில் பூத்தவனாய் அறிவுரை நூல்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அணி திரளட்டும்.. ஆம். பூ நூல் அணிந்தவனாய்... (பிராமிண்) இந்த விஷயத்தில் அனைவரும் இந்துக்கள் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்வோம்.. எம்மதமும் சம்மதம்.....மத நல்லிணக்கம்.... எங்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X