இலங்கை அதிபரை கைகழுவினார் ராஜபக்சே

Added : நவ 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 இலங்கை அதிபரை கைகழுவினார் ராஜபக்சே

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, எஸ்.எல்.எப்.பி., எனப்படும், ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில், அங்கம் வகித்து வந்த, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, நேற்று, திடீரென விலகினார்; புதிதாக துவக்கப்பட்டுள்ள, எஸ்.எல்.பி.பி., எனப்படும், ஸ்ரீலங்கா மக்கள் கட்சியில், அவர் சேர்ந்துள்ளார்.இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான, எஸ்.எல்.எப்.பி., தலைவர், மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்ரம சிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர்.சமீப காலமாக, விக்ரமசிங்கேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, புதிய பிரதமராக, ராஜபக்சேவை நியமிப்பதாகவும், அதிபர் சிறிசேன அறிவித்தார்.ஆனால், பார்லிமென்டில் பலத்தை நிரூபிக்கும் அளவுக்கு, ராஜபக்சேவுக்கு ஆதரவாக, எம்.பி.,க்கள் பலம் இல்லாததை அடுத்து, பார்லியை கலைப்பதாக, சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதற்கு, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில், சிறிசேன தலைமையிலான, எஸ்.எல்.எப்.பி.,யில் இருந்து, ராஜபக்சே, நேற்று அதிரடியாக விலகினார்.அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு, தன் ஆதரவாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட, எஸ்.எல்.பி.பி.,யில், ராஜபக்சே சேர்ந்தார். அவரிடம், எஸ்.எல்.பி.பி., கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.இலங்கையில், அடுத்தாண்டு, ஜன., 5ல், பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக, அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். இந்த தேர்தலில், எஸ்.எல்.பி.பி., சார்பில், பிரதமர் பதவிக்கு, ராஜபக்சே போட்டியிடுவார் என தெரிகிறது.கடந்த, 1951ல், ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி துவக்கப்பட்டது. அதன் நிறுவன தலைவர்களில் ஒருவர், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தந்தை, டான் ஆல்வின் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
15-நவ-201809:11:53 IST Report Abuse
Welcome Back to 1900AD //தமிழனுக்கு தமிழனே துரோகி மற்றும் எதிரி ஆவான்.//2.0 Lyca Production.
Rate this:
Share this comment
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
12-நவ-201810:44:38 IST Report Abuse
Manikandan Sivalingam தமிழனுக்கு தமிழனே துரோகி மற்றும் எதிரி ஆவான்.
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
12-நவ-201812:17:39 IST Report Abuse
Jaya Ramஇப்போ எதுக்கு இந்த விமர்ஷணம், கேடு நினைப்பவன் கேடடைவான் என்பதே பொருத்தமாக இருக்கும் ஏனெனில் சிறிசேன ரணிலை உதறினான்,ராஜபக்ஷே சிறிசேனவை உதறிவிட்டான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X