பொது செய்தி

இந்தியா

கேரளாவில் மேலும் ஒரு கோவிலில் சர்ச்சை

Updated : நவ 12, 2018 | Added : நவ 12, 2018 | கருத்துகள் (57)
Advertisement
Padmanabaswamy Temple,Alpasi Festival,Sabarimala, கேரளா, சபரிமலை, திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவில், இந்து, பிற மத பெண், சபரிமலை அய்யப்பன் கோவில், அல்பாசி உற்சவ விழா, தந்திரி தாரநல்லூர் நம்பூதிரி , கேரளா பத்மநாபசுவாமி கோவில்,
Kerala, Trivandrum,  Hindu, Other Religious Woman, Sabarimala Ayyappan Temple,  Tantri Tarunallur Namboodiri, Kerala Padmanabhaswamy Temple,

திருவனந்தபுரம்: சபரிமலையை தொடர்ந்து கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலும் இந்து அல்லாத பெண் ஒருவர் நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


புகழ் பெற்ற கோவில்


சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பிறகு, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. எனினும், பல நுாற்றாண்டுகளாக 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வருவதில்லை. அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் இந்த ஐ தீகம் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, குறிப்பிட்ட வயதில் உள்ள பெண்கள் வர முடியாது என அய்யப்ப பக்தர்களும், சபரிமலை தந்திரி குடும்பத்தினரும் கூறி வருகின்றனர் . எனினும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் வரும் மண்டல, மகரவிளக்கு நடை திறப்பை எதிர்கொள்ள கேரள மாநில அரசு தீர்மானமாக உள்ளது.

இச்சூழ்நிலையில், மேலும் ஒரு கோவிலிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில். இக்கோவிலின் பாதாள அறைகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஆபரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட் தான் விசாரித்து வருகிறது.


இந்து அல்லாத பிற மத பெண்


பத்மநாபசுவாமி கோவிலின் உள்ளே இந்து அல்லாத பிற மதத்தினர் செல்ல தடை உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அல்பாசி உற்சவ விழா நவ., 5ம் தேதி துவங்கியது. நேற்று (நவ.,11ம் தேதி) விழா பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது இந்து அல்லாத பெண் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து விட்டதாக தகவல் வெளியானது.

இதைக் கேள்விபட்ட தலைமை தந்திரி தாரநல்லூர் நம்பூதிரி பூஜைகளை உடனே நிறுத்த உத்தரவிட்டார். கோவில் கதவுகள் மூடப்பட்டு கோவிலை புனிதப்படுத்தும், சுத்திகிரி பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை நடக்க இருந்த,'எழுநெல்லது' பூஜைகளும் நிறுத்தப்பட்டன.

இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், ' கோவிலுக்கு வெளியே, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிற மத ஆடை அணிந்த பெண் ஒருவர் கோவில் அருகே வந்து, தான் அணிந்து இருந்த ஆடையை அகற்றி விட்டு, கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பாரம்பரிய ஆடையை அணிந்து கோவிலுக்குள் நுழைந்தது, 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இது குறித்து போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது' என்றனர்.

இக்கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanth - Bangalore,இந்தியா
15-நவ-201812:00:09 IST Report Abuse
vasanth சில நாட்கள் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேரில் கண்டது. ஒரு வெளிநாட்டு தம்பதி பைஜாமா மற்றும் சுரிதார் உடை அணிந்து கோவில் வந்து அம்மன் தரிசனம் செய்ய ஆசைப்பட்டார்கள். காவலாளி அம்மன் சன்னதிக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்கள் இந்து மத நம்பிக்கை (கவனிக்கவும் மதம் மாறவில்லை) கொண்டிருப்பதாகவும், அம்மனுக்கு பூ கொண்டு வந்திருப்பதாகவும், நெற்றியில் திலகமிட்டு நம்பிக்கையுடன் வந்திருப்பதாகவும், அம்மனையும் அய்யனையும் தரிசிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள், காவலாளிகள் அனுமதிக்கவில்லை, பின்னர் அம்மன் சன்னதி வாயிலுக்கு அருகில் உள்ள கோவில் அலுவலரை சந்தித்தார்கள், அலுவலர் அவர்களிடம் அம்மனிடம் உண்மையான நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டு உறுதி செய்து கொண்டும், சிம்பிளாக ஒரு பரிவட்ட துண்டை அவர்களுக்கு அணிவித்து அய்யனின் விபூதி குங்குமத்தை அவர்களின் மேல் பிராத்தனை செய்து தெளித்துவிட்டு அவர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துவிட்டார். அவர்களும் மகிழ்த்தியுடன் நன்றி கூறி சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டனர். உண்மையான நம்பிக்கையுடன் நேர்மையாக நடந்து கொண்டால் எந்த மதத்தினருக்கும் அம்மன் அருள் புரிவாள்
Rate this:
Share this comment
Cancel
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
13-நவ-201816:59:56 IST Report Abuse
Gideon Jebamani e is the only reason for untouched people to convert from Hindu religion and அஸ் long அஸ் e exists this will happen
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
13-நவ-201811:16:26 IST Report Abuse
ganapati sb வேறு ஏதோ நிர்பந்தத்தில் முன்பு மதம் மாறி இப்போது தாய் மதம் திருப்ப விழைந்து உண்மையான பக்தியினால் வரும் மாற்றுமதத்தினரை கோயிலில் அனுமதிக்கலாம் சுற்றுலா வரும் வெளிநாட்டினரை வெளிப்பிரகாரம் வரை மட்டும் அனுமதிக்கலாம் சபரிமலை போல வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க வரும் மாற்றுமதத்தினரை அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X