எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.வுடன் போட்டியிட தெரியவில்லை: மோடி| Dinamalar

எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.வுடன் போட்டியிட தெரியவில்லை: மோடி

Updated : நவ 12, 2018 | Added : நவ 12, 2018 | கருத்துகள் (36)
Advertisement
Chhattisgarh elections, PM Modi, Bharatiya Janata,  மோடி, பா.ஜ., சத்தீஸ்கர், எதிர்க்கட்சிகள், சட்டசபை தேர்தல், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா, சத்தீஸ்கர் தேர்தல், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல், நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, 
Modi, BJP, Chhattisgarh, parties, assembly elections, Prime Minister Modi,  Chhattisgarh assembly elections, Narendra Modi, Prime Minister Narendra Modi,

ராய்பூர் : பா.ஜ.,வுடன் எப்படி போட்டி போடுவது என எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் தெரியவில்லை என பிரதமர் மோடி பேசி உள்ளார்.
சட்டசபை தேர்தலுக்காக முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் நவ.,20 ம் தேதி 2 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில் ஒன்றான பிலாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், கட்சி தொண்டர்கள் ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதாலேயே சத்தீஸ்கரில் பா.ஜ., மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்படுகிறது. அவர்களின் உழைப்பு தொடரும் வரை இங்கு பா.ஜ, ஆட்சி தொடரும்.
பஸ்டர் பகுதியில் பேசியபோது அதிக அளவில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதே போல் 2ம் கட்ட தேர்தலிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளிப்பது உங்களின் கடமை. பா.ஜ.,வை எப்படி எதிர்ப்பது என எதிர்க்கட்சிகளுக்கு இதுவரை தெரியவில்லை. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமினில் வெளியே வாழ்ந்து வரும் தாய் - மகன் உள்ளிட்ட சிலர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக உழைக்கிறோம். சத்தீஸ்கரில் நீங்கள் எங்கு சென்றாலும் வளர்ச்சியை காண முடியும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
13-நவ-201802:54:11 IST Report Abuse
Varatharaajan Rangaswamy உண்மைதான் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பாரதீய ஜனதாவை குறை சொல்பவர்கள் எவ்வாறு மக்களின் ஆதரவை பெற முடியும்? ராமன் சிங் நிறைவேற்றியுள்ள வளர்ச்சித்திட்டங்கள் மட்டுமே மீண்டும் அவருக்கு ஆட்சியை பெற்றுத்தரும்
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai ,இந்தியா
13-நவ-201802:02:04 IST Report Abuse
Shanu மத்தியில் நடக்கும் பிஜேபி ஆட்சியையும் மாநிலத்தில் நடக்கும் எடப்பாடி ஆட்சியையும் பார்த்து எப்போடா election வரும் என்று இருக்கிறோம். இப்போ பேச வரமாட்டேங்குது. Heart paining ஆட்சி நடக்குது
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201821:49:02 IST Report Abuse
Siva Kumar எலக்ஷன் ரிசல்ட் வரட்டும் அப்புறம் தெரியும்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X