பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கஜா புயல், கனமழை , வடகிழக்கு பருவமழை,  சென்னை வானிலை ஆய்வு மையம் , புயல் எச்சரிக்கை,ஐஜி எஸ்.பரமேஷ், கடலோர காவல் படை, வங்கக் கடல், கடலுார் - பாம்பன் கஜா புயல், சூறாவளி காற்று , 
Gaja Storm, Heavy rain, Hurricane Wind, Northeast Monsoon, Chennai Meteorological Center,
 Storm Warning, IG S Paramesh, Coast Guard, Bengal Sea, Kadalur - Pamban Gaja Storm,

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள, 'கஜா' புயல் வலுவடைந்து, தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. கடலுார் - பாம்பன் இடையே, 15ம் தேதி, கரையை கடக்கிறது. இதனால், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், கன மழை கொட்டும் என்றும், 100 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும், எச்சரிக்கப்பட்டு உள்ளது.

வட கிழக்கு பருவ மழை, நவ., 1ல் துவங்கிய நிலையில், 7ம் தேதி, அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுப்பெற்று, 9ல், புயலாக மாறியது. புயலுக்கு, இலங்கை வழங்கிய, சிங்களத்தில் யானை என பொருளுடைய, 'கஜா' என்ற, பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல், இன்று முற்பகலில், தீவிர புயலாக மாறுகிறது. நேற்றிரவு நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே, 650 கி.மீ., துாரத்திலும், நாகைக்கு வட கிழக்கில், 700 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டிருந்தது.
இந்த புயல், ஆந்திரா மற்றும் கடலுார் இடையே, சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என, நேற்று முன்தினம் கணக்கிடப்பட்டது. ஆனால், வட கிழக்கில் இருந்து வீசும் காற்று வலுப்பெற்றுள்ளதால், புயல், தென் மேற்கு திசையில், நாகை மாவட்டம் நோக்கி திரும்பியுள்ளது. அதனால், கடலுாருக்கும், பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில், கரையை கடக்கும் என, சென்னை வானிலை

ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு முன், நேரடியாக வேதாரண்யத்தில் புயல் கரையை கடக்கலாம் என, அமெரிக்க புயல் எச்சரிக்கை மையத்தின், ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காற்றின் வேகம் மற்றும் திசையை பொறுத்து, இந்த நிலைமை மாறவும் வாய்ப்புள்ளது.
கஜா புயல், கரையை நெருங்கும் நிலையில், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில், பலத்த சூறாவளி காற்று வீசும். துறைமுகங்கள் மற்றும் கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் படகுகளுக்கும், குடிசைகள், கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கடலோரத்தில், தாழ்வான பகுதிகளுக்குள் கடல் அலை புகும் ஆபத்தும் உள்ளது; மரங்கள் முறியும்; மின் மற்றும் தொலைபேசி கம்பங்கள், 'டிரான்ஸ்பார்மர்'கள் சரியும்; பாழடைந்த கட்டடங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும்,

எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர்மட்டம் உயரும்!

: சென்னை மண்டல, வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் பேட்டி: 'கஜா' புயல், இன்று தீவிர புயலாக வலுப்பெறும். வரும், 15ம் தேதி முற்பகலில், கடலுாருக்கும், பாம்பனுக்கும் இடையே, கரையை கடக்கும். புயல் காரணமாக, 14ம் தேதி இரவு முதல், கன மழைக்கு வாய்ப்புள்ளது. கடலுார், நாகை, காரைக்கால் பகுதிகளில், இயல்பை விட, 1 மீட்டர் அளவுக்கு, கடல் நீர் மட்டம் உயரும். கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், கடலுார், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில், மணிக்கு, 100 கி.மீ., வரை பலத்த காற்று வீசும். மீனவர்கள் கடலுக்குள் இருந்தால், கரைக்கு திரும்பி விட வேண்டும். கடலுக்குள் இருப்பவர்கள், தங்கள் பகுதிக்கு

அருகேயுள்ள கரை பகுதிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 'ரெட் அலர்ட்' என்பது, நிர்வாக ரீதியாக தரப்படும் எச்சரிக்கை. இது, அதிக மழை அல்லது அதிக வெயிலுக்கு வழங்கப்படும். காற்றில் உள்ள ஈரப்பதத்தை பொறுத்து, புயல் கரையை நெருங்கும் போது, கன மழை இருக்கும். சில இடங்களில் கன மழையும், மிதமான மழையும் பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகரிப்பு

காலை, மணிக்கு 4 கி.மீ., வேகத்தில் நகர்ந்த கஜா புயல், பிற்பகல் நிலவரப்படி 12 கி.மீ., வேகத்தல் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல், சென்னையதல் இருந்து 690 கி.மீ., தூரத்திலும், நாகையில் இருந்து 790 கி.மீ., தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. நாளை மறுநாள் இந்த புயல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

'கடலோர காவல் படை தயார்'

: கடலோர காவல் படையின் தென் பிராந்திய, ஐ.ஜி., - எஸ்.பரமேஷ் கூறியதாவது: புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை, உடனடியாக கரைக்கு திரும்பும்படி, ஒலிபெருக்கி வழியாக அறிவுறுத்தி வருகிறோம். கடலோர பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களுக்கும், புயல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக, சென்னை, துாத்துக்குடி, காரைக்கால் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. இது தவிர, டார்னியர் விமானம் உட்பட, மூன்று கடலோர காவல் படை விமானங்களும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. மேலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவுடன் இணைந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். கஜா புயலை எதிர் கொள்ள கப்பல்கள், விமானங்கள் என, அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-நவ-201816:59:32 IST Report Abuse

 nicolethomsonபரங்கிப்பேட்டை, பழையாறை, தரங்கம்பாடி விட்டுடீங்களே

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-நவ-201808:09:32 IST Report Abuse

Srinivasan Kannaiyaகவலை படவேண்டாம் இனி இலங்கையை தாண்டி இந்து மகா சமுத்திரத்திற்கு சென்று வலுவிழந்து விடும்

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
13-நவ-201804:12:30 IST Report Abuse

கும்புடுறேன் சாமிதானே வந்தது , வர்தா வந்தது இப்போ கஜா வருது. தி மு க ஆட்சில இருக்கும்போது இத்தனை புயல் வரல ஆனா இப்போ வருதுன்னா என்ன அர்த்தம்? , இது தி மு க வின் சதி வேலைதான் . ஸ்டாலின்தான் புயலை உருவாக்கி அனுப்பறார் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த

Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
13-நவ-201811:42:01 IST Report Abuse

G.Krishnanமகராசனின் ஆட்சியில் வெள்ள நிவாரணம் கிடையாது. . . . . .வறட்சி நிவாரணம் தான் . . . . ராசி அப்படி . . .. . சுனாமி வேண்டுமானால் வரும் . . .மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்ப கம்மி ...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X