பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து : வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்

வாரணாசி: ''மக்கள் நலனைக் கருதி, திட்டங்கள் செயல்படுத்தியபோது கிண்டல் செய்தவர்கள், தற்போது வாயடைத்து உள்ளனர்,'' என, கங்கை நதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் பேசினார்.

கங்கை நதி, சரக்கு போக்குவரத்து, மோடி


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, தன் சொந்த தொகுதியான, வாரணாசியில் பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார். கங்கை நதியில், சரக்கு கப்பல் போக்குவரத்து கப்பல் இயக்கும் திட்டத்தையும், அவர் துவக்கி வைத்தார்.
தேசிய நீர்வழிப் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஜல் மார்க் விகாஸ்' எனப்படும், நீர்வழிப் பாதை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கங்கை நதியில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் ஹால்டா வரை, சரக்கு கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன், 5,369 கோடி ரூபாய்

செலவிலான இந்த திட்டத்தை, இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு மற்றும் உலக வங்கி, இந்த செலவை பகிர்ந்துள்ளன. வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், ஹால்டாவில் இருந்து வந்த முதல் சரக்கு கப்பலை, பிரதமர் மோடி வரவேற்றார். மத்திய சாலை போக்குவரத்து, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பா.ஜ., அரசு அறிமுகம் செய்த அனைத்து திட்டங்களையும், எதிர்க்கட்சிகள் கிண்டலடித்தன; விமர்சித்தன. ஆனால், அதன் உண்மையான பலன், மக்களுக்கு கிடைத்து வருவதால், வாயடைத்து போயுள்ளன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்தபோது, நாட்டில், 40 சதவீதம் பகுதிகளில் மட்டுமே தூய்மைப் பணி நடந்தது. ஆனால், தற்போது, 95 சதவீத பகுதிகளில், தூய்மைப் பணி நடப்பது, நமக்கு பெருமையாக உள்ளது. அதுபோலவே, 'ஆயுஷ்மான்' எனப்படும், இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தால், 40 நாட்களில், இரண்டு லட்சம் பேர் பயனடைந்தனர். புனித நதியான கங்கையை தூய்மைப்படுத்துவதாக கூறியபோது, நதியில் பணத்தை கொட்டுகிறோம் என்றனர். தற்போது, கங்கை தூய்மை அடைந்ததுடன், அதில் சரக்கு போக்குவரத்தும் நடப்பதை, இந்த நாடே பார்க்கிறது. இதற்கு முன் ஆட்சியில்

Advertisement

இருந்தவர்கள், மக்களின் நலனைக் கருத்தில் வைத்து செயல்பட்டிருந்தால், இந்த திட்டங்கள் எப்போதோ, நமக்கு கிடைத்திருக்கும். மக்கள் ஓட்டு வங்கி அரசியலை விரும்பவில்லை; வளர்ச்சி திட்டங்களையே எதிர்பார்க்கின்றனர். இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இங்கு, 2,413 கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தன் பழைமை மாறாமல், வாரணாசி அனைத்து வசதிகளையும் பெற்று வருகிறது. இந்த வளர்ச்சி திட்டங்களை நாடே கவனிக்கிறது. புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில், இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

வாரணாசியில், புறவழிச் சாலை மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றையும், மோடி துவக்கி வைத்தார். மேலும், கங்கையில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மோடி திறந்து வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
15-நவ-201810:29:19 IST Report Abuse

IndhuindianReaders, Kindly go through this passage on linking of rivers the efforts for which started more than sixty years ago. This passage is not fiction but from the official website of Government of India. See the sorry state of implementation of schemes that would benefit the entire country and would completely remove flood, inundation on one hand and drought at the other end of the spectrum. What is needed is not financial resources but political will since the implementation would take about 15-20 years and would see at the least four to six Central and State Governments. "Garland Canal by Capt. Dastur (1977) Captain Dinshaw J. Dastur, an engineer who was also a trained pilot. His plans were impressive enough that friends, notably Homi Bhabha, got him an introduction to Jawaharlal Nehru. His Proposal (1977) envisaged construction of two canals - the first 4200 km. Himalayan Canal at the foot of Himalayan slopes running from the Ravi in the West to the Brahmaputra and beyond in the east and the second 9300 km Garland Canal covering the central and southern parts, with both the canals integrated with numerous lakes and interconnected with pipelines at two points, Delhi and Patna. The Himalayan Canal will be 2,600 miles long. It will conserve about 250 million acres feet of water out of the total Himalayan flow of 500 million acre feet and will distribute the rest. It will have nearly 30 integrated lakes sandwiched between the periphery of the Himalayan Range and a 100 feet rear bund of the canal. Each lake is on an average 120 feet deep, about 1.25 miles broad and each is segregated at 33.113 miles distance by a bund with gates. The canal is in front of the continuous integrated lakes 'and is 1,000 feet broad and 50 feet deep which is formed by the front bund of the canal. The canal has got flood gates which s up to the subsidiary canals which are positioned at every two miles distance on the main canal and forms part of the herringbone tem of drainage and irrigation. The permanent level of water in the canal which is filled by the lakes behind is 30 feet high.The Central and Southern Garland Canal starts from the centre of the North Part of the Central Plateau skirting both [sides of the Central Plateau, the Deccan Plateau and the Southern Plateau, joining at a point somewhere near Cape Comorin forming a complete garland, that is why it is known as the Central and Southern Garland Canal. It has got 200 integrated lakes similarly built as in the Himalayan Canal and two very big lakes, one in Nagore in Rajasthan and the other one in the Valley of Son. The conserving capacity of this canal with its integrated lake is in the vicinity of about 750 million acre feet of water. It is 5,800 miles long and it is built at an even height of about 1,000 feet above MSL. The two canals are joined at two points by pipe lines and also by an old course of river which flows into the Rajputana desert which is treated by raising bunds on both the sides, joining the Himalayan Canal to the Central and Southern Garland Canal. In this way we can bring huge quantities of water into the Central and Southern Garland Canal from the Himalayas. - The transfer and distribution of water in the Garland Canal Scheme takes place purely by gravity and no energy is needed whatsoever. There are three points shown on the map in the Jamuna basin from where the surplus water can be also re-cycled into the Central and Southern Garland Canal is required by means of unlimited hydro-electric power we will be at our disposal once the garland canal project is constructed thus retarding the progress of the water flowing into the sea and dissipating itself. In order to supply water to the plains under controlled conditions at every two miles interval on the main canal are positioned subsidiary canals. They form part of the tem, known as the herringbone tem of drainage and irrigation. The cost estimated by Capt. Dastur was Rs. 24,095 crores."

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-நவ-201813:13:09 IST Report Abuse

Manianபோகாத ஊருக்கு வழி சொல்லலாமா? நதிகளை இணைக்க எவனுமே மொதல்லே நிலம் தர மாடான் அதை எப்படி செய்வது என்று சொல்லுங்கள். இது ஜனநாயக நாடு, 127 கோடி மக்கள், லஞ்சம் வாங்கறது-கொடுக்கறது சரி, ஓராடை விக்கலாம் என்பதை மறக்காமல் , யோசனை சொல்லுங்கள். அடுத்த நோபல் பரிசு உங்களுக்கே . ...

Rate this:
13-நவ-201821:19:56 IST Report Abuse

ஆப்புஇந்த யோஜனாவில் சுமார் 200 கோடி பேர் பயனடஞ்சிருப்பாங்களே...அதைப் பத்தி பேசவே இல்லியே...

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-நவ-201803:23:59 IST Report Abuse

Manianஏம்ப்பா ஆப்பு, கங்கையிலே ஒண்ணுக்கு poravan தமிழன், சரக்கு வழி பண்ணறவன் வடக்கதியான். தண்ணியிலே ஒண்ணுக்கு போறதையும் படகு வுடுறதையும் ஒண்ணா எண்ணலாமா? ஒன்னிய போல பயலுகளுக்கு இது எப்படி புரியும். அதான் தண்ணி இல்லாம தெற்கு சாகுது. தண்ணிலே போறது அவனவன் அறிவை பொறுத்தது. எந்த தலைதூக்கும் உதவி செய்யாத பயலுக இங்கே கூவலாமா? ஒன்னிய போல திருடர்கள் கழக தொண்டர்கள் ரெண்டு கோடி பேரு ஓசி வாங்கி, ஒபிசின்னு பயன் அடைஞ்சிருக்குறது போதாதா? ...

Rate this:
venkat - chennai,இந்தியா
13-நவ-201818:31:10 IST Report Abuse

venkatஇது குறைந்த செலவில் பயண பயணி புதிய போக்குவரத்து வழிகளுக்கு வகை செய்து நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதால் செயல் வீரர் தீர்க்க தரிசி பிரதமர் தலைமையில் பல உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களை அமைச்சர் நிதின் கட்கரி தொலை நோக்குடன் செயல் படுத்தி வருகிறார். . 20-July-2018 கப்பல் போக்குவரத்து அமைச்சக அறிவிப்பின் படி தற்போது இந்தியாவில் 111 நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருகின்றன. ஏற்கெனவே நடைமுறைக்கு வந்தவை >> ( 1 ) கங்கை -பகிரதி - ஹூக்ளி நதி திட்டம் (ஹாலடியா - அலகாபாத்) 1620 கி மீ. (2 ) :ப்ரஹ்மபுத்ரா நதி (துப்பிரி - சதியா ) - 891 கி மீ (3) :மேற்கு கடற்கரை கால்வாய் (கொட்டப்புறம் - கொல்லம் ), சம்பகர - உத்தியோகமாண்ட கால்வாய் 205 கி மீ ( 4 ) (Phase-I : விஜயவாடா - முக்கியல ) - 82 கி மீ (5) 10 (அம்பா நதி - 45 கி மீ (6) (ரேவதாண்ட CREEK - குண்டலிக நதி திட்டம் - 31 கி மீ (7) Cumberjua -Zuari மண்டோவி நதி -17 கி மீ (8 ) மண்டோவி - Usgaon Bridge to Arabian Sea - 41 கி மீ (9 ) ஸுவரி - Sanvordem பிரிட்ஜ் - மார்முகவ் துறைமுகம் - 50 கி மீ .(10 ) ஆலப்புழா - கோட்டயம் - அதிரம்புழா கால்வாய் Boat Jetty, ஆலப்புழா - நிரம்புழா - 38 கி மீ (11) தாபி நதி - 173 கி மீ (12 ) சுந்தர்பன்ஸ் நீர்வழி > (1 ) பாராக் நதி - 71 கி மீ (2) கண்டகி நதி - Bhaisalotan Barrage - த்ரிவேணி காட் - ஹாஜிபூர் கங்கை நதி -296 கி மீ .(3 ) Cumberjua -ஸுவாரி - மண்டோவி நதி 17 கி மீ (4) மண்டோவி - Usgaon பாலம் - அரபிக் கடல் 41 கி மீ (5) ஸுவாரி - சந்தவொர்த்தேம் பாலம் -மார்முகவ் துறைமுகம் - 50 கி மீ .(6 ) ஆலப்புழா - கோட்டயம் - அதிரம்புழா கால்வாய் :Boat Jetty, 38 கி மீ (7) ருப்பினராயன் - துவாரகேஸ்வர் - சீலை நதி (பிரதப்புர) - Hooghly நதி (Geonkhali) - 72 கி மீ (8) சுந்தர்பன்ஸ் நதிதீரம் Namkhana - AtharaBanki Khal & 13 நதிகள் - 654 கி மீ << தமிழகத்தில் இதுமாதிரி வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கவில்லை என்று சிலர் திரித்து ஓலமிடுகிறார்கள். உண்மை என்னவென்றால் இந்தியாவில் தூய குறை செலவு புதிய நதிநீர்ப்போக்குவரத்து விரைவில் இவ்வளவு நதிநீர் தடங்களில் வளர்ச்சி திட்ட மோடி பி ஜெ பி nda அரசால் உருவாக்கப் படும்போது, தமிழக அரசு வழக்கம் போல வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகளுக்கு வேக முன்னுரிமை அளிக்காது இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் முடங்கிப் போனதுதான். பத்திரிக்கை செய்திப்படி ஆந்திர காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியே பாண்டி வரை பக்கிம்ஹம் கால்வாய் வழியே நம்மூரில் நதிநீர் போக்குவரத்து 2014 -15 லேயே தொடங்கியிருக்கலாம். தமிழக அரசு பக்கிம்ஹம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை பல கால அவகாசங்கள் கடந்தும் அகற்றித் தரவில்லை என்று சென்ற வாரம் பசுமை தீர்ப்பாயம் நமது பொதுபணித்துறை தலைமைப் பொறியாளரை கூப்பிட்டு விசாரித்து தமிழக அரசுக்கு ரூ 2 கோடி அபராதம் விதித்தது. தவிர கூடங்குளம் அணு மின் உலை, ஸ்ரீபெரும்புதூர் பசுமை விமான நிலையம், மதுரவாயல் சென்னை துறைமுகம் விரைவு வழிச்சாலை, சென்னை சேலம் 8 வழி விரைவு வழிச்சாலை என பல வளர்ச்சித் திட்டங்கள் இடம் மீட்டு தாராமையாலும், பிரிவினை சக்திகள் எதிர்ப்பாலும் தொய்வுறுவது தமிழக தலைவிதி.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X