பொது செய்தி

தமிழ்நாடு

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை இன்று திறப்பு

Added : ஜூன் 18, 2010
Share
Advertisement
கூடலூர் : கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணை இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி அணை திறப்பது வழக்கம். சில ஆண்டுகளில் அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப, சில நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நீர்மட்டம் மிகக்குறைவாக இருந்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டு ஜூலை 13 ல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்த போதிலும் , தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால் கடந்த ஒரு வாரமாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.

இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 114.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 402 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 1710 மில்லியன் கன அடி. பெரியாறில் 4.4 மி.மீ., மழை பதிவானது. நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக இன்று காலை வினாடிக்கு 200 கன அடி வீதம் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி கலெக்டர் முத்துவீரன் இன்று காலை தேக்கடியில் உள்ள ஷட்டரின் மதகை இயக்கி தண்ணீர் திறந்து விடுகிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X