ரூரல்ல தீபாவளி கலெக்ஷன் ஜோரு...| Dinamalar

ரூரல்ல தீபாவளி கலெக்ஷன் ஜோரு...

Added : நவ 13, 2018
Share
தீபாவளிக்கு மறுநாளில் இருந்தே, காய்ச்சல் காரணமாக, வீட்டிலேயே 'ரெஸ்ட்' எடுத்துக் கொண்டிருந்தாள் சித்ரா; அவளைப் பார்க்க வந்திருந்தாள் மித்ரா.''என்னக்கா...காய்ச்சல் உன்னையும் விட்டு வைக்கலையா... ஹாஸ்பிடல் எல்லாம் நிரம்பி வழியுது; நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது...ஆனா, எந்த ஆபீசரும் சீரியஸ்சா எடுத்துக்கிறதாத் தெரியலை'' என்று விரக்தியோடு பேசினாள்
 ரூரல்ல தீபாவளி கலெக்ஷன் ஜோரு...

தீபாவளிக்கு மறுநாளில் இருந்தே, காய்ச்சல் காரணமாக, வீட்டிலேயே 'ரெஸ்ட்' எடுத்துக் கொண்டிருந்தாள் சித்ரா; அவளைப் பார்க்க வந்திருந்தாள் மித்ரா.''என்னக்கா...காய்ச்சல் உன்னையும் விட்டு வைக்கலையா... ஹாஸ்பிடல் எல்லாம் நிரம்பி வழியுது; நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது...ஆனா, எந்த ஆபீசரும் சீரியஸ்சா எடுத்துக்கிறதாத் தெரியலை'' என்று விரக்தியோடு பேசினாள் மித்ரா.''ஆமா மித்து...ரேஸ்கோர்ஸ்ல 'வாக்கிங்' கூட போக முடியாத அளவுக்கு, 'மெகா சைஸ்' கொசுக்களா, துரத்தித் துரத்தி கடிக்குது...அங்கெல்லாம் கொசு மருந்து அடிக்கவே இல்லை. போன வாரம் சனிக்கிழமை, கலெக்டர் பங்களாவுல மட்டும் சுத்திச் சுத்தி, கொசு மருந்து அடிக்கிறாங்க; இது என்ன மாதிரியான சமூக அக்கறைன்னே தெரியலை!'' என்றாள் சித்ரா.''நம்ம மாவட்டத்தோட 'டிசைன்' அப்பிடி....ரூரல் போலீஸ் ஏரியாவுல, எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு, இந்த வருஷம் தீபாவளிக்கு 'செம்ம கலெக்ஷன்' நடந்திருக்கு. அங்க மொத்தம் 35 ஸ்டேஷன் இருக்காம்; ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் இன்ஸ்பெக்டர் கணக்குக்கு 10 ஆயிரம், ஸ்டேஷன் கணக்குல ஒரு பவுன் காயின், உளவுப்பிரிவு போலீஸ் கணக்குக்கு 10 ஆயிரம்னு கலெக்ஷன் நடந்திருக்கு!'' என்றாள் மித்ரா.''அடேங்கப்பா...இதுவே 10, 15 லட்சம் வந்திரும் போலிருக்கே...!'' என்று விழிகளை விரித்தாள் சித்ரா.''ஆமாக்கா...இது போதாதுன்னு, பட்டாசுகளை வண்டி வண்டியா அள்ளிட்டு வந்து 'சப்ளை' பண்ணிருக்காங்க; இதெல்லாமே யாரு சொல்லி, யாருக்காக யாரு வாங்குனாங்கன்னு தெரியலை; ஆனா, ரூரல் ஸ்டேஷன்கள்ல எப்பவும் கேக்காத அளவுக்கு புலம்பல் ரொம்ப பலமா கேக்குது!'' என்றாள் மித்ரா.''நீ பத்தாயிரம்னு சொன்னதும், கார்ப்பரேஷன் கிழக்கு மண்டலத்துல இருக்குற 'டவுன் பிளானிங்' மேடம் ஞாபகம் வந்துச்சு...சேலத்துல இருந்து 'ப்ளான்' பண்ணி அந்தம்மா இங்க வந்ததுல இருந்தே, வசூல் தானாம்... ஆபீஸ்ல ஆளையே பார்க்க முடியாது; எப்போ கேட்டாலும், 'இன்ஸ்பெக்ஷன்'னு சொல்றாங்களாம். சாதாரண 'பில்டிங் அப்ரூவல்' பைல்ன்னாலே, பத்தாயிரம் ரூபாய் இல்லாம, கையெழுத்துப் போடுறதில்லையாம்!'' என்றாள் சித்ரா.''சேலம்னா, ஏதாவது 'ஹெவி ரெக்கமண்டேஷன்'ல வந்திருப்பாங்களோ?'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் மித்ரா.''கரெக்டா சொன்ன மித்து...ஏதோ 'ரிட்டயர்டு டி.எஸ்.பி., ஒருத்தர், இவருக்கு ரொம்ப நெருக்கமாம்; அவருக்கு, ஆளுங்கட்சி பெரிய இடத்துல செல்வாக்கு இருக்காம்; அப்பிடித்தான் காய் நகர்த்தி வந்திருக்காங்க. இவருக்கு வசூல் வேலைகளைச் செய்யுறதுக்காகவே, ஒரு கைத்தடிய வேலைக்கு வச்சிருக்காராம்'' என்றாள் சித்ரா.''அவரோட ஏரியாவுல தான், பிளக்ஸ் பேனர்கள் எக்குத்தப்பா வச்சிருக்காங்க. எந்த நிகழ்ச்சியா இருந்தாலும், அஞ்சு நாட்களுக்கு, ஏழு இடங்களுக்கு மட்டும் தான் போலீஸ்ல பர்மிஷன் தர்றாங்க; ஆனா, ஈஸ்ட்ல பார்த்தா, 30, 40 இடத்துல பேனர்க வச்சிருக்காங்க; இந்த மாதிரி பேனர்களைக் கணக்குப் பண்ணியும், 'டவுன் பிளானிங்'ல வசூல் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன்...அதுவும் இவுங்க கணக்கு தானா?'' என்று கேட்டாள் மித்ரா.''அதுல என்ன சந்தேகம்...!'' என்று கேள்வி கேட்ட சித்ரா, அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்து, 'அந்த லிஸ்ட்ல, விஜயலட்சுமி, அசோகன்னு ரெண்டு பேரைச் சேர்க்கணும்!' என்று கூறி விட்டு, 'ம்...நீ சொல்லு' என்று திரும்பினாள்.''ரிட்டயர்டு ஆன டி.எஸ்.பி.,யே அவ்ளோ 'பவரா' இருக்காங்க. ஆனா, நம்மூர்ல இ.பி.,விஜிலென்ஸ்ல இருக்குற டி.எஸ்.பி.,க்கு, ஒரு ஜீப் கூட இல்லையாம்; மாவட்டத்துக்கே ஒரே ஆபீசர் தான்னு பேரு...ஆனா, வண்டியே கிடையாதுன்னு இ.பி.,யில சொல்லீட்டாங்களாம். ரொம்ப நேர்மையான ஆபீசர்ங்கிறதால, எதையும் கேட்டு வாங்கிக்கிறது இல்லியாம்; தன்னோட 'பைக்'லதான் கோர்ட்டுக்கே வர்றாராம்!'' என்றாள் மித்ரா.பேசிக்கொண்டே பேப்பரைப் புரட்டிய சித்ரா, உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றிய ஏதோ செய்தியைப் படித்து விட்டு, ''நம்ம ஊருல உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏதோ கருத்தரங்கம் நடத்துனாங்களே; என்ன ஸ்பெஷலாம்?'' என்று கேட்டாள்.''அந்த கொடுமைய ஏன் கேக்குற...உலக முதலீட்டாளர்கள் மாநாடுன்னா, வெளிநாட்டுல இருந்து தான் முதலீடுகளை ஈர்த்து, இங்க கொண்டு வர்றதா சொல்லுவாங்க. ஆனா, இங்க நடந்த கருத்தரங்கத்துல, 'கோவையில இருக்குற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்ல இருந்து, மூவாயிரம் கோடி ரூபா எதிர்பார்க்கிறோம்'னு ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கேட்ருக்காரு!'' என்று மித்ரா சொல்லும் போதே, குறுக்கே புகுந்தாள் சித்ரா.''இல்லியே...அதை விட அதிகமா கேட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்!''''அதுவும் உண்மைதான்...தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசுறப்போ, ''கோயம்புத்துார்ல இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபா முதலீடு வேணும்'னு கேட்ருக்காரு. அப்ப மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடான்னு, நம்மூரு இண்டஸ்ட்ரிக்காரங்க எல்லாம், தலை சுத்திப் போய்க் கெடக்குறாங்க!''''மித்து...போன வாரம் டிஎம்கே ஆபீஸ்ல நடந்த மீட்டிங்ல பயங்கர உஷ்ணமாமே?''''ஆமாக்கா...முல்லை வேந்தன், மகேஷ் பொய்யாமொழி ரெண்டு பேரையும்தான், கோவை எம்.பி., தொகுதிக்குப் பொறுப்பாளரா போட்ருக்காங்க. போன வாரம் மீட்டிங்குக்கு முல்லை வேந்தன் மட்டும் தான் வந்திருந்தாரு; அந்த மீட்டிங்ல தான், 'கோஷ்டிப்பூசல் தான் காரணமாத்தான் நம்ம பல தொகுதிகள்ல தோத்துப் போயிட்டோம்'னு முக்கியமான உடன் பிறப்புகள் ரொம்பவே உஷ்ணமா பேசிருக்காங்க!'' என்றாள் மித்ரா.''அதுக்கு இவர் என்ன சொன்னாராம்?'' என்று கேட்டாள் சித்ரா.''அவரும் பிரிச்சு மேஞ்சிருக்காரு...'தலைவர் காலத்துல இருந்தே, கோயம்புத்துார்னாலே கோஷ்டிப்பூசல் தான்னு பேராயிருச்சு; தான் மட்டும் தான் முன்னேறணும்; யாரு எக்கேடு கெட்டா என்னன்னு உள்ளடி வேலை பண்றதாலதான், மறுபடியும் மறுபடியும் இங்க தோத்துட்டு இருக்கோம்; நீங்க ஒண்ணாச் சேரலைன்னா, எந்தக்காலத்துலயும் எந்த எலக்ஷன்லயும் ஜெயிக்க முடியாது'ன்னு பேசிருக்காரு!'' என்றாள் மித்ரா.''இனிமேலாவது ஒண்ணு சேருவாங்களா?'' என்று கேட்டாள் சித்ரா.''எனக்கென்னவோ துளியும் நம்பிக்கை இல்லை; தேவைன்னா மட்டும், ஏடிஎம்கேகாரங்களோட கூட, உடன் பிறப்புகள் கூட்டணி வச்சுக்குவாங்க; தீபாவளிக்கு தி.மு.க., பிரமுகர் ஒருத்தரை 'உள்ளே' வைக்கிறதுக்கு முயற்சி பண்ணி, முடியாம, சோமையம்பாளையத்துல அவர் கட்டுன, 27 வீடுகளுக்கு 'சீல்' வச்சாங்களே; அந்த உடன் பிறப்பு மேல ஏன் இவ்ளோ கோபம்னு தெரியுமா?'' என்று நிறுத்தினாள் மித்ரா.''அதான்...பேரூர்ல நடந்த ஆர்.எஸ்.பாரதி கூட்டத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணுனது தான் காரணம்னு சொன்னாங்களே?'' என்றாள் சித்ரா.''அது ஒரு காரணம்...ஆனா, அதுக்கு முன்னாடி, அந்த உடன் பிறப்பு, சமுதாயரீதியா, ஆளுங்கட்சிக்காரங்களோட ரொம்ப நெருக்கமா இருந்து, நிறைய பலன் அடைஞ்சிருக்காராம்; கடைசியில, கட்சி மீட்டிங்லயும் போட்டுத் தாக்குனதாலதான், இவ்ளோ கோபமாம்!'' என்றாள் மித்ரா.இடையில் வந்த சித்ராவின் அம்மா, 'நீ ஹாஸ்பிடல் போகலையா?' என்று கேட்க, 'மித்துவோட போயிட்டு வர்றேன்' என்று கூறிய சித்ரா, ''மித்து...போன வாரம் நம்ம ஜி.எச்.,ல ஹெல்த் மினிஸ்டர் வந்து 'ரெய்டு' விட்டு, 'ஆடிட்' பண்ணச் சொன்னப்போ, 'எல்லாமே பக்காவா கணக்குல இருக்குறது மாதிரி சொன்னாங்களே. இப்போ, ஆடிட் கமிட்டி, வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம்!'' என்றாள்.''நானும் கேள்விப்பட்டேன்க்கா...பிடபிள்யுடிகிட்ட 'என்ஓசி' வாங்காமலே, பல வார்டுகளை 'மாடிபை' பண்ணிருக்காங்க; அதை எப்பிடி பண்ணுனீங்கன்னு துளைச்சு எடுத்திருக்காங்க; நல்லா மாட்டுவாங்க போலிருக்கு!'' என்றாள் மித்ரா.''கண்ணம்பாளையம் கோவில்ல முருகன் சிலையைத் திருடி மாட்டுனவன் கதையைக் கேளு... அதை ஐம்பொன் சிலைன்னு யாரோ சொல்ல, அதை நம்பி, அங்க எடுபிடி வேலை பாத்துட்டு இருந்தவர், அதை திருடிட்டுப் போயிருக்கார்; கடைசியில பார்த்தா, அது பித்தளை சிலையாம்; இப்போ ஆளும் மாட்டிட்டார்!'' என்று சிரித்தாள் சித்ரா.''அக்கா... வாரிசு அடிப்படையில அர்ச்சகர்களை நியமிக்கக்கூடாதுன்னு, கோர்ட்ல ஆர்டர் போட்டதை மீறி, மருதமலை கோவில்ல மூணு வாரிசுகளை, அர்ச்சகராப்போட்டு, ஆர்டர் கொடுத்துட்டாராம், நம்மூரு அறநிலையத்துறை பெரிய ஆபீசர்!'' என்றாள் மித்ரா.சித்ரா, 'கிளம்பலாம்' என்று எழுந்ததும், வண்டியைக் கிளப்புவதற்காக விரைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X