யார் பலசாலி? மோடியா? எதிர்க்கும் 10 பேரா? - ரஜினி விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

யார் பலசாலி? மோடியா? எதிர்க்கும் 10 பேரா? - ரஜினி விளக்கம்

Updated : நவ 13, 2018 | Added : நவ 13, 2018 | கருத்துகள் (155)
Advertisement
Rajinikanth, PM Modi, Bharatiya Janata, ரஜினி, ரஜினிகாந்த், நடிகர் ரஜினி, பத்திரிகையாளர்கள், மோடி, பாரதிய ஜனதா,  ரஜினி அரசியல், பிரதமர் நரேந்திர மோடி , பிரதமர் மோடி , பா.ஜ., Actor Rajini, journalists, Modi, BJP,  Rajini Politics, Prime Minister Narendra Modi, Prime Minister Modi,Kollywood, Rajini,

சென்னை: ஒருவரை 10 பேர் சேர்ந்து எதிர்த்தால் யார் பலசாலி 10 பேரா, அந்த ஒருவரா என நீங்களே (பத்திரிகையாளர்கள் ) முடிவு செய்து கொள்ளுங்கள் என நடிகர் ரஜினி சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
இவர் மேலும் கூறியதாவது:

நேற்று எடுத்த எடுப்பிலேயே 7 பேர் விடுதலை குறித்து நிருபர்கள் கேட்டனர். எந்த ஏழு பேர் என கேட்டேன். இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்ற மாயை உருவாக்குகின்றனர். தெரியும் என்றால் தெரியும் என்பேன், தெரியாது என்றால் தெரியாது என்று தான் சொல்லுவேன்

இதில் தவறு இல்லையே! என்னிடம் நேற்றைய கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை. யாரும் எதையும் திரித்து கூற வேண்டாம். நான் ஒன்றும் முட்டாள் அல்ல.

அடுத்து பா.ஜ., வை பலர் எதிர்கட்சியினர் ஆபத்தான கட்சி என நினைக்கிறார்களே என்ற கேள்விக்கு; அவர்கள் அப்படி நினைக்கிறார்கள், இதனால் ஆபத்தான கட்சியாக நினைத்தால் அப்படித்தான் தெரிவர். இவ்வாறு தான் கூறினேன். ஆபத்தான கட்சியா என்பதை மக்களே முடிவு செய்வார்கள்

கேள்வி: மோடி பலமானவரா ?


பதில்: ஒருவரை 10 பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் இதில் யார் பலசாலி ஒருவரா ? 10 பேர் சேர்ந்து ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு போனால், பலசாலி 10 பேரா ? அந்த ஒருத்தரா ? இதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்வி: அப்படியானால் மோடி பலசாலியா ?


பதில்: ( ஹா.,.ஹா..ஹா... என்ற சிரிப்பு, )

கேள்வி ; பா.ஜ., ஆபத்தான கட்சியா ?பதில் : என் கருத்தை நான் சொல்ல முடியாது. நான் அரசியலில் இன்னும் முழுசா இறங்கவில்லை. இதனால் நான் முழுசா இறங்கும்போது சொல்கிறேன்.


கேள்வி: சமீபத்திய அமைச்சர் ஜெயக்குமாரின் குளிர் விட்டு போச்சு என்ற பேச்சு குறித்து ., ?

பதில்: ஒரு அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் யோசித்து பொறுப்புடன் பேச வேண்டும். நானும் அந்த அளவிற்கு இறங்கு பேசினால் சரிப்படாது. இவ்வாறு ரஜினி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
16-நவ-201808:37:29 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar அறிவுக்கொழுந்து. அதாவது, உங்களை பத்து பேர் அடித்தால், அடிவாங்கும் நீங்கள் பலசாலி. அரசியலுக்கு வருவதற்கு உங்களுக்கு தகுதி உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
14-நவ-201810:00:42 IST Report Abuse
Selvam Palanisamy அப்படி பாக்காதீங்க ரஜினி சார் வீட்டுக்குள்ள ஒரு திருடன் வந்தா அவன பிடிக்க ஒருத்தர் மட்டுமா போறோம்? ஊரே ஒண்ணு கூடிருது இல்லையா? அது போலத்தான் எதிர்கட்சிகள் ஒண்ணு சேர்றது.
Rate this:
Share this comment
மாயவரத்தான் - chennai,இந்தியா
15-நவ-201818:55:55 IST Report Abuse
மாயவரத்தான் திருடர்கள் கூட்டமா சேர்ந்து கொள்ளையடிக்க போறதும் உண்டுதானே செல்வம் சார் ? கடந்த 2004 முதல் 2014 வரை இந்த எதிர்க்கட்சிகள் கூட்டமாக [ கூட்டணியாக ] சேர்ந்து இந்தியாவை கொள்ளையடித்தது உண்மைதானே ? மறுக்க முடியுமா ? முதலில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் பிறகு கட்டிட ஊழல் பிறகு நிலக்கரி ஊழல் பிறகு உலக புகழ்பெற்ற 2G ஊழல் பிறகு ராகுல் மச்சான் ராபர்ட் வதேரா ஊழல் இன்னும் வேணுமா ?????...
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201805:07:43 IST Report Abuse
German Tamilan In my Vision, Tamilnadu is the Lion King. all national partis like Congress BJP, etc trying attack.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X