தீபாவளி வசூல் மன்னர்கள் யார்?

Updated : நவ 13, 2018 | Added : நவ 13, 2018
Advertisement
தீக்காயத்துடன் தீபாவளி கொண்டாட்டம் முடிந்ததா?'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குவந்தாள் சித்ரா. பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட லேசான காயத்துடன், இருந்த மித்ராவின் அருகில் அமர்ந்து,''மித்து...இப்பபரவாயில்லையா?''என்றாள் ''ம்...ம்..கொஞ்சம் எரிச்சல் இருக்குங்க்கா.. மத்தபடிதேவலை,''''அதுக்குத்தான், படிச்சுப்படிச்சு சொன்னேன். கையில்வச்சு வெடிக்காதேன்னு. கேட்கலை.
சித்ரா, மித்ரா

தீக்காயத்துடன் தீபாவளி கொண்டாட்டம் முடிந்ததா?'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்கு

வந்தாள் சித்ரா.
பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட லேசான காயத்துடன், இருந்த மித்ராவின் அருகில் அமர்ந்து,''மித்து...இப்பபரவாயில்லையா?''என்றாள் ''ம்...ம்..கொஞ்சம் எரிச்சல் இருக்குங்க்கா.. மத்தபடிதேவலை,''

''அதுக்குத்தான், படிச்சுப்படிச்சு சொன்னேன். கையில்வச்சு வெடிக்காதேன்னு. கேட்கலை. அதுசரி... ஐ.ஜி.,சொன்னாலே கேட்க மாட்டேங்கறாங்க. அப்புறம் நான் எம்மாத்திரம்,''
''அக்கா...புரியற மாதிரி சொல்லுங்க''
''ரெண்டு மாசத்துக்கு முன்னால, ஐ.ஜி., பாரி இருந்தப்ப, ஆயுதபடை போலீசார் பலரும் டிரான்ஸ்பர் கேட்டு மனுகொடுத்தாங்க. அவரும், ஓ.கே.,பண்ணி,எஸ்.பி.,க்கு அனுப்பிட்டார். அதனால, காங்கயத்துக்கு, ஆயுதப்படையில் பணியாற்றிய போலீசாருக்கு ஸ்டேஷன் டூட்டி போட்டாங்க. தீபாவளி பாதுகாப்புபணி முடிஞ்சு, டிரான்ஸ்பர் போடுவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. ஆனால், டி.எஸ்.பி., அதப்பத்தி கண்டுக்காம உள்ளாராம்,''என்றாள் சித்ரா.
''ஆர்டர் போட்ட ஐ.ஜி., இல்லையே. அதனால், அவரோட ஆர்டரையும், மதிக்கலை.அக்கா... காங்கயத்தை பத்தி நானொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. சிவன்மலை பக்கத்தில், 80வயது மூதாட்டியின், 11ஏக்கர் நிலம் அடமானத்தில் இருந்தது. ஆனா, ஒப்பந்தகாலம் முடியறதுக்குள்ளயே கிரயம் செஞ்சுட்டாங்க. மூதாட்டியும், புகார் கொடுத்தார். ஆனா, அதிகாரி ரெண்டு 'எல்' வாங்கிட்டுகிட்டு, எதிர்தரப்புக்கு சாதகமாக பேசுறாராம். சிவன்மலை 'முருகன்' தான், அந்தபாட்டிக்கு நல்லவழிகாட்டோணும்,'' சொன்ன மித்ரா, தண்ணீர் குடித்தாள்.
''ஏய்...தண்ணீரை காய்ச்சி, ஆறவைச்சுகுடி. அப்பதான், கிருமிகள் தாக்காது. இல்லைன்னா, டெங்குவந்துரும்,''
''அக்கா...நீங்க பயமுறுத்தாதீங்க. மாவட்டம்பூராவும், டெங்கு, பன்றிகாய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கே .மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் என்ன பண்றாங்கன்னே தெரியலையே?''
''டெங்கு பத்தி ஏதாவது தகவல் கேட்கலாமுன்னு போன் பண்ணாக்கூட, டி.டி., ஜே.டி., யாரும் பேசக்கூட நேரமில்லாமல், 'பணியாற்றுகின்றனர், 'எங்கேயும் போய் இன்ஸ்பெக்ஷனும் செய்வதில்லை. அந்தளவுக்கு 'அவங்க' வேலையில் 'பிஸி'யாம்,''
''இவ்ளோ...ஏண்டி! கூடுதல் இயக்குநர் திருப்பூரில் ஆய்வு செய்த போதுகூட இந்த ரெண்டு பேரும் வரலைன்னா பார்த்துக்கோயேன்,''
''வர...வர... அதிகாரிங்க மக்களை மறந்திடறாங்க. மக்கள் பிரதிகளும் கண்டுக்கறதில்லை. இப்படித்தான், தீபாவளி வசூலில், அதிகாரிகள் பட்டையை கிளப்பிட்டாங்க தெரியுங்களா?''

''அட.. அப்படியா! எங்கே... யார்... எப்போ...?''கேள்விகளை அடுக்கினாள் சித்ரா.
''தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தில், கோவை கோட்ட அரசு பஸ்கள் இதுவரை இல்லாத அளவு 5.69கோடி ரூபாய், தீபாவளியின் போது வசூல் செய்துள்ளதாக எம்.டி.,அனைத்துகிளைகளுக்கும் பாராட்டு தெரிவித்து கடிதம்அனுப்பியுள்ளார். அதில், கோவை கோட்டம் 2.31கோடி; திருப்பூர் கோட்டம் 1.33கோடி மற்றும் ஈரோடு கோட்டம் 1.54 கோடி என்று தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார். மூன்றையும் கூட்டினாலும், 48.69லட்சம் சார்ட்டேஜ் ஆகிறது. இது எதனால் என,ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கு,''என்றாள்மித்ரா.

''ஏம்ப்பா...புதுசா வந்திருக்கிற உயரதிகாரி, ரொம்பவும் ஸ்டிரிட்டுன்னு கேள்விப்பட்டேன். அதெப்படி கணக்குலதப்புவரும் .ஒருவேளை குமாரசாமி கணக்கு மாதிரியோ, என்னவோ?'' என்று சிரித்தாள் சித்ரா.
அப்போது, வந்த மித்ராவின் அம்மா,''வாம்மா... சித்ரா பொடவை நல்லாருக்கு. தீபாவளிக்கு எடுத்தியா?'' என்றவாறே,காபி டம்ளரை கொடுத்தார்.
''ஆமாங்க ஆன்ட்டி''என்ற சித்ரா,காபி குடிக்க ஆரம்பித்தார்.
குறுக்கிட்ட மித்ரா, ''அக்கா...தண்ணீர் குடிச்சுட்டு,காபி குடிங்க,''என்றாள்.

''எனக்கு தண்ணி காட்டறது இருக்கட்டும். சிட்டிகமிஷனருக்கே'சீன்'போட்ட போலீஸ் பத்தி தெரியுமா மித்து?''
''சொல்லுங்க,தெரிஞ்சுக்கறேன்,''

''திருப்பூரில் பல இடங்களில் சேவக்கட்டு ஜோரா நடக்குதாம். தீபாவளிக்கு, வஞ்சிபாளையம் ரோட்டில், சிறப்பு'கட்டு'நடந்துதாம்.பப்ளிக் ஒருத்தர், கமிஷனர்ஆபீசுக்கு போன் பண்ணி தகவல் சொன்னதும், நிறைய போலீசை கூட்டிட்டு, கமிஷனர் அந்த இடத்துக்கு போனாராம். ஆனா, விஷயம் தெரிஞ்சு, எல்லாரும் பறந்துட்டாங்களாம்,'' ''நீங்களே பாருங்க. இப்படி இருந்தா, சட்டவிரோத செயலை எப்படிதடுக்கறதாம்.''

''அதுபரவாயில்லை. இதைக்கேளு. சென்ட்ரல் லிமிட்டில், ஒருவீட்டில்நகைதிருட்டு போனது. பாதிக்கப்பட்டவரின்புகாரின்பேரில், எப்.ஐ.ஆரும்,போட்டாங்க. ஆனா,திடீர்ன்னு,திருட்டு போனது 'கவரிங்நகை'தான் சொல்லி,கேஸை வாபஸ் வாங்க சொல்லி அதிகாரி அழுத்தம் தர்றாராம்.
நகையை பறிகொடுத்தவர், கமிஷனர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறாராம் மித்து,''என்ற சித்ரா, பேப்பரை புரட்டினாள். அதில், விஜிலென்ஸ் ரெய்டு செய்தியை படித்த போது, ''அக்கா... திருப்பூரில் களமிறங்கிய விஜிலென்ஸ் அதிகாரிங்க அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம்,''
''கொஞ்சம் டீடெய்லாசொல்லுடி''
''அங்கேரிபாளையம் 'டாஸ்மாக்' குடோனில், விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு செய்து,கணக்கில்வராத பணத்தை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை சோதனையிட்டதில், ஒருபேப்பரில், பத்திரிகைகாரங்க, யார் எவ்வளவு வாங்கராங்கனு லிஸ்ட் இருந்துதாம் .இதைப்பார்த்து, போலீசார் 'ஷாக்' ஆகி, விசாரிக்கறாங்களாம். இதைதெரிஞ்சுகிட்டபலரும்,'டென்ஷனா'இருக்காங்களாம்,''
''லிஸ்ட்டை வெளியிட்டா நல்லாதான் இருக்கும்,''சிரித்த, சித்ரா,''போலீசை மிரட்டும்அளவுக்கு'டாஸ்மாக்' பார் நடத்தற ஆட்களுக்கு தைரியம் வந்திருச்சு தெரியுமா?''என்றாள்.
''அடேங்கப்பா...யாருக்கா...அந்ததைரியசாலி,''
''அவிநாசிபாளையம் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், ஒருவர் இறந்துட்டார். இதில்,'பார்'போற்றும்'நீதி'மான், ஒருவர், ஸ்டேஷனுக்கு சென்று, 'அவர் வேலை செய்யற கம்பெனிக்காரங்க, நஷ்டஈடுகொடுக்கணும். சந்தேகமரணம்னு போடாதீங்க. நான்சொல்ற மாதிரிதான் எப்.ஐ.ஆர்.,போடணும்'னு,கறாராசொன்னாராம்.

''இல்லைன்னா... எஸ்.பி., ஐ.ஜி.,கிட்ட சொல்லி எல்லாரையும், டிரான்ஸ்பர் செஞ்சிருவேன்னு, பகிரங்கமா மிரட்டினாராம்.
''ஆனா.. அதுக்கெல்லாம், மசியாத போலீசார், 'சந்தேகமரணம்'னுஎப்.ஐ.ஆர்.,போட்டுட்டாங்க.''
''கரெக்ட்,அப்டித்தான்இருக்கோணும்க்கா,
'' அப்போது வந்த பக்கத்து வீட்டுபையன்,''மித்ராக்கா..உங்க டென்னிஸ் பேட் எடுத்துட்டு போறேன். நாளைக்கு கொத்திடறேன்,''என்றதும், ''ஓ.கே., எடுத்துக்கோ,'' என்ற மித்ரா,
''அக்கா..விளையாட்டுக்காக கொடுத்தநிதி எங்கே போச்சுன்னு தெரியலையாம், '' என்றாள்.

''அப்டியா..என்னாச்சு?''
''கலெக்டரா ஜெயந்தி இருத்தப்போ, 'லாங்' மற்றும் 'ஹஜம்ப்' விளையாடும் மாணவர்களுக்கு, 'பேட்' வாங்க, 1.48லட்சம்ரூபாயை, அப்போதைய உடற்கல்வி இயக்குனரிடம் 'செக்' வழங்கினார். ஆனால், ரெண்டு வருஷமாகியும்,'பேட்'வாங்கலை .பணமும் யாரிடம், எங்கு சென்றது என்பதும் தெரியவில்லையாம்,''
''அட.. .விளையாட்டு துறையையும் விட்டுவைக்கலையா?''என்றாள்சித்ரா.

''ஏக்கா... நீங்க இதுக்கே இப்படிங்கிறீங்க!மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட நிலைமையை கேட்டீங்கன்னா ... நீங்களே சொல்லுவீங்க...''
''அப்டிஎன்னநடந்தது?''
''மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், புதுசா அட்டை டோடணும்னா, 300 வெட்டணுமாம். 'நடக்க முடியாம, பல தடவ ஆட்டோ எடுத்துட்டு வந்து, செலவு பண்ண முடியாதுனு, வேறவழியில்லாம, காசு கொடுக்க வேண்டியிருக்கு'ன்னு புலம்பறாங்க,''
''இப்படி மனசாட்சியே இல்லாத, மனிதர்களை அந்த ஆண்டவன் தான் பார்க்கோணும். ஓ.கே.பா., டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன்,'' என்ற சித்ரா எழுந்து சென்றாள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X