பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை'
ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி

புதுடில்லி : 'ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில், அதை தயாரிக்கும், பிரான்சின், 'டசால்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, எரிக் டிராபியர் பொய் சொல்கிறார்' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள டிராபியர், ''பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை,'' என, பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுல்,டசால்ட்,தலைவர்,பதிலடி,பொய்,சொல்லும்,பழக்கம், எனக்கில்லை


நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக, ஐரோப்பிய நாடான பிரான்சின், 'டசால்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

தப்பிக்கவே முடியாது :


சமீபத்தில் அளித்த பேட்டியில், ராகுல் கூறியதாவது: ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில், டசால்ட் தலைமை செயல் அதிகாரி, எரிக் டிராபியர் பொய் சொல்கிறார். தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில், டசால்ட் நிறுவனம், 284 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்குவதற்காக, இந்த பணம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதில்

விசாரணை நடத்தினால், பிரதமர் நரேந்திர மோடி, இனி தப்பிக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, எரிக் டிராபியர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: கடந்த, 1953ல், அப்போதைய பிரதமர் நேருவில் துவங்கி, பல பிரதமர்களுடன், போர் விமானம் விற்பது தொடர்பாக பேசி வருகிறோம். காங்கிரஸ் அரசுகளுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளோம்.

இந்நிலையில், எங்கள் நிறுவனம் தொடர்பாக பொய்யான தகவல்களை தற்போது தெரிவிப்பது, வருத்தம்அளிக்கிறது. தற்போது, 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே, அரசு முறை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனால், 9 சதவீதம் குறைவான விலையில், இந்த விமானங்களை தர உள்ளோம்.

ஏற்கனவே செய்யப்பட்ட, 18 போர் விமானங்களை தயார் நிலையிலும், 128 விமானங்களை, இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்தைவிட, தற்போதைய ஒப்பந்தத்தில், மிகவும் குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நிர்ப்பந்தம் இல்லை :


இந்த, 36 போர் விமானங்களை தயாரிப்பதற்காக, இந்தியாவில், அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வது என்பது, நான் எடுத்த முடிவு தான். இதில் எந்த தலையீடும், நிர்ப்பந்தமும் இல்லை. தற்போது, நாங்கள் அளித்துள்ள,

Advertisement

284 கோடி ரூபாய், அம்பானிக்கு போகப்போவதில்லை. இரு நிறுவனங்களும் இணைந்து துவக்கியுள்ள நிறுவனத்தில் தான், இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் செய்யும் முதலீடுக்கு இணையான முதலீட்டை, ரிலையன்ஸ் நிறுவனமும் செய்ய உள்ளது. போர் விமானங்கள் தயாரிப்பில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், பொறியியல் துறையில் அதற்கு மிகப் பெரிய அனுபவம் உள்ளது. எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை, அனுபவத்தை ரிலையன்ஸ் பெற்றுக் கொள்ளும்; இதுதான் ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, நான் பொய் சொல்வதாக, ராகுல் கூறியுள்ளார்; அவரது கருத்து வருத்தமளிக்கிறது. எனக்கு பொய் சொல்லும் பழக்கம் இல்லை. இந்தப் பதவியில் இருந்து, நான் பொய் சொல்லவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ராகுல் வெளியிட்டுள்ள செய்தியில், 'உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தான் செய்த திருட்டை, பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marshal Thampi - Nagercoil,இந்தியா
14-நவ-201820:23:31 IST Report Abuse

Marshal Thampi HAL கு இந்த ஒப்பந்ததை கொடுக்காத ஒரே காரணத்தால் ஊழல் நடந்திருக்கிறது என்பது 100 % அம்பலம். இதில் ஒழிவு மறைவு இல்லை

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-நவ-201814:44:24 IST Report Abuse

ஆரூர் ரங்பப்புவுக்கு பாப்பா தின வாழ்த்துக்கள். என்றும் இதே குழந்தைத்தனமாக இருக்கக்கடவது.

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
14-நவ-201813:59:34 IST Report Abuse

murugu"தாஸால்ட் "நிறுவனம் ஒரு லாப நோக்க வியாபார கம்பனி பொருளை வாங்குபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து கொடுப்பதில் இருந்து அவர்கள் சொல்ல சொன்னதையே சொல்லி தன வியாபாரத்தை செய்வது அவர்களின் வியாபார தந்திரம் பொருளை வாங்குபவர் அண்மையில் நேரடியாக பிரான்சுக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியது நாடறிந்த உண்மை அப்படி இருக்க ,பொருளை விற்கும் "தாஸால்ட் "நிறுவனம் உண்மையை பேசும் என்று சொல்லுவது நகைப்புக்குரியது

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X