பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மெகா திட்டம்!
வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கிறது அரசு
ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

புதுடில்லி : தமிழகத்தின் பூம்புகார் உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில், 14 வேலைவாய்ப்பு மண்டலங்களை உருவாக்கும், மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் திட்டத்துக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் மூலம், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மெகா திட்டம்,ஒரு கோடி பேருக்கு,வேலைவாய்ப்பு


அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், நாடு முழுவதும், 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன. மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் இந்த திட்டத்துக்கு, அரசுக்கு திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை வழங்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், திட்ட ஆய்வு, மேலாண்மை பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிகிறது.

நிடி ஆயோக் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்த திட்டம் குறித்து, அமைச்சரவை குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து உருவாக்கப்படும் வேலை வாய்ப்பு மண்டலங்களில், தொழிற்சாலைகளை அமைக்கும்படி, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இது குறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேலை வாய்ப்பு மண்டலங்களை

உருவாக்குவதில், பிரதமர் அலுவலகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இவற்றின் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, பிரதமர் அலுவலகம் கூறி வருகிறது.

அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன், வேலைவாய்ப்பு மண்டலங்கள் குறித்த முடிவு இறுதி செய்யப்படும் என தெரிகிறது. தொழிற்சாலைகள், அவை உருவாக்கும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத சலுகைகள் வழங்கப்படும். தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த திட்டப்படி, 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள், நாட்டின் கடலோர மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த மண்டலங்களில், சிமென்ட், உணவு பொருள், மரப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடைகள், தோல் பொருள், ஆபரண கற்கள், நகைகள் தயாரிப்பு உள்ளிட்ட, 35 தொழிற்சாலைகளின் தொகுப்பு இடம்பெறும்.

வேலைவாய்ப்பு மண்டலங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த, 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, முதல் கட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த தொகையை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில், குறைந்தபட்சம், 2,000 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்.

துறைமுகம் சார்ந்த தொழில் மயமாக்கல் அடிப்படையில், வேலை வாய்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம், 'இந்தியாவில் தயாரியுங்கள்' பிரசாரத்துக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கவும், துறைமுகம் சார்ந்த தொழில் நடவடிக்கைகளில், இந்தியாவை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வி.சி.ஐ.சி., எனப்படும், விசாகப்பட்டினம் - சென்னை தொழில் பாதை, ராமேஸ்வரம், குஜராத்தில் கட்ச், சூர்யபூர், சவுராஷ்டிரா, கேரளாவில் மலபார் உட்பட, 14 வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள் :


• மெகா வேலைவாய்ப்பு திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், உற்பத்தி களங்கள் அமைக்க, தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்
* ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
* ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு
* தொழிலாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழில் பிரிவுகளுக்கு முன்னுரிமை
* மின்னணுவியல், சிமென்ட், உணவு பொருள் போன்றவற்றின் உற்பத்திக்கும் அனுமதி
* கடலோர பகுதிகளில், 2,000 ஏக்கர் நிலம் அளிக்கக்கூடிய மாநிலங்கள், திட்டத்தில் சேர்ப்பு
* அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த சலுகைகள்


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan - Bangalore,இந்தியா
24-நவ-201816:45:58 IST Report Abuse

Raghunathanஎலெக்ஷன் வருகிறது . நாலரை வருடம் பொருளாதாரத்தை கொலை செய்த பிறகு இப்போது விழித்துக்கொண்டு என்ன பயன் ??

Rate this:
G R MOORTHY - chennai,இந்தியா
16-நவ-201813:33:03 IST Report Abuse

G R MOORTHYபிரதமர் மோடியை கேலியூம் கிண்டலும் செய்து ஒரு சராசரி மனிதர்களைப்போல் எழுதியிருக்கிறார்கள் என்ன உங்கள் யாருக்குமே அவரைப்பற்றி ஒரு நல்ல எண்ணமோ அபிப்பிராயங்களோ வராதா ? கடந்த நான்கரை ஆண்டுகளாக வேறு எந்த இந்தியா பிரதம மந்திரிகள் செய்யாத நல்ல நல்ல விஷயங்களையும், வேலைகளையும், திட்டங்களையும் செய்து கொண்டுவருகிறார். எந்த விஷயங்களையும் முழுமையாகத்தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துக்களை பதிவு செய்யாதிர்கள். என்னுடைய இந்த கூற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Rate this:
14-நவ-201820:09:49 IST Report Abuse

Arul Krish😂😂😂😂😂

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X