பதிவு செய்த நாள் :
தடையில்லை,அனைத்து வயது,பெண்களும்,சபரிமலை,செல்லும் ,உத்தரவு,தடையில்லை

'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற, முந்தைய உத்தரவுக்கு, தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது' என, தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்களை, ஜன., 22ல், விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், விரைவில் துவங்கவுள்ள மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளின் போது, பிரச்னை வருமா என்ற கவலை, பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற நடைமுறை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது.

சீராய்வு மனு :


இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நேற்று விசாரித்தது; பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களுடன், நான்கு, 'அப்பீல்' மனுக்களையும் சேர்த்து, வரும், ஜன., 22-ம் தேதி விசாரிக்கப்படும்.

பக்தர்கள் கவலை :


இது தொடர்பாக மனுதாரர்களுக்கும், மத்திய - மாநில அரசு, தேவசம்போர்டுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். எனினும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என, செப்டம்பரில்

பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், விரைவில் துவங்கவுள்ள, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளின் போது, பிரச்னை வருமோ என்ற கவலை, பக்தர்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாக உள்ளது. ஜன., 22-ம் தேதி மறுசீராய்வு மனுக்களை விசாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஜன., 20 வரை மகர விளக்கு பூஜைகள் நடக்கும். முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்பதால், அனைத்து வயது பெண்களும், சபரிமலைக்கு செல்லலாம்; அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


திருப்தி தேசாய் அடம்!

சபரிமலை வழக்குக்கு அடிப்படை காரணமாக விளங்கிய, திருப்தி தேசாய் என்ற பெண், கார்த்திகை முதல் வாரம் சபரிமலை செல்ல இருப்பதாக கூறியுள்ளார். மறு சீராய்வு மனுக்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில், திருப்தி தேசாய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


நல்லதே நடக்கும்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் மீது, மறு விசாரணை நடத்தப்பட உள்ளது; இது, அய்யப்பன் அருளால் வந்த தீர்ப்பு. அய்யப்பன் அருளால் எல்லாம் நல்லதாக நடக்கும்.

-தந்திரி கண்டரரு ராஜீவரரு


இறுதி தீர்ப்பு அல்ல!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி அல்ல என, ஏற்கனவே கூறினோம்; அது உறுதியாகியுள்ளது. பழைய உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றம் தந்துள்ளது.

-சசிகுமார் வர்மா, பந்தளம் மன்னர் குடும்பம்


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
14-நவ-201820:11:53 IST Report Abuse

r.sundaramஇது ஒரு தவறான தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தான் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டு, மக்கள் எதிர்ப்பால் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை பண்ண ஒப்புக்கொண்டு விட்டு, முதல் தீர்ப்பு அது வரையில் செல்லும் என்று கூறுவது அப்பட்டமான ஒரு அதிகார துஷ்ப்ரயோகம். இது ஒரு இயற்கையான நீதி கிடையாது. அந்த தீர்ப்புக்கு முன் இருந்த நிலையையே செல்லும் என்று கூறி இருக்க வேண்டும். இது பரிசீலனைக்கு பிறகு வரும் தீர்ப்பின் ஒரு முன்னோட்டமாகவே என்னால் பார்க்க முடிகிறது. அதுவும் சபரிமலை சீசன் தொடக்கி முடியும் வரை முன் தீர்ப்பு செல்லும் என்று சொல்வது மிகவும் தவறு. வரும் பத்தொன்பதாம் தேதி சீசன் தொடங்க இருக்கும் நிலையில் இதை அவசர வழக்காக எடுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த தீர்ப்பின் முன் எந்த நிலை இருந்ததோ அதை சீசனில் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் வருந்தத்தக்கது.

Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
14-நவ-201818:58:50 IST Report Abuse

SENTHILஜனவரி தீர்ப்பில் பெண்கள் செல்ல கூடாது என தீர்ப்பு மாறினால் என்ன நடக்கும். அதுவரை நித்ய கண்டம் பூர்ண ஆயுசா? அதுவரை போராட்டங்கள் தானா? இது தேவையா? .என்ன நடக்குது அங்க. செத்தவனை புதைக்க நடு நிசியில் கூடும் மன்றம் கடவுளுக்கு இல்லையா. இல்லை கடவுளிடம் காசு தேறாது என வாதம் இல்லையா.? இருக்கு எல்லோருக்கும் இருக்கு.

Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
14-நவ-201816:41:54 IST Report Abuse

Loganathaiyyanதீர்ப்பில் உச்ச அநீதிமன்றம் ஜனவரி எந்த வருடம் என்று குறிப்பிடவில்லையே, அடுத்த என்றால் 2018 க்கு பின் வரும் எல்லா வருடமும் தான் 2019 , 2020 , 2021 ......எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாமே..

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X