எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிரடி!
விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்'
முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி

முறைகேடுகளை தடுக்க, இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயிகளிடம் இருந்து, 'ஆதார்' எண் விபரங்களை பெற, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை


தமிழகத்தில், விவசாயத்தை ஊக்கப்படுத்த, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போது வரை, 21 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு, மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்தத் தொகையை, மின் வாரியத்திற்கு மானியமாக, தமிழக அரசு வழங்குகிறது.

நேரடி மானியம் :


அரசியல் பின்புலம் உள்ளவர்கள், வசதி படைத்தவர்கள், ஒரே பெயரில், பல விவசாய மின் இணைப்புகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையில், முறைகேடுகளை தடுக்க, நேரடி மானிய திட்டத்தை

செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களிடம், 'ஆதார்' எண் வாங்கப்பட்டன.

சந்தை விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், ஆதார் எண் கொடுத்துள்ள வாடிக்கையாளரின் வங்கி கணக்கில், அதற்கான மானிய தொகையை, மத்திய அரசு, நேரடியாக வரவு வைக்கிறது. இதனால், ஒரே பெயரில், பல காஸ் இணைப்புகள் பெற்றது கண்டறியப்பட்டது. பின், அவை, ரத்து செய்யப்பட்டதால், மத்திய அரசுக்கு செலவு மிச்சமானது. மிச்சமான செலவுகளில் இருந்து, கூடுதல் காஸ் இணைப்புகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதிக புகார் :


இதனால், மானிய திட்டங்களில், முறைகேட்டை தடுக்க, பயனாளிகளிடம் இருந்து, ஆதாரை பெறுமாறு, மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயிகளிடம் இருந்து, 'ஆதார்' எண் விபரங்களை வாங்க, மின் வாரியம் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவில், விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில், மின்சாரம், மின் வழித்தட செலவு என, அனைத்தும் இலவசம்;

Advertisement

சுயநிதி பிரிவில், வழித்தட செலவை, விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.

தற்போது, சுயநிதி பிரிவில், அதிக கட்டணம் உள்ள, 'தத்கல்' திட்டத்தில் மின் இணைப்பு வழங்கும் போது, ஆதார் பெறப்படுகிறது. ஏற்கனவே உள்ள, 21 லட்சம் விவசாய மின் இணைப்புகளிலும், ஒருவரே பல இணைப்புகள் வைத்திருப்பதாக அதிக புகார்கள் வருகின்றன. அனைவரிடமும், ஆதார் வாங்கினால், யாரெல்லாம் கூடுதல் மின் இணைப்பு பெற்றுள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.

இதன்படி, கூடுதல் மின் இணைப்புகளை ரத்து செய்து, விவசாயத்தில் ஆர்வம் உள்ள, முதல் தலைமுறை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
14-நவ-201819:05:13 IST Report Abuse

SIVA G  indiaஇலவச மின்சாரம் தானே நாள் முழுவதும் தண்ணீர் இறைத்து, தேவைக்கு மேல் வடிகால் வழியாக தண்ணீர் வீணகிறது. மின்சாரமும் நிலத்தடி நீரும் வீண் ஆகிறது.முதலில் பில் கட்டி விட்டு இரண்டு மாதம் கழித்து மானியம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
14-நவ-201814:52:43 IST Report Abuse

ramanathan//வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையில், முறைகேடுகளை தடுக்க, நேரடி மானிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது//இது எல்லாம் சரிதான்.ஆனால் கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒரு சிலிண்டர்ருக்கு 50..100 ரூபாய் கூடுதலாக கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள் .இதில் கிடைக்கும் கூடுதல் வருவாயை வாய்மூடி வேடிக்கை பார்க்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்கிறார்கள். பெரும்பாலான கேஸ் வினியோக உரிமையாளர்கள் களவாணி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.இந்திய பெட்ரோலியதுறை மீடியாக்கள். .பல்லிலுத்துக்கொண்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுஅதிகாரம் பெற்றவர்களாக விளம்பரப்படுத்தி கொள்ளும் நீதிமன்றம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு என்ன தீர்வு சொல்லப்போகிறார்கள்.

Rate this:
SENTHIL - dammam,சவுதி அரேபியா
14-நவ-201819:31:52 IST Report Abuse

SENTHILwell சைட் bro ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:51:35 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆதார் வாங்கினால், யாரெல்லாம் கூடுதல் மின் இணைப்பு பெற்றுள்ளனர் என்ற விபரம் தெரியவரும். வேற வேற இடங்களில் ஒரே நபர் பெயரில் மின் இணைப்பு பெற்று இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது ஒரு வளவில் ஒரு ஆள் பெயரில் ஒரு மின் இணைப்பு இருக்கலாம் பல வளவுகளில் ஒரே ஆள் பேரில் பல மின் இணைப்புக்கள் இருக்கலாம்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X