இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி: மோடி

Added : நவ 14, 2018 | கருத்துகள் (49)
Advertisement
Singapore Fintech Festival 2018 ,Narendra Modi, Technology Revolution,மோடி, இந்தியா, சிங்கப்பூர், பின்டெக்விழா, தொழில்நுட்ப புரட்சி,  பிரதமர் மோடி, 
பயோமெட்ரிக்  , டிஜிட்டல் பண பரிவர்த்தனை, இந்தியா பொருளாதாரம் , 
 ASEAN-India Summit, 
Modi, India, Singapore, fintech Festival,  Prime Minister Modi,
Biometric, Digital Cash Transaction, India Economy,

சிங்கப்பூர் : இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பின்டெக் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர், திறமையானர்கள் கூடியுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. டிஜிட்டல் நிதித்துறையில் சிங்கப்பூர் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. இதனால் 130 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளது.

உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாக உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புக்களையும் உருவாக்கி தருகிறது. 2014 ம் ஆண்டு என்து தலைமையிலான ஆட்சி வந்த பிறகு ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு புறநகர் கிராமங்களும் வளர்ச்சி திட்டங்களால் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா. விரைவில் உலகின் தொடக்க மையமாக இந்தியா மாறும்.

120 கோடி பேருக்கு வங்கி கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளது. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-நவ-201816:47:28 IST Report Abuse
Malick Raja நல்லா பேசுறாரு யாருங்க .பொய்யை உண்மையாக்கி பேசும் திறமை இவரது தனி சிறப்புங்க.. அப்பாலே நாடு நல்ல வளர்ச்சிங்கோ எப்படின்னு பாருங்களேன் .. டீசலு 55.ரூபாய்க்கும் ,பெட்ரோல் 65.ரூபாய்க்கும் . எரிவாயு 425.க்கும் 2014.ல் இருந்துச்சுங்கோ .. மகராசன் வந்தாரு பாருங்கோ டீசல்ரூ 76. பெட்ரோல் ரூ 82. எரிவாயு ரூ 900.00 .இப்படி நாள்ல வளர்ச்சிங்க .. நாட்டிலே பாருங்க தொழில் புரட்சிங்க கப்ப கப்பலா ஏற்றுமதிங்கோ அதுனாலே அமெரிக்கன் டாலர் roo. 55. ளிலிருந்து ரூ 77.க்கு நல்ல வளர்ச்சிங்க . ஆமாங்கோ உலகம் பூரா இருக்குற மக்களெல்லாம் பார்த்து பார்த்து பூரிச்சு பூட்டாங்கோ ..அப்பூடி ஓடி ஓடி சுத்தி சுத்தி சுத்தி சுழன்று வேலை செய்யிறாரருங்க எங்க பிரதமர் மோடி ... ஆமாங்கோ அப்பாலே மோடிக்கிங்கோ மனைவிங்கோ இருக்காங்கோ ஆனா வெளியே தெரியாதுங்க .. அந்தமாதிரி நல்லாட்சி தானுங்களே இப்ப நடக்குதுங்கோ
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
14-நவ-201815:15:45 IST Report Abuse
Rajathiraja ஆமாம் ஆமாம் GST க்கு பிறகு ஒரு கோடிக்கு உற்பத்தி செய்பவர் ஓராயிரம் கோடிக்கு உற்பத்தி செய்பவருடன் மோதி கொண்டிருப்பதே புரட்சி தான். ஒரே நாடு ஒரே வாரியாம். ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் தனி வரியாம். இது தொழில் புரட்சி அல்ல சிறு தொழில் வறட்சி தான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-நவ-201814:54:10 IST Report Abuse
ஜெயந்தன் 2019 இல் மக்களின் ஒரு விரல் புரட்சி தான் ஒரே நம்பிக்கை...ஆனால்..இவர் சொல்லுவதை பார்த்தால் EVM ல ஏதோ புரட்சி செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X