'கேதார்நாத்' படத்திற்கு காங்., எதிர்ப்பு

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018 | கருத்துகள் (11)
Advertisement
கேதார்நாத், ஹிந்தி படம்,  காங்கிரஸ் எதிர்ப்பு, மந்தாகினி நதி கரை, கேதார்நாத் கோவில், கேதார்நாத் வெள்ளம், காரிமா தசானி, பாரதிய ஜனதா, பா.ஜ., 
Kedarnath, Hindi film, Congress, Mandakini river , Kedarnath temple, Kedarnath flood, Karima Tasani, Bharatiya Janata, BJP,

புதுடில்லி: 'கேதார்நாத்' வெள்ள பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஹிந்தி படத்திற்கு பா.ஜ.,வை தொடர்ந்து காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


2013ல் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு


உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயமலையில், மந்தாகினி நதி கரையில் உள்ள கேதார்நாத் கோவில் புகழ் பெற்றது. இந்த பகுதியில் 2013ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.


இதை மையமாக வைத்து, 'கேதார்நாத்' என்ற ஹிந்தி படம் எடுக்கப்படுகிறது. 'தோனி' படத்தில் நடந்து புகழ் பெற்ற சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலி கான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை பார்த்து, பா.ஜ., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பா.ஜ., மீடியா குழுவை சேர்ந்த அஜேந்திர அஜய் என்பவர் திரைப்பட தணிக்கை குழு தலைவர் பிரசூன் ஜோஷிக்கு எழுதிய கடிதத்தில், ' இந்த படம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.


லவ் ஜிகாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல உள்ளது. மிகப்பெரிய இயற்கை சீற்றத்தின் பின்னணியில், ஒரு காதல் படம் எடுத்து வருகின்றனர். கேதார்நாத் கோவில் இந்துக்களுக்கு புனிதமானது. இந்துக்களை பட குழுவினர் அவமதித்து விட்டனர்' என, குறிப்பிட்டு இருந்தார்.


நம்பிக்கையுடன் விளையாட கூடாது


இச்சூழ்நிலையில், 'கேதார்நாத்' படத்திற்கு காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காரிமா தசானி இது குறித்து கூறியதாவது:


கேதார்நாத் பகுதிக்கு பாலிவுட் நடிகர், நடிகைகளை அழைத்து வந்து படபிடிப்பு நடத்துவது, சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதாக இருக்கலாம். அதே நேரத்தில், அங்கு என்ன செய்யலாம், எவற்றையெல்லாம் செய்ய கூடாது என்பதை அரசு எடுத்து கூறி இருக்க வேண்டும். எங்கள் நம்பிக்கைகளை மீறி யாருக்கும் உரிமை இல்லை. சார்தாம் என அழைக்கப்படும் நான்கு முக்கிய கோவில்களில், கேதார்நாத் கோவிலும் ஒன்று. கோடிக்கணக்கான இந்துக்கள் அந்த கோவில் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.


அப்படத்தில் முத்த காட்சி வருகிறது. இந்துக்களின் நம்பிக்கைகளுடன் பட குழுவினர் விளையாடி வருகின்றனர். இப்பிரச்னை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201807:58:14 IST Report Abuse
Srinivasan Kannaiya கேதார்நாத் கோவில் இந்துக்களுக்கு புனிதமானது. இந்துக்களை பட குழுவினர் அவமதித்து விட்டனர்' ..
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201820:07:33 IST Report Abuse
Pugazh V இந்த படத்தை பார்க்காமலே கருத்து போடறாங்க பாருங்க.. தமிழனால மட்டுமே முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
14-நவ-201817:11:27 IST Report Abuse
Mithun அட்ர சக்க அட்ரா சக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X