பொது செய்தி

இந்தியா

கோவில் விழாவிற்காக விமான இயக்கம் நிறுத்தம்

Added : நவ 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
கேரளா, திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவில், ஆராட்டு, விழா, ஊர்வலம், விமான நிலையம், ஓடுபாதை, விமானம், இயக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் விழா ஊர்வலத்திற்காக, சில மணி நேரம் விமான இயக்கம் நிறுத்தப்பட்டது.


ஆண்டுக்கு இருமுறை


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில், ஆண்டுக்கு இரு முறை ஆராட்டு விழா நடத்தப்படும். இதற்காக உற்சவர் சிலை, கருட வாகனத்தில் ஊர்வலமாக சங்குமுகம் கடற்கரை பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.திருவிதாங்கூர் அரசின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பால ராம வர்மா காலத்தில் இருந்து இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆராட்டு ஊர்வலம் செல்லும் வழியில் தான் தற்போது திருவனந்தபுரம் விமான நிலைய ஓடு பாதை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் இந்த ஊர்வலத்தின் போது சில மணி நேரம் விமான இயக்கம் நிறுத்தப்படும்.


4 மணி முதல் 9 மணி வரை


அதன்படி, இன்று (நவ.,14) இந்த ஊர்வலத்தை ஒட்டி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி நேரம் வரை விமான இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,' விமான ஓடுபாதை வழியாகத் தான் ஊர்வலம் செல்லும். ஆராட்டு விழா முடிந்த பிறகு அதே பாதையில் தான் திரும்பி வருவார்கள். அதுவரை விமான இயக்கம் இருக்காது. இந்த ஊர்வலத்தில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை ஒட்டி நோட்டீஸ் வெளியிடப்படும். அதற்கு ஏற்றவாறு விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றி அமைத்து கொள்வார்கள்.
ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் தங்கள் விமான இயக்க நேரத்தை ஏற்கனவே மாற்றி அமைத்துள்ளனர். ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் சிறப்பு பாஸ் வழங்குவார்கள். அந்த பாஸ் இருப்பவர்கள் மட்டுமே விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய முடியும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201807:55:23 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு வேளை அந்த விமான ஓடு பாதை இருக்கும் இடம் திருவிதாங்கூர் சமஸ்த்தானம் கொடுத்ததோ என்னவோ...
Rate this:
Share this comment
Cancel
sasi kumar - Doha,கத்தார்
15-நவ-201807:53:41 IST Report Abuse
sasi kumar Communist philosophy is equal rights to all. They are implementing SC ruling of allowing women to temple. Why the national parties did not object in SC when this case is heard? Communist is following their philosophy where as other parties are trying to gain advantage by using this as vote bank politics. Because of the same communist lower e people were allowed in temple. Anyway if SC change the verdict then it will affect the fundamental rights of women. Whatever be the SC verdict in Jan-19, it will give rise many other cases in future. All the temple rules are formed the so called the agents of God for their survival and not by God. If this agents teach true Hinduism to all our children's in school then this dummy secularist will not survive.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
15-நவ-201803:33:02 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) ஒரு வேளை இதற்கு தடை கோரினால், பிறகு முன்பு கோவில் நிலத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தது முதல் சமீபத்தில் கிடைத்த நகைகள் வரை ஒன்று விடாமல் அரசிடம் இருந்து திரும்ப பெறவேண்டும். கோவிலுக்கு வரும் வருமானத்தை யாரை கேட்டு அரசு எடுத்துக்கொள்கிறது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X