சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி

Added : நவ 14, 2018
Advertisement

புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு, தற்காலிக தடை விதிக்க கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கேரளாவில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுடைய பெண்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது இல்லை.பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை எதிர்த்து, சில அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து, 'சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட போது, பெண்கள் சிலர், கோவிலில் தரிசனம் செய்ய முயன்றனர். எனினும், ஏராளமான பக்தர்கள், கோவிலில் பூஜை செய்யும் தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த பெண்கள், அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.இதற்கிடையே, 'சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, பல்வேறு அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்களை, ஜன., 22ல் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதுவரை, சபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கோர்ட் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கார்த்திகை மாத மண்டல பூஜைக்காகவும், மகர ஜோதியை முன்னிட்டும், சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.அப்போது, அதிக அளவிலான அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு வருவர் என்பதால், பெண்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி, தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின், பெண்கள் உறுப்பினர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு, ஜன., 22ல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதால், அதுவரை, அந்த கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு, தற்காலிக தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று, தள்ளுபடி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X