பதிவு செய்த நாள் :
நவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய்
தர்மசங்கடத்தில் கேரள அரசு

சபரிமலை: நவ., 17-ம் தேதி சபரிமலை வருவதாக திருப்தி தேசாய் வெளியிட்டுள்ள அறிவிப்பு கேரள அரசுக்கும் போலீசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவ.17,சபரிமலை,வருவேன்,திருப்தி தேசாய்,தர்மசங்கடத்தில்,கேரள அரசு


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை, தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ஜன., 22-ம் தேதி மறு சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடக்கவுள்ளது. இதனால் எல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உத்தரவு அமலில் நீடிப்பதால் பெண்கள் வந்தால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை தேவசம்போர்டுக்கும்,

கேரள அரசுக்கும் உண்டு என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மண்டல மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த பிரச்னையில் பிடிவாதத்தில் இருந்த பினராயி அரசு, திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. ஜன., 22 உச்சநீதிமன்ற விசாரணையில் இறுதி முடிவு வரும் வரை பெண்களை அனுப்பும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த முடிவு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்கிற்கு முக்கிய காரணமானவரான பெண் உரிமை இயக்க பிரமுகர் திருப்தி தேசாய் நவ., 17-ம் தேதி சபரிமலை வர இருப்பதாக அறிவித்துள்ளார். தன்னுடன் மேலும் ஆறு பெண்கள் வர உள்ளதாகவும், பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கேட்டும் அவர் பிரதமர் மற்றும் கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement''நான் சபரிமலை வருவது உறுதி. தரிசனம் நடத்தாமல் திரும்பி செல்ல மாட்டேன்,'' என்றும் அவர் கூறியுள்ளார். இது கேரள அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்தி தேசாய் வந்தால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அசம்பாவிதங்கள் நடந்தால் உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி வரும். கார்த்திகை முதல் நாளே பதட்டமான நிலை வந்து விடுமோ என்ற பரபரப்பு கேரள போலீசாருக்கு தொற்றியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-நவ-201808:03:32 IST Report Abuse

Sanny இப்படி இறுமாப்புடன் இவங்க சபரிமலைக்கு வருவது, பக்தியினால் அல்ல, விதண்டா வாதம், விரோதம், கண்டிப்பாக தடுக்கப்படணும் இந்த பெண்மணி கூட்டத்தை.

Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
16-நவ-201817:37:40 IST Report Abuse

Subramaniamதமிழகத்தில் ஜல்லிக்கட்டு , கேரளத்தில் சபரிமலை இவ்வாறாக தென்னிந்தியர்களை சுய கௌரவத்துடன் வாழ விடாது தாழ்வு மனதுடன் அடிமை சிந்தனையை வளர்க்க முயலும் அதிகார வர்க்கத்தின் சதி

Rate this:
Karun Muruga - banglore,இந்தியா
16-நவ-201816:48:47 IST Report Abuse

Karun Murugaபண திமிர் எங்கிருந்து எப்படி காசு வருகிறது விமானத்தில் வந்து..ஹோட்டல் தங்கி.. குழப்பம் விளைவித்து திரும்ப வேண்டும் இதுதான் எண்ணம் ..விளம்பரம் தேவை உள்நோக்கம் என்ன...

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X