அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்
தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை : 'அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சிகளை வீழ்த்த, கருணாநிதியின் நினைவை போற்றும், 100வது நாளில், சூளுரைப்போம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.

அதிமுக,பாஜ,ஆட்சியை,வீழ்த்துவோம்,தொண்டர்களுக்கு,ஸ்டாலின், கடிதம்


கருணாநிதியின், 100ம் நாள் நினைவு தினத்தையொட்டி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: கருணாநிதியை, நொடிக்கு நுாறு முறையாவது நினைக்காமல் இருப்பதில்லை. அவர் நம்மிடம் இல்லாமல், 100 நாட்கள் கடந்த நிலையிலும், நம் நினைவில், அவரே நிறைந்திருக்கிறார்.

கருணாநிதி, பல பிரதமர்கள், ஜனாதிபதிகளை தேர்ந்தெடுத்தவர். குறைந்தபட்ச

செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் வழியே, ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களையும் பாதுகாத்தவர். அவர் வகுத்து தந்த வழிமுறை, இன்றைய காலகட்டத்தில், மிகவும் அவசியமாக உள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, ஆளும் மதவெறி சக்திகளிடமிருந்து, இந்தியாவை மீட்கும் நல்லெண்ணத்துடன், வலுவான மதசார்பற்ற அணி அமைக்கும் முயற்சியாக, என்னை சந்தித்தார். அவரின் முயற்சிக்கு, தி.மு.க., துணை நிற்கும். அதே எண்ணத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி, என்னை சந்தித்தார்.

நாட்டின் எதிர்காலத்தை காக்கும் சமிக்ஞைகள் வெளிப்படத் துவங்கி விட்டன. அதற்கு கட்டியம் கூறும் வகையில், நவ.,8ல் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் நகரில், தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.

'ஜனநாயக அறப்போர்' என்ற தலைப்புடன், அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சிகளை அகற்றும் இலக்குடன், கட்சியின் படைவரிசை அங்கே

Advertisement

திரண்டது. தமிழகம் முழுவதும் படையணி திரட்டப்படும். இந்திய அளவில் அது, வலிமைப்படுத்தப்படும். மக்கள் விரோத ஆட்சி செய்யும் இரு பிரிவினரையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிப்போரையும், இந்த ஜனநாயகப் படை எதிர்கொள்ளும்.

அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆட்சிகளை, ஜனநாயக வழியில் அகற்றுவதும், விரட்டுவதும் தான் நம் ஒரே இலக்கு.இதற்காக, கருணாநிதியின் நினைவை போற்றும், 100வது நாளில், நெஞ்சுயர்த்தி சூளுரைப்போம். அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழ் உலகம் மகிழ, வென்று காட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-நவ-201803:04:01 IST Report Abuse

Manianஏம்பா சுடலை நாயுடு, மத சார்ப்பார்ன்னு சொன்ன, அதிலே இந்து மட்டுமில்லை, கிருஸ்துவன், முகலாயன், பவுத்தர்கள் எதுவுமே அதில் இருக்க கூடாது. யோகா குரு ராம் தேவ் கேக்குறாரே- நிஃகளும் கோயில் கோலியலா போன்னிங்க, அப்போ நீங்க எப்படி மத சார்பு இல்லாம இருக்குறேன்னு சொல்ல முடியும்.

Rate this:
m.sankar_ - chennai,இந்தியா
16-நவ-201819:22:59 IST Report Abuse

m.sankar_சுடலை நீயும் உன் அப்பனும் தமிழருக்கு செய்த துரோகம் மறக்கமுடியுமா படுபாவி. எல்லாருக்கும் தெரியும் நீயும் உன் குடும்பவும் எவளவு துரோகம் இலங்கை தமிழருக்கு .செய்திங்க நீஈங்கள் சாத்யமா ஒருகாலமும் முதலமைச்சராக ஆகமுடியாது. இலங்கை தமிழர்கள் ஆத்ம கருணாநிதி குடும்பத்தை ஒரு காலமும் மன்னிக்காது.

Rate this:
R S GOPHALA - Chennai,இந்தியா
16-நவ-201815:49:07 IST Report Abuse

R S GOPHALAஐயோ சுடாலின். உன் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நீ சிஎம் ஆகவே முடியாது. உனக்கு அந்த யோகம் இல்லை. வீணாக ஏன் அறிக்கை விட்டுக்கொண்டு திரிகிறாய். உன் அறிக்கைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. எல்லோரும் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உன் அப்பா பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். உங்களுக்கு வெளிநாடுகளில் ஏராளமான ரிசார்டுகளும் தனி தீவுகளும் இருக்கின்றன. அங்கே பொய் ஜாலியாக இருக்கவேண்டியதுதானே...?? இன்னும் என்ன எழவு அரசியல் வேண்டி கிடக்கிறது ? போதும் நீங்கள் செஞ்ச அரசியல். நாட்டையே குட்டி செவுர் பண்ணி நாசம் செஞ்சாச்சு. விட்டுடுங்க... போதும் நீங்க ஆட்சி செஞ்சி எழவு எடுத்தது.

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X