சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கஜா புயல் தாக்குமா?

சென்னை : வங்க கடலில் உருவாகி, பல நாட்களாக மிரட்டும், 'கஜா' புயல், இன்று மாலை கடலுாருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா,புயல்,தாக்குமா?


வங்க கடலில், ஐந்து நாட்களுக்கு முன் உருவான கஜா புயல், இன்று காலை கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் மெதுவாக நகர்வதால், இன்று மாலை கடலுாருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல், நவ., 14 நிலவரப்படி, சென்னைக்கு, 490 கி.மீ., துாரத்திலும், நாகப்பட்டினத்துக்கு, 580 கி.மீ., துாரத்திலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல், மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று மாலை, கடலுாருக்கும், பாம்பனுக்கும் இடையில் புயல் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடலுார், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும்.

மணிக்கு, 100 கி.மீ., வரை காற்று வீசும். கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் இன்று வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். படகுகளை பத்திரமான இடங்களில் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பல நாட்களாக மிரட்டும் கஜா!


* நவ.,7 - தாய்லாந்து அருகே, காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

* நவ.,8 - அந்தமான் பகுதிக்குள் நுழைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியானது

* நவ.,9 - காற்றழுத்த தாழ்வு பகுதியானது, புயல் சின்னமானது

* நவ.,10 - புயல் உருவாகி, அதற்கு கஜா என பெயர் வைக்கப்பட்டது

Advertisement

* நவ.,11 - அந்தமானுக்கு வடக்கில் புயல் நகர்ந்து, ஆந்திராவை நோக்கி பயணித்தது

* நவ., 12 - சென்னையை நோக்கி, தென் மேற்காக புயல் திரும்பியது: சென்னையில் இருந்து, வடகிழக்கில், 730 கி.மீ., மற்றும் நாகையில் இருந்து, 820 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டது

* நவ.,13 - சென்னையில், வட மேற்கில், 740 கி.மீ., மற்றும் நாகையில் இருந்து, 830 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது

* நேற்று, சென்னைக்கு கிழக்கில், 490 கி.மீ., மற்றும் நாகைக்கு வடகிழக்கில், 580 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது

* இன்று தீவிர புயலாக மாறி, கரையை கடக்கும் போது, புயலாக வலுவிழக்க வாய்ப்புள்ளது


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prasath -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201808:32:12 IST Report Abuse

prasathkajavai nambi rain coat vagivittean... Rain coat kaaiyil vandhu vittadhu.. kajaa innum varavillai...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201808:26:59 IST Report Abuse

Srinivasan Kannaiyaபாலச்சந்திரனே சொல்லமுடியாத விவகாரம்

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
15-நவ-201806:51:44 IST Report Abuse

தங்கை ராஜாஅதீத முன்னேற்பாடுகளாலும் ஊடக பிரச்சாரத்தாலும் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பாதிப்புகள் இல்லாத நல்ல மழை கிடைக்க இறையருளை வேண்டுகிறேன்

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X