சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (61)
Advertisement
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.பக்தர்கள் போராட்டம்சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை
Sabarimalai Ayyappan, Pinarayi Vijayan, Supreme Court, Karthigai pooja, சபரிமலை, கேரளா முதல்வர் பினராயி விஜயன்,  உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், பினராயி விஜயன், கேரளா முதல்வர், சபரிமலை அய்யப்பன் கோவில், கேரளா அனைத்துக்கட்சி கூட்டம், கார்த்திகை மாத பூஜை, சபரிமலை அய்யப்பன், 
Sabarimalai, Kerala Chief Minister Pinarayi Vijayan, Kerala Chief Minister, Sabarimala Ayyappan Temple, Supreme Court, Kerala All Party meeting,

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.


பக்தர்கள் போராட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.


விசாரணைக்கு ஏற்பு

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை, விசாரித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற, முந்தைய உத்தரவுக்கு, தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை, ஜன., 22ல், விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


தோல்வி

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நாளை(நவ.,16) மாலை சபரிமலை அய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் பா.ஜ., உள்ளிடட கட்சியினர் கலந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


கடமை

முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: செப்.,28 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கமாகும். தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


நிறுத்தம்

இதனிடையே, கார்த்திகை மாத பூஜைக்காக கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
16-நவ-201800:38:23 IST Report Abuse
ராஜேஷ் கேரளா போலிசை வைத்து சபரிவாசன் பக்தர்களை ஒடுக்க நினைக்கும் பினராயி விஜயன் கேரளா தமிழ்நாடு ஆந்திர கர்நாடக மகாராஷ்டிரா மக்களின் சாபத்துக்கு ஆளாகப்போகிறார். பினராயி ஆணவம் அடங்கும்
Rate this:
Cancel
15-நவ-201822:48:35 IST Report Abuse
சிவம் கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம், இந்து தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு ஆதரவு, கிறித்தவ அமைப்புகளின் தந்திரம் போன்றவற்றை பற்றி இங்கே வாய் கிழிய பேசுங்கள். நீங்கள் குமுறுவதை பல இந்து அமைப்புகள் பல வருடங்களாக, இது போன்ற பல அராஜகங்களை, காங்கிரஸ் - திராவிட கட்சிகள் ஆதரவுடன் செய்து வரும் கிருத்துவ மிஷினரிகள், இஸ்லாமிய அமைப்புகள், நாத்திக கட்சிகள் செய்யும் செயல்களை கண்டித்து வருகின்றன. அப்பொதெல்லாம் மவுனமாக நமக்கென்ன என்று வேடிக்கை பார்த்துவிட்டு, முடிந்தால் நடுநிலை என்று நீதிபதிகள் போன்று இந்து அமைப்புகளை திட்டி வசைப்பாடி, தங்கள் மதசார்பற்ற தியாகிகள் போன்று பேசியவர்கள், இப்போது சாஸ்தா விஷயத்தை கண்டிப்பது புதிராக உள்ளது. நீங்கள் உண்மையாகவே சபரிமலையில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து நிற்கிறீர்கள் என்றால், இந்து தெய்வ வழிபாட்டில் பாரம்பரிய வழகங்களுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள், நம் இந்து மத மக்கள் தொடர்ந்து இழிவு படுத்தபடுகிறார்கள் என்று உணர்ந்தால், அனைத்து இந்து அமைப்புகள், RSS போன்ற அமைப்புகளுக்கு இனிமேல் ஆதரவு அளியுங்கள்.
Rate this:
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
15-நவ-201822:26:01 IST Report Abuse
S.BASKARAN கேரளா அரசின் என்று சொல்வதை விட கம்யூனிஸ்ட் அரசின் பிடிவாதம் என்றே தெரிகிறது.இந்த அரசு நாட்டை விட்டே ஒழியவேண்டும்.இது மட்களுக்கு ஒரு சாபக்கேடுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X