பொது செய்தி

இந்தியா

டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து

Added : நவ 15, 2018 | கருத்துகள் (36)
Advertisement
TM Krishna, Carnatic Music Artist, Christian Songs, Delhi Music Show,டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசை கலைஞர், டில்லி இசை நிகழ்ச்சி, இந்துத்துவா , மகசேசே விருது, ஏ.ஏ.ஐ., கிறிஸ்துவ பாடல்கள், கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா,
 Hindutva, Magsaysay Award, AAI, Carnatic Music Artist TM K Krishna,

புதுடில்லி: இந்துத்துவா அமைப்புகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக, பிரபல இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் டில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


மகசேசே விருது பெற்றவர்


சென்னையை சேர்ந்த டி.எம்.கிருஷ்ணா பிரபல கர்நாடக இசை கலைஞர். மகசேசே விருது பெற்றவர். இந்திய அளவில் பிரபலமான டி.டி.கே., தொழில் குழும குடும்பத்தை சேர்ந்தவர். கர்நாடக இசையில் கிறிஸ்துவ பாடல்களை சில கர்நாடக கலைஞர்கள் பாடியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது டி.எம்.கிருஷ்ணா, மாதம்தோறும் ஏசு கிறிஸ்து மற்றும் அல்லா குறித்து கர்நாடக இசையில் பாடல்களை வெளியிடுவேன் என டுவிட்டரில் தெரிவித்தார்.
அது முதல் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக வலை தளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். டில்லியில், நவ., 17, 18 ம் தேதிகளில் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட சில கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டில்லி நேரு பூங்காவில் நடக்க இருந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையமான ஏ.ஏ.ஐ., ஏற்பாடு செய்து இருந்தது. சமூக வலை தளங்களில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுவதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஏ.ஐ., அறிவித்துள்ளது.


டில்லி அரசு முனைப்பு:

இதற்கிடையே, ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் நடத்த டில்லி அரசு முயற்சி செய்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-நவ-201812:01:28 IST Report Abuse
Pasupathi Subbian தியாக பிரமத்ததை கேவலப்படுத்தும் இவர், ஹிந்துக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது இவரின் தாயையே இழிவு படுத்தும் செயல் என்பதை இவர் உணரவில்லை. இன்னும் இவர் வாய் மூடாமல் இருப்பது, வாயை கொடுத்து ............. புன்னாக்கும் செயல்.
Rate this:
Share this comment
Cancel
Rajanram Ramam - London,யுனைடெட் கிங்டம்
16-நவ-201803:29:33 IST Report Abuse
Rajanram Ramam நமது பாரம்பரிய வழிபாடுகள் கேலி செய்யப் படுகிறது. இந்த நிலையில் நமது பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள், வளர்க்கப் பட்டவர்கள் மிகுந்த மிகுந்த பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும். நமது பாரம்பரிய வழிபாடுகள் கேலி செய்தவர்களுக்காகப் பாடியவர்கள் அனைவரையும் பகிஸ்கரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
prem - Madurai ,இந்தியா
15-நவ-201820:36:41 IST Report Abuse
prem தனது வாயை வாடகைக்கு விடும் ரகம் இவர்..... உன்னதமான நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்ட சாஸ்திரிய சங்கீதத்தின் மகோன்னத்தை புரிந்து கொள்ள மறுத்த சுயஜீவி இவர்... திரு கிருஷ்ணாவின் துரோக சரித்திரம் இப்படிப்பட்டவர் ஏன் வாழ்ந்தார் என்றே வரலாற்றில் பதியப்படும்.... இப்படிப்பட்ட துரதிர்ஷ்டமான பதிவுக்காக வருந்துகிறேன்...ஆனால் மனவேதனைக்கு ஆறுதல் கிடைக்காததால்.... ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X