பொது செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவுக்கு பின் கஜா புயல் கரையை கடக்கும்

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (11)
Advertisement
Storm,Weather,புயல்,மழை,வானிலை, கஜா புயல்

சென்னை: அதிகாலையில் கஜா புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தற்போது, கஜா புயல் நாகைக்கு கிழக்கே 85 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் மேற்கு தென்மேற்கு திசையில் 16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலின் கண்பகுதி 26 கி.மீ., உள்ளது . நாகைக்கு தெற்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரையை கடக்கும் நேரம் 3 முதல் 4 மணி நேரம் நீடிக்கும். புயல் கரையை கடந்த பின், வலுவிழந்து அரபிக்கடல் பகுதிக்கு செல்லும். நள்ளிரவுக்கு பின் புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது டெல்டா மாவட்டங்களில் மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்றார்.


கரையை தொட்ட வெளிப்பாகம்


கஜா புயலானது, தற்போதைய நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 85 கி.மீ. தொலைவில் உள்ளது. இது தற்போது 16 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. புயலின் வெளிப்பாகம் கரையை தொட துவங்கியுள்ளது. இதனால், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கியுள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


20 செ.மீ.,க்கு மேல் மழை

முன்னதாக சென்னை வானிலை மையம் காலை வெளியிட்ட அறிவிப்பில்: கஜா புயல் காரணமாக அதிகபட்சமாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கும் அதிகமாக மழைபெய்யும். காரைக்கால் மாவட்டத்திலும் 20 செ.மீ., க்கும் அதிகமாக மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரளா, ஆந்திரா, ராயலசீமாவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,16 ம் தேதியும் கனமழை முதல் மிக கனமழை தொடரும். கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வரையிலும், பின்னர் 100 கி.மீ., வரையிலும் அதிகரிக்கக் கூடும். இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் புயல் கரையை கடக்கக்கூடும் எனக்கூறியிருந்தது.


எச்சரிக்கை

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கை: புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடீரென்று குறையும். அதனால், புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். மந்தநிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று வீசும். வானிலை மையத்தில் இருந்து புயல் கடந்து விட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனக்கூறப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு:


கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமேஸ்வரம், காரைக்கால், புதுக்கோட்டை பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் ராமேஸ்வரம், பாம்பன்,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திருவாரூரிலும் காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அறிவுரை


கஜா புயல் காரணமாக புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்குள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் உள்ளவர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரையும் 3 மணிக்கே வீ்ட்டிற்கு அனுப்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்


மீட்புப் பணிக்காக 2 கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர காலத்தில் உதவும் பொருட்களுடன் கடற்படையின் ரன்வீர், கன்ஜர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்புப் படையினர், ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மருத்துவக்குழு, மருத்துவ பொருட்கள், நிவாரண பொருட்களுடன் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


புயல் எச்சரிக்கை கூண்டு:


கஜா புயல் காரணமாக நாகை (10ம் எண்) , கடலூர் (9ம் எண்), பாம்பன்(8ம் எண்) புதுச்சேரி(9ம் எண்) காரைக்கால் (9ம் எண்) எண்ணூர் (3ம் எண்),தூத்துக்குடி (8ம் எண்) எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முதல்வர் கேட்டறிந்தார்:


இந்நிலையில் கஜா புயல் நிலவரம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் உதயகுமாரிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை புயல் குறித்து, முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-201800:44:52 IST Report Abuse
மலரின் மகள் சின்ன சந்தேகம். கரையை கிடைக்குமா கடலை கிடைக்குமா? கரையை கடந்தால் கடலுக்குள் தானே செல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-201800:36:31 IST Report Abuse
மலரின் மகள் உயிர் சேதமின்றி அமைதியாக சங்கமிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
15-நவ-201823:27:33 IST Report Abuse
Sanjay The problem is not with. Gaja. Sudalai will play petty politics aftermath of Gaja.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X