எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
துயரம்!
பினராயி பிடிவாதம்;
ஐயப்ப பக்தர்கள் துயரம்!

மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில், இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில், கேரள மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விஜயனின் பிடிவாதம், பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் என பக்தர்கள் அஞ்சுகின்றனர்.

பினராயி,பிடிவாதம்,ஐயப்ப பக்தர்கள்,துயரம்!


கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆண்டு தோறும் ஒரு கோடி பேர் வரை தரிசனம் செய்கின்றனர். இதில் 40 சதவிகிதத்தினர் தமிழக பக்தர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி முதல்வரின் பிடிவாதத்தால், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டின் இயலாமையால், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, பெரும் குழப்பங்களுடன் கோயில் திறக்கப்படுகிறது.

ஏன் விலக்கு கேட்கவில்லை:


உச்சநீதி மன்றம் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நாள் முதல், அதனை அமல்படுத்த தீவிரம் காட்டி வந்தார் பினராயி. தமிழகம் தொடர்பான முல்லைப்பெரியாறு, பிற மத வழிபாட்டு இடங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதையும் அமல்படுத்தாத பினராயி, இதில் மட்டும் உறுதியாக இருந்தார். போராட்டங்கள் நடந்தன; பக்தர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இதுவரை இல்லாத அளவிற்கு 49 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை 2019 ஜன.,22 ல் விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, பக்தர்களை மகிழ்வடைய செய்துள்ளது. ஏனெனில், பெரும்பாலும் மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வராமலேயே தள்ளுபடி செய்யப்படும். உச்ச நீதிமன்றம் மகரவிளக்கு

சீசன் முடிந்த பிறகு தான் விசாரிக்கிறது. தேவசம் போர்டு, அதுவரை தீர்ப்பை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு கேட்டிருக்கலாம்.

முதல்வரின் கட்டுப்பாட்டில் தேவசம் போர்டு இருப்பதால், அது நடக்கவில்லை. இதே கோரிக்கையை பக்தர்கள் தரப்பு அளித்த போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பதறும் பக்தர்கள்இதனிடையே ரஹானா பாத்திமா, ஸ்வீட்டி மேரி போன்ற 'போராட்ட பெண்கள்' மீண்டும் வந்து, சபரிமலை போர்க்களம் ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்துடன், பா.ஜ.,-காங்.,கட்சிகள் ஜன.,22 வரை தீர்ப்பை அமல்படுத்த அவசரப்பட வேண்டாம் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தன.

நேற்று நடந்த சர்வகட்சி கூட்டத்தில் அந்த கருத்தை ஏற்காத முதல்வர், பெண்களுக்கு தனி நாட்கள் ஒதுக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே 800 பெண்கள், போலீஸ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருப்தி தேசாய் என்ற பெண், 7 பெண்களுடன், நவ.,17ல் சன்னிதானம் வர உள்ளதாக அறிவித்துள்ளார். இப்படி அரசு நிர்வாகம், போராட்ட பெண்களால், பிரம்மச்சாரியாக ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலையின் ஐதீகம் மீறப்படுவது பக்தர்களிடையே பதட்டத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புனிதம் காக்க என்ன செய்யலாம்:


இந்து மத நம்பிக்கையில்லாத பினராயி விஜயன், தெய்வ நம்பிக்கையுள்ள மக்களுக்கும் தான் முதல்வர். தனது கொள்கைகளை கட்சியோடு வைத்து விட்டு, சபரிமலையின் புனிதம் காக்க அவர் என்ன செய்திருக்கலாம்...?

1. தேவசம் போர்டு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கலாம்.

2. மறு சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காட்டி, தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, 2019 ஜன., 22 வரை அரசு விலக்கு கேட்டிருக்கலாம்.

Advertisement

3. பெருவெள்ளத்தால் பம்பை, சபரிமலை பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை சுட்டிக்காட்டி பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய இயலாது என அவகாசம் கேட்டிருக்கலாம்.(இது தான் உண்மை; அங்கு பெண்களுக்கு எந்த வசதியும் இல்லை)

4 .பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனு ஏற்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு வரும் பெண்களை தடை செய்த 1991 ஐகோர்ட் தீர்ப்பை காட்டி இந்த சீசனுக்கு மட்டுமாவது தடுக்கலாம். போராட்ட பெண்கள் நீதிமன்றம் சென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை காக்க, நீதிமன்றத்தில் அரசு மன்னிப்பு கேட்கலாம்!

அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பது எல்லாம் புதிதல்ல; அவ்வப்போது நடந்து வருகிறது.பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தந்து சன்னிதானத்திற்கு அழைத்து செல்வதை விட, பிரச்னையின் தீவிரத்தை சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி பம்பையில் இருந்து திருப்பி அனுப்பலாம். ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு பெண்களுக்கு தனிநாள், நேரம் ஒதுக்கலாமா என்று இந்து கோயிலின் ஐதீகத்தை அடியோடு சாய்க்க இருக்கிறார் பினராயி.

2019 ஜன.,22 மறு ஆய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பு, எப்படியாவது இளவயது பெண்களை தரிசிக்க வைத்தால், அது தங்களுக்கு நிரந்தர வெற்றியை தரும் என்ற கோணத்தில் கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது. இதனால் இந்து மத பக்தர்கள் பெரும் துயரமடைந்துள்ளனர்.

-ஜி.வி.ரமேஷ் குமார், rameshkumargv@dinamalar.in


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G S VIJAYALAKSHMI - Coimbatore ,இந்தியா
17-நவ-201818:56:21 IST Report Abuse

G S VIJAYALAKSHMIகோடான கோடி மெய்யன்பர்களின் பாவத்தினை ஏன் இவர்கள் கொட்டிக்கொள்கிறார்கள் ? சத்தியம் இன்னும் உறங்கிவிடவில்லை . கலியுக கண்கண்ட தெய்வமான சுவாமி ஐயப்பனுக்கு இது போன்றோர்கள் பதில் கூற வேண்டிய காலம் அருகில் வந்துவிட்ட்து . காத்திருக்க சொல்லுங்கள் அவரின் சக்தியைக் காண. . தெய்வத்துடனேயே விளையாட ஆரம்பித்து விட்ட்து கலயின் முடிவே அன்றி வேறு என்ன?

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
16-நவ-201820:29:06 IST Report Abuse

r.sundaramவிநாச காலே விபரீத புத்தி. இவரால் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியே அழியப்போகிறது. மற்ற கட்சிகள் செய்ய முடியாததை பிரியாணி விஜயன் ஒத்தை ஆளாக செய்யப்போகிறார். வாழத்துக்கள். கம்யூனிஸ்ட் என்றாலும் ஜனநாயகம் என்று வாய் கிழிய கத்துவார்கள். தற்போது பெரும்பான்மை மக்கள் கருத்துக்கு விரோதமாக இவர் ஏன் இப்படி நடக்கிறார்? அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களே பால் குடம் எடுக்கும் தருணம் இது. இந்தியாவில் இருக்குது அதுவும் கேரளாவில் இருந்து கம்யூனிஸ்ட் ஒழிவது நல்லது. அடாவடித்தனமான தொழிலாளி வர்க்கத்தின் பிடியில் இருந்து கேரளா விடுபடும். வாழ்க.

Rate this:
arunachalam - Tirunelveli,இந்தியா
16-நவ-201820:10:26 IST Report Abuse

arunachalamதற்போதைய செய்தி. மதியம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய "திருப்தி" பொம்பளைய, இப்ப மணி இரவு 8, வரை விமான நிலையத்தை விட்டு வெளியே வர விடவில்லை. காவல் துறை, அவரிடம் உள்ளேயே இருந்து கொள்வது உங்களுக்கு நல்லது. திரும்பி ஊர் போய் சேர்வதே சாலச்சிறந்தது, என அறிவுரை கூறிவிட்டது. அவ, இதை ஒன்றும் பொருட்படுத்தவே இல்லை. லௌஞ்சில் அமர்ந்து (கூட ஐந்து நண்பிகள்) யார் யாருக்கெல்லாமோ போன் போட்டு பேசியாச்சு. ஒருவரும் மசிவதாக தெரியவில்லை. விமான நிலையத்துக்கு வெளியே, ஒரு 1000 அய்யப்ப பக்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள், நாம ஜெபம் செய்தபடி. ஒருவேளை, வெளியே வந்துவிட்டால், அவர்ட்களை நகர விடாமல் செய்வதற்காக. எத்தனையோ டாக்ஸி ஓட்டுனர்களை விசாரித்தும், நிறைய பணம் தருகிறேன் என்றும், யாரும் இவர்கள் சவாரியை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இவர்களும், எல்லா வாசல் வழியாகவும் முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது. எங்கு சென்றாலும், காவல் துறையும், அய்யப்ப பக்தர்களும், அரணாக எதிர்த்து நிற்கிறார்கள்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X