பொது செய்தி

தமிழ்நாடு

த.மு.மு.க., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Added : நவ 16, 2018
Advertisement

புவனகிரி:புவனகிரி பஸ் நிலையத்தில், சுவர் விளம்பரம் செய்த த.மு.மு.க., பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புவனகிரி பஸ் நிலைய மதில் சுவரில், டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த சுவர் விளம்பரம் மக்கள் மத்தியில், பீதியை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலர் பரணிதரன் கொடுத்த புகாரின் பேரில், புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், த.மு.மு.க., பொறுப்பாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.மற்றொரு வழக்குபுவனகிரி நகர மனிதநேய மக்கள் கட்சி செயலர் சகஜத்துல்லா. இவர் தனது முகநுாலில், டிசம்பர் 6ம் தேதி போராட்டம் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு, இந்து மக்கள் கட்சி மாநில செயலராக உள்ள சுவாமிநாதன், மனிதநேய மக்கள் கட்சியில் இருப்பவர்கள், பயங்கரவாதிகள் என பதிவிட்டுள்ளதாக சகஜத்துல்லா கொடுத்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் சுவாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X