பொது செய்தி

இந்தியா

வருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு

Added : நவ 16, 2018 | கருத்துகள் (22)
Share
Advertisement
மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர், அஜய் பிராமல், தன் வருங்கால மருமகளுக்கு, 452 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை, திருமண பரிசாக வழங்குகிறார்.மும்பையைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான, அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும், அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில், ஆனந்த் - இஷா திருமணத்திற்குப்
வருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு

மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர், அஜய் பிராமல், தன் வருங்கால மருமகளுக்கு, 452 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை, திருமண பரிசாக வழங்குகிறார்.

மும்பையைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான, அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும், அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில், ஆனந்த் - இஷா திருமணத்திற்குப் பின் வசிப்பதற்கு, மும்பையின் வொர்லி பகுதியில், கடற்கரையை நோக்கிய ஆடம்பர பங்களாவை, அஜய் பிராமல், பரிசாக வழங்குகிறார்.

ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பயிற்சி மையமாக இருந்த, 'குலீட்டா' என்ற இந்த கட்டடத்தை, 452 கோடி ரூபாய்க்கு வாங்கிய அஜய், அதில் மாற்றங்கள் செய்து வருகிறார்.ஐந்து மாடிகளை உடைய இந்த கட்டடத்தில், மூன்று அடித்தளங்கள் உள்ளன. ஒரு அடித்தளத்தில், புல்தரை, திறந்தவெளி நீர் ஊற்று அமைப்பு மற்றும் பல்நோக்கு பயன்பாட்டு அறைகள் உள்ளன. மற்ற இரண்டு அடித்தளங்கள், கார் நிறுத்தம் மற்றும் இதர சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

மேல் தளங்களில், வரவேற்பு அறை, சமையல் அறை, படுக்கை அறைகள், உடை மாற்றும் அறைகள் உள்ளன. மற்ற நிலைகளில் பணியாளர்கள் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. ஆனந்த் - இஷா திருமணத்திற்கு அஜய் குடும்பத்தாரின் பரிசாக, இந்த பங்களா வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
20-நவ-201814:04:14 IST Report Abuse
R S BALA இந்த அளவுக்கு ஒரு சிலரிடம் மட்டும் பணம் எப்படி குவிகிறது என்பது (இந்தியாவில் ) ஒரு சாதாரண பிரஜையான எனக்கு புரியவில்லை ,யாராவது இதில் நிபுணத்துவம் உள்ளவர்கள் தெரிவியுங்கள் ...
Rate this:
Thirumalai Daniel - chennai,இந்தியா
20-நவ-201815:48:25 IST Report Abuse
Thirumalai Danielஉனக்குள் ஒரு விதை உள்ளது, அதை வளத்திடப்பரு , உன் தெய்வீகம் உண்மை மற்றும் அன்பினால் வளரும் , அதன் பின் வானமும் வசப்ப்டும் ....
Rate this:
Siva K - Chennai,இந்தியா
20-நவ-201818:04:17 IST Report Abuse
Siva Kஒரு நிறுவனத்தை உருவாக்கி, பெரிய நிலைக்கு கொண்டு சென்றால், நீங்களும் ஒரு பெரிய பணக்காரர் தான். ஒரு ருபாய் சம்பாதிப்பது மட்டும் கஷ்டம்.. ஒரு லட்சம் இரண்டு லட்சம் ஆவது வேகமானது.. இரு லட்சம் சீக்கிரம் பத்து லட்சம் ஆவது இன்னும் எளிது.. அது போல, ஒரு கோடி இரண்டு கோடி ஆவது என பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவது ஒரு சுழற்சி.. நேர்மையான வழியில் என்றால் நேரம் அதிகம் எடுக்கும்.. தில்லாலங்கடி வேலை என்றால் சீக்கிரம்.. எல்லோரும் தொழில் முனைவர் என்றால் எல்லோரும் கடும் உழைப்பால் முன்னேற முடியும்.. ஒரே பிரச்சனை - இந்த லஞ்ச ஊழல் சமூகத்தில் நேர்மை கடினமான ஒன்று.. அனால் நேர்மை உங்கள் செல்வத்தை பல தலை முறைகளுக்கு காப்பாற்றும்.....
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
20-நவ-201813:41:30 IST Report Abuse
பிரபு பெரிய அந்தஸ்தில் உள்ள அம்பானி பெரிய அளவில் திருமண செலவு செய்வதில் தவறு இல்லை. அவரின் உழைப்பு அவர் செலவு செய்கிறார். இந்த திருமண செலவு செய்வதன் மூலம் பல பேருக்கு வேலையும் வருமானமும் கிடைக்கும்.
Rate this:
ramadass - mayiladuthurai,இந்தியா
21-நவ-201813:51:51 IST Report Abuse
ramadassநீயும் அவன்கிட்ட வேலைக்கு போய்விடு....
Rate this:
Kanthi - Dallas,யூ.எஸ்.ஏ
22-நவ-201815:25:23 IST Report Abuse
Kanthi நீங்க எங்க வேலைபார்க்கிறீங்க பார்க்கிறீங்களா ?...
Rate this:
Cancel
ramadass - mayiladuthurai,இந்தியா
20-நவ-201811:37:56 IST Report Abuse
ramadass இவர்கள் புத்திகெட்ட மனிதர்கள், பணத்தை மதிக்காத ஜென்மங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X