பொது செய்தி

இந்தியா

கடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு

Added : நவ 16, 2018 | கருத்துகள் (56)
Advertisement
கடன் பிரச்சனை, ஏர் இந்தியா சொத்துகள், ஏர் இந்தியா, ஏர் இந்தியா கடன்,  ஏர் இந்தியா விமானம் , debt issue, Air India Assets, Air India, Air India Credit, Air India Flight,


மும்பை,: ஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது. மேலும், 2016 - 17ம் நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் மொத்த நஷ்டம், 47 ஆயிரம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கடன் மற்றும் நஷ்டத்தில் சிக்கித் தவிப்பதால், நிறுவனத்திற்கு சொந்த மான சொத்துகளை விற்பனை செய்ய, ஏர் இந்தியா முடிவு செய்தது.இதன்படி, சமீபத்தில் மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, புனே, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் உள்ள, 14 சொத்துகளை விற்பனை செய்ய, ஏர் இந்தியா முன்வந்தது.இந்நிலையில் நேற்று, நாடு முழுவதும் உள்ள, 70 சொத்துகளை விற்பனை செய்து, 700 - 800 கோடி ரூபாய் திரட்ட, ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.இது குறித்து, இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுவதும், ஏர் இந்தியாவுக்கு சொந்தமாக, 16 நகரங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.இதன் மூலம், 700 - 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-201816:33:04 IST Report Abuse
Arul Krish if they scrape the age old air hostress...suerly business will pickup...or appointing kingfisher airhostress will pickup the business
Rate this:
Share this comment
Cancel
16-நவ-201815:25:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நாம் நாட்டின் சாபக்கேடு அரசாங்க ஊழியர்கள் (ஒட்டுமொத்தமாக சொல்லமுடியாது என்றாலும் பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் ) வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப வேலை செய்வதில்லை. இடஒதுக்கீடு என்பது உங்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொடுப்பது ஆனால் பெரும்பாலும் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள் அதாவது வேலை செய்யாமல் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள் வன்கொடுமை சட்டத்தை வைத்து , அதற்கு வக்காலத்து வாங்க சங்கம் வேறு. பல துறைகள் இவர்களால் நாசமடைந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் துறைகளை தனியாருக்கு விற்றுவிடலாம் அல்லது மூடி விடலாம். மக்களின் வரிப்பணத்தை எடுத்து வருடாவருடம் இவர்களுக்கு கொடுப்பது வீண்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-201814:38:32 IST Report Abuse
மலரின் மகள் மிகவும் வருத்தமாக இருக்கிறது. விண்வெளியும் வான் வெளியும் நம் வசப்பட்டிருக்க, ஆகாயமும் மேக கூட்டங்களும் நமது வானூர்திகளுக்கு சிறப்பளிக்க வில்லையா? எல்லோரும் ஏர் இந்தியாவை திட்டுகிறார்கள். சகட்டு மேனிக்கு. அவர்கள் விருப்பத்திற்கு ஏர் இந்தியா இல்லையாம். நேரதமமதாம். உணவு சரியில்லையாம். மதுவும் மாமிசமும் தாராளமாக கிடைக்க வேயில்லையாம் என்றெல்லாம் கரணம் கூறி அதனால் தான் அவர்களுக்கு நஷ்டமாம். அதை தான் பயணிகள் விரும்புகிறீர்களாம். தனியார் வானூர்திகள் சிறப்பாக பங்களிக்கின்றனவாம். என்றெல்லாம் பொய் பிரசாரம் வேறு. ஆங்கில பத்திரிகைகளில் குறிப்பாக வியாபார பத்திரிகைகளில் பயண கட்டுரை எழுதுவதாக ஏர் இந்தியாவை பற்றி திட்டி தீர்க்கிறார்கள். டில்லியிலிருந்து நான் ஸ்டாப் ஆகா அமெரிக்காவிற்கு இந்திய உணவை அறுசுவையுடன் புசித்து சென்று விட்டு அதுவும் வெறும் அறுபதாயிரம் ரூபாயில் சென்றுவரும் நிலையில் அதை திட்டி தீர்க்கிறார்கள். லுபிதாசாவிற்கும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் எமிரேட்ஸ் கும் லட்சங்களில் கட்டணம் தந்து சொல்லவேண்டியது தானே. வெளிநாட்டு விமானங்கள் எல்லாம் கடைபரப்புவதற்கு முன்பு நமக்கு சிறப்பாக சேவை அளித்த விமானம் அல்லவா நமது தேசிய விமானம். அது சிக்கலில் இருக்கிறது. இரண்டடியிரத்தின் மத்தி வரையில் லாபமீட்டிய நிறுவனம். இப்போது திணறுகிறது. அதற்கான உண்மையான சரியான காரங்களை அறிந்து கொள்ளாமலே சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கும் சக இந்தியர்களை படிக்கும் பொது வேதனை தானே நமக்கு மிஞ்சுகிறது. ஒரு இந்திய பெண்ணாக இந்திய மகளாக பெருமை பட்டு கொள்வதில் புளகாங்கிதம் அடைபவளாக கேட்கிறேன் நான் என்ன செய்யவேண்டும் நமது வூனூர்திகள் சிறப்பாக பழைய நிலையை அட்வைதற்கு. உலக வானூர்திகளிலேயே மிகவும் உயர்ந்தது நமது தேசத்தின் வானூரிதி தான் என்று நான் பெருமை படும் நாள் கனிந்து வர நான் என்ன செய்யட்டும். என்னால் இயன்றதை செய்வதற்காக தயாராக இருக்கிறேன் என்று கூறுவோமா? நமது சிந்தனைகளை மாற்றி கொள்வோமா? குறையே இருந்தாலும் பிரச்சினைகளும் அசைவுகரியங்களை சந்திக்க நேர்ந்தாலும் நான் இனி நமது தேசிய விமானங்களிலேயே பயணிக்கிறேன். உள்நாட்டு சேவைகளுக்கும் அதையே பயன் படுத்தி கொள்கிறேன். சற்று கூடுதல் கட்டணம் என்றாலும் பரவாயில்லை அதை எங்களால் தாராளமாக எந்த வித சுமையும் இன்றி தாங்கி கொள்ள முடியும். ஆகையால் நமது தேசிய விமானத்தை பயன்படுத்தவுவதை கடமையாக செய்கிறேன். நான் வாங்கும் விமான டிக்கெட்டில் கால் பங்கு கூடுதல் கட்டணம் மனம்வந்து தருகிறேன் அதை நமது விமான சேவையை செம்மையாக்குவதற்கு என்று பயன்படுத்தி கொள்ளுங்கள். யாதொரு கேள்வியும் கேட்காமல் விட்டு விடுகிறேன். மகோன்னத நிலையை அடைந்த பிறகு நீங்கள்எனக்கு சலுகைகளை வழங்கலாம். பயணியாக உங்கள் சேவையை பயன்படுத்தி கொண்ட நான் உங்கள் ஆதரவாளராக மாறி உதவி செய்வதற்கு என் அளவிற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்ய முயல்கிறேன். அரசு பள்ளிகளை தரம் தாழ்த்தியது என்பதில் அதிக பங்கு குடிமக்களாகிய நம்மை தான் சாரும் எண்ணத்தை நான் உணர்கிறேன். அதே போன்ற தவறை நமது தேய்ச்ய நிறுவனங்கள் தோல்வியில் அமைவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என்ற சிந்தனையை வளர்த்து கொள்வதை நாம் நமது சிறப்பென்னமாக கொள்ளவேண்டும் இதே போன்ற எண்ணங்கள் நாம் ஒவ்வொருவருக்கு வரட்டும். குறிப்பாக ஊழியர்களுக்கு அதை விட முக்கியமாக விமானிகளுக்கு விமான பணிப்பெண்களுக்கும் வேண்டும். கொஞ்சமாவது விட்டு கொடுங்கள். முதலாளி கஷ்டப்பட்டு கொண்டிருக்கையில் தொழிலாளிகள் தான் தூண்களாக ஆதரவு தருபவர்களாக அவருக்கு ஊக்கம் தந்து பழைய நிலைக்கு மாற்று பவர்களாக இருக்க வேண்டும். அதை உணர்ந்து செயல் படுங்கள். அறுபதாயிரத்திற்கு சற்று குறைவான கொடிகள் தானே பிரச்சினை. அதை என் மக்களிடம் பயணிகளிடமும் ஊழியர்களிடமும் பெறுவதற்கு முயற்சி செய்ய கூடாது. மறுசீரைப்பு பாத்திரங்களை வெளியிட்டு அதை பயணிகளிடமும் நல்ல சிந்தனை படைத்த மக்களிடமும் வெவ்வேறு வியாபார நிறுவனகளிடமும் பெற்று கொள்ளக்கூடாது. SAVE ஏர் இந்தியா என்று ஒரு அமைப்பை நடத்தி மூல்கும் விமான நிறுவனத்தை பறக்க வைக்கலாமே. போயிங் மற்றும் ஏர் பஸ் இடம் தனித்தனியாக மெர்ஜெருக்கு முன்பு கொடுத்த கட்டளைகளை பாதியாக குறையுங்கள். லீசுக்கு எடுத்த விமானங்களை திருப்பி கொடுத்து விடுங்கள். பாதிக்கு மேற்பட்ட சாதாரண லாபமற்ற வழித்தடங்களை விட்டொழியுங்கள். நிர்வாக சீரமைப்பை ஒரு பக்கம் செய்யுங்கள். சிறு நேர பயணத்திற்கு உணவு வழங்க வேண்டாமே. இரண்டு மணி நேரப்பயணத்திற்கு பயண துவங்குவதற்கு முன்பே சிற்றுண்டிகளை வழங்கி விடலாமே புதியதை முயற்சித்து பாருங்கள். மிக பெரிய நெட்ஒர்க் சிறப்பான அமைப்பு அதை திறம்பட நிர்வகிக்க ஊழியர்களுடன் இணைந்தே அதிகார தோரணை மாற்றி அன்பான வழிகளில் நடந்து கொள்ளுங்களேன். நொண்டி சாக்கு சொல்லும் சிப்பந்திகள் மீது கடுமை காட்டுங்கள் அல்லது அன்பாக அறிவுறுத்தி பாருங்கள். பல்வேறு முயற்சிகளை பொற்கால நடவடிக்கை முறையில் முயலுங்கள். வெற்றி நிச்சயம் உண்டு என்று நம்புங்கள். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். வெறுமனே அரசே எதையாவது செய்யவேணும். அது அரசின் கடைமை. அது பார்த்து கொள்ளும் என்று சோம்பித்திரியாதீர்கள். தேவை மிகஉயர்வாக உழைக்கும் என்னும். அனைத்து மட்டத்திலும். மற்றவர்கள் எப்படியோ. நான் உங்கள் விமானத்தில் நூறு நூறு முறைகள் பறந்திருக்கிறேன். எனக்கு அதிருப்தி இல்லவே இல்லை. சென்னைக்கும் ஒசாகாவிற்கும் இருவலிக்கு வெறும் 40 000 ரூபாயில் சில வருடங்களுக்கு முன்பு UTIVE வகுப்பில் உங்கள் விமானத்தில் தான் பறக்க முடிந்தது. அதை யாராலும் அளிக்க முடியாது. விமானமும் ஹாங் க்ஹோங் ஒசாகா வழித்தடத்தில் முழுவதுமாக நிரம்பித்தான் இருந்தது. சீனர்களும் கோரியர்களும் ஜப்பானியர்களும் நமது விமத்தில் தான் அந்த வழித்தடத்தில் அதிகம் பயணித்தவர்கள். எத்துணையோ சிறப்புக்கள் உங்களுடையது. நம்புங்கள். மகிந்த நிலை அடையலாம்.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
16-நவ-201821:40:31 IST Report Abuse
jaganநான் ஏர் இந்தியாவில் அமெரிக்க பயணித்திருக்கிறேன். விலை ஒன்றும் குறைவு இல்ல.BA எதிஹாட் எமிரேட்ஸ் அளவு தான்...முக்காவாசி டிவி வேலை செய்யாது (15 மணி பயணத்தில் அது முக்கியம்). மேலும் எல்லாம் ஹிந்தி படங்கள் 3 தமிழ் படங்கள் தான் 2 வருஷமா , எந்த டாக்குமெண்டரி படம் சரியில்லை , எங்கே பார்க்கிறோம் என்று ஒரு ஸ்க்ரீன் உண்டு அதுவும் வேலை செய்யாது .... இசை எல்லாம் ஹிந்தி .....இருந்தாலும் ஏர் இந்தியாவில் போயிருக்கேன் (ஒண்ணே ஒன்னு எப்ப கேட்டாலும் வெஜிடேரியன் சாப்பாடு இருக்கும் LOL )...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X