சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை வெட்டிய கணவனுக்கு வலை

Added : நவ 16, 2018
Advertisement

ஆரணி: மனைவியை வெட்டிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, பையூரை சேர்ந்த நவீன்குமார், 40, செய்யாறு நகராட்சி குப்பை லாரி டிரைவர். இவரது மனைவி அம்மு, 35, இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில், அம்மு, தன் மகன்களுடன், இரும்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, மகன்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த நவீன்குமார், அம்முவை வழிமறித்து தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த நவீன்குமார், பைக்கில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால், அம்முவின் தலை மற்றும் கையில் வெட்டினார். அவரது கை துண்டானதைக் கண்ட, சிறுவர்கள் கதறி அழுதுனர். அங்கிருந்து, நவீன்குமார் தப்பியோடினார். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அம்மு சேர்க்கப்பட்டுள்ளார். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X