பொது செய்தி

தமிழ்நாடு

புயலால் நாகை , தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை நாசம்

Updated : நவ 16, 2018 | Added : நவ 16, 2018 | கருத்துகள் (16)
Advertisement
கஜா புயல், மழை, நாகை, வேதாரண்யம்

நாகை : கஜா புயல் நாகை , தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. பல வீடுகளின் மேற்கூரை சேதமுற்றுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து கிடப்பதால் வேதாரண்யம் செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆலங்குடி, அறந்தாங்கி, அன்னவாசல் , விராலிமலை பகுதிகளில் வீடுகள் இடிந்து 6 பேர் பலியாகியுள்ளனர். மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிய ஒரு மாதம் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 50 க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் மின்கம்பங்கள் . திருவாரூரில் 3 ஆயிரம் மின்கம்பங்கள், 100க்கும் மேற்பட்ட குடிசைகள், சேதமுற்றுள்ளன. மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-நவ-201819:26:36 IST Report Abuse
Pugazh V புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் பாராட்டிய விவரம் HSR அறியாததில் வியப்பில்லை. கிணற்று.த யாக, ம.தனமாக , எழுதுவதல்லவா இவர் மாதிரி ஆட்களின் தொழில்.
Rate this:
Share this comment
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
16-நவ-201816:02:25 IST Report Abuse
கும்புடுறேன் சாமி கனவு காண் அதுபோலவே நடக்கும்ன்னு சொல்லுவாங்க , யார்ரா அவன் கஜா புயல் வர மாதிரி கனவு கண்டது ?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-201813:35:40 IST Report Abuse
மலரின் மகள் இரவு பகல் கடும் மழை குளிர் மின்சாரமின்மை போக்குவரத்து துண்டிப்பு என்று எத்துணை இடர்பாடுகள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாது உங்கள் நிருபர்கள் போட்டோகிராபர்கள் இயற்கையின் சீரழிவுகளை அது தரும் பாடத்தை உடனுக்குடன் தெரியப்படுத்துகிறார்கள். எங்கெல்லாம் போக்குவரத்து பாதிப்பு மின்சார தடை என்பதை உடனுக்குடன் தெரிவித்து அனைவரையும் களநிலவரத்தை தெரிந்து கொள்ள உதவுகிறார்கள். விடுமுறை காணாது கடைமாற்றும் அவர்களையும் அன்போடு பாராட்டுவோம். மக்களுக்கு நல்லது செய்வோரை இறைவன் ஆசீர்வதிப்பார். அவர்கள் எத்துணை இடர்பாடுகளை சந்தித்திருப்பார்கள். இவர்களின் தியாகமும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போன்றதே. உங்கள் அனைவருக்கு வந்தனம். எங்களது பிரார்த்தனைகள்.
Rate this:
Share this comment
Jayanthi Srinivasan - chennai,இந்தியா
16-நவ-201814:41:23 IST Report Abuse
Jayanthi Srinivasanமிகவும் சரியான வார்த்தைகள். நிருபர்கள் போட்டோகிராபர்கள் அவர்களும் மனிதர்களே. அவர்களுடைய சேவைக்கு மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்....
Rate this:
Share this comment
ashok kumar - coimbatore,இந்தியா
16-நவ-201820:06:47 IST Report Abuse
ashok kumarஇவர்களின் தியாகமும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போன்றதே இது கொஞ்சம் ஓவர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X