பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் நிருபர்களுக்கு கெடுபிடி

Updated : நவ 16, 2018 | Added : நவ 16, 2018 | கருத்துகள் (27)
Advertisement
சபரிமலை அய்யப்பன் கோயில்,  சபரிமலை போராட்டம்,  திருப்தி தேசாய், கார்த்திகை மாத மண்டல பூஜை,சபரிமலை,  Sabarimala Verdict ,Sabarimala Case ,Women Entry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு , ஐயப்பன் கோயில், கேரள அரசு, பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,சபரிமலை 144 தடை,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court

சபரிமலை: கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படவுள்ளது. இதனையயொட்டி அங்கு பக்தர்கள் குவியத்துவங்கியுள்ளனர். பக்தர்கள் அனைவரும் பம்பையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மதியத்திற்கு மேல் தான் அனுப்பி வைக்கப்படுவர்.

பத்திரிகையாளர் வாகனம் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பம்பைக்கு செல்ல முடியவில்லை. பத்திரிகையாளர்கள் வாகனம் பம்பை வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடி அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை, பம்பையில் கனமழை பெய்து வருகிறது.


நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது.


பதட்டம்:இதற்கிடையில், நவ.,17 ல் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளதால் கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.

திருப்தி தேசாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்.

போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
16-நவ-201817:13:05 IST Report Abuse
K.Sugavanam நிரூபருங்களை மொதல்ல செருப்பில்லாம அங்க வர சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-நவ-201817:08:04 IST Report Abuse
K.Sugavanam 144 போட்டா போலீஸெல்லாம் நாலுநாலு பேரால போகோணும்.இல்ல அவங்க 10000 பெரு கும்பலா போகலாமா?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-நவ-201816:26:22 IST Report Abuse
A.George Alphonse Since the Cyclone Kaja has entered into the Kerala state it is better and best for the media persons to leave the area to look after their families.What is the use of this news when the whole state is under the threat of cyclone.Later these people will run and cry like "Thunda Kanom Thunia Kanom"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X