பதிவு செய்த நாள் :
'ஆந்திராவில் சி.பி.ஐ., நுழைய தடை'
முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி

ஐதராபாத், : ஆந்திர அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், வழக்கு விசாரணைக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், அந்த மாநிலத்திற்குள் நுழைய, முதல்வர் சந்திரபாபு நாயுடு தடை விதித்துள்ளார்.

ஆந்திரா, சி.பி.ஐ., நுழைய தடை,முதல்வர், சந்திரபாபு நாயுடு, அதிரடி


ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி செய்கிறது. இந்த மாநிலத்தில், அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. கடந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமீபத்தில், தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசை சரமாரியாக குற்றஞ்

சாட்டி வரும் நாயுடு, வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார்.காங்., தலைவர் ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேசியவாத, காங்., தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான அணிஅமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநில அரசிடம் முன் கூட்டியே தெரிவிக்காமல், வழக்கு விசாரணை தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் அந்த மாநிலத்திற்குள் நுழைய தடை விதித்து, முதல்வர் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, ஆந்திர மாநில அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக, நாட்டின் எந்த பகுதியி லும் நுழைந்து, சோதனையிடவும், வழக்குகளை விசாரிக்கவும், சி.பி.ஐ.,க்கு அதிகாரம் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள,மத்திய அரசு அலுவலகங்களில் நுழைந்து சோதனையிடவும், வழக்கு குறித்து விசாரிக்கவும், சி.பி.ஐ., அதிகாரிகள், அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

Advertisement

எனினும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத, மாநில அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், சி.பி.ஐ., சோதனையிட, சம்பந்தபட்ட மாநில அரசிடம் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.பொதுவாக, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட, ஆட்சேபம் இல்லை என, மாநில அரசுகள் தெரிவித்திருக்கும்.

இந்நிலையில், ஆந்திர அரசு இந்த நிலையை திரும்ப பெற்றுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறெங்கு சோதனை நடத்த வேண்டுமென்றாலும், சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
17-நவ-201820:19:13 IST Report Abuse

Rajavelபிஜேபி ஆட்சியில் சிபிஐ யின் யோகித்ததையை பார்த்து நாடே சிரிக்கிறது. சிபிஐ பிஜேபியின் கைகூலியாகிவிட்டது. தமிழ்நாட்டில் எத்தனை சிபிஐ சோதனை நடந்தது ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? பிஜேபிக்கு அடியாள் கூட்டமாக செயல்பட்டால் இதுதான் நிலைமை

Rate this:
Suga Devan - Theni,இந்தியா
17-நவ-201818:35:25 IST Report Abuse

Suga Devanகளவாணிகளோட கூட்டு வெச்ச பெறகு,.... மம்பட்டி கால்வாக்குலத்தான போகும்.....

Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-நவ-201818:03:10 IST Report Abuse

Subramanian Arunachalamசபாஷ் சரியான முடிவு . மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் நுழைவதற்கும் தடை விதியுங்கள். நீங்கள் ஆந்திர மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து ஆந்திராவை தனி நாடாக அறிவிப்பதாக இருந்தால் எங்கள் ஸ்டாலின் உங்களுக்கு முழு ஆதரவு தருவார் . அவரோடு பதினைந்து தமிழக கட்சிகளும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் அந்த பதினைந்து கட்சிகளில் மொத்தம் நூறு உறுப்பினர்கள் உள்ளனர்

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X